1.Freemake Video Converter
மற்ற எந்த இலவச வீடியோ கன்வெர்ட்டர் மென்பொருள்களும் செய்யாத பல வேலைகளை இந்த மென்பொருள் செய்கிறது. இந்த மென்பொருள் செய்யும் அற்புதமான பணிகள் கீழே:
1. 200 க்கு மேற்பட்ட வீடியோ வகைகளை ஆதரிக்கிறது. AVI, MP4, MKV, WMV, MPG, 3GP, 3G2, SWF, FLV, TOD, AVCHD, MOV, DV, RM, QT, TS, MTS, etc..
ஒளிப்படங்கள், ஆடியோ கோப்புகள் இவற்றை வைத்தும் வீடியோவாக கன்வெர்ட் செய்ய உதவுகிறது.
2. ஆன்லைன் வீடியோக்களை நேரடியாக கன்வெர்ட் செய்யலாம். இதில் வீடியோ முகவரியை உள்ளிட்டால் போதும்.
3. AVI, WMV, MP4, MPEG, MKV, FLV, SWF, 3gp போன்ற வகைகளிலும் பிளாஷ் வீடியோ கோப்பாகவும் மாற்றிக் கொள்ளலாம்.
4. ஆப்பிள், சோனி, ஆண்ட்ராய்டு போன்ற கருவிகளுக்கு ஏற்ப வீடியோக்களைத் தரப்படுத்திக் கொள்ளலாம். (Optimize for sony, apple, android)
5. CUDA மற்றும் DXVA என்ற தொழில்நுட்பம் மூலம் வீடியோக்களை விரைவாக கன்வெர்ட் செய்யும் திறனுடையது.
6.வீடியோக்களை புளுரே (Blue ray) வாக மாற்றலாம்.
7.வீடியோக்களில் Subtitles சேர்க்கலாம்.
8.ஒளிப்படங்கள், பாடல்களை நேரடியாக யூடியுபில் ஏற்றலாம்.
9.ஒளிப்படங்கள் மற்றும் ஆடியோவை வைத்து ஸ்லைட் ஷோ உருவாக்கலாம்.
10. வீடியோக்களை வெட்டலாம், இணைக்கலாம். Rotate செய்யலாம், Aspect Ratio வை மாற்றலாம்.
இவ்வளவு வேலைகளையும் ஒரே மென்பொருளில் எளிமையாகவும் விரைவாகவும் செய்யலாம். பயன்படுத்திப் பார்க்க வேண்டிய மென்பொருள்.
தரவிறக்கச்சுட்டி: http://www.freemake.com/free_video_converter/
2.Freemake Audio Converter
இந்த நிறுவனத்தின் மற்றொரு படைப்பான இந்த மென்பொருளின் மூலம் நம்மிடம் இருக்கும் ஆடியோ கோப்பை Mp3 பிளேயர், iPod, iPhone, iPad போன்ற கருவிகளில் பாடக்கூடியவாறு மாற்றலாம். இதில் Mp3, wmv, wma, flac, aac போன்ற வடிவங்களைப் பயன்படுத்தலாம். இந்த மென்பொருளின் மூலம் ஆடியோ வகைகளை மாற்றுவது மட்டுமின்றி பல ஆடியோ கோப்புகளை ஒன்றாகச் சேர்த்து இணைக்க முடியும் (Merge Audio files) என்பது இதன் சிறப்பான விசயமாகும்.
மேலும் பல்வேறு வகையான DVD, H.264, AVI, MPEG, MP4, MKV, DIVX, MOV, WMV, VOB, 3GP, RM, QT, FLV, etc… வீடியோ கோப்புகளிலிருந்து ஆடியோவை மட்டும் பிரித்தெடுக்கும் வசதியும் கொண்டிருக்கிறது. இதிலிருந்து Mp3 கோப்புகளை iTunes க்கு அனுப்பிக் கொள்ள முடியும். ஆடியோவை சிடி/டிவிடியில் எழுதும் வசதி விரைவில் வரும் என்று நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. இந்த இரண்டு மென்பொருள்களின் பயனர் இடைமுகம் (User interface) பயன்படுத்த எளிமையாகவும் அழகாகவும் இருக்கிறது.
தரவிறக்கச்சுட்டி: http://www.freemake.com/free_audio_converter/
Tweet | |||
ubayoagamana thagaval , nandri
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு.
ReplyDeleteபயனுள்ள பதிவு...பகிர்வுக்கு நன்றி.. வாழ்த்துக்கள்
ReplyDeleteதேவையான பதிவு .
ReplyDeleteநானும் பயன் பெரும் நல்ல பல தகவல்கள்
நன்றி !!
வாழ்த்துக்கள் .
அன்புடன்
யானைக்குட்டி
உங்கள் பார்வைக்கு ....
பதிவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது' அரசு அதிர்ச்சி !!!
பயனுள்ள தகவல்...............நன்றி
ReplyDeleteI am looking for a software that can give video background to skype
ReplyDeleteAny idea?
Thanks
The information is very much needed and I was looking for the one like this. I have downloaded and working good. keep posting useful articles like this.
ReplyDeleteஅருமையான மென்பொருள்கள் பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteVery useful post !!
ReplyDeleteThanks !!!
பயனுள்ள பதிவு,பகிர்வுக்கு நன்றி.
ReplyDeleteScreen Lock - இந்த மென்பொருள் என்னால் உருவாக்கப்பட்டது
Very useful post !!
ReplyDeleteThanks !!
Very useful software. . .
ReplyDeleteI am new
ReplyDelete