May 25, 2012

பொன்மலர் பக்கம் - திரும்பக் கிடைத்த எனது வலைப்பூ

அன்பு வலைப்பூ நண்பர்களுக்கு,

முன்கதை: இரண்டு மாதங்களுக்கு முன்னர் இந்த என் பிளாக் வித்தியாசமான முறையில் திருட்டுப் போய் விட்டது. இத்தனை நாளாக பெரிதாக ஏமாற்றம் நடந்து விடாமல் பாதுகாப்பாக இருந்தும் ஒரு ஐந்து நிமிடத்தில் என் பிளாக்கை பறிகொடுத்தேன். இதனை ஏன் எழுதுகின்றேன் என்றால் இந்த விசயம் உங்களுக்கும் எச்சரிக்கையாக இருக்கட்டுமே என்றே!


இணையத்தில் எத்தனையோ நண்பர்களைச் சந்திக்கிறோம்; பழகுகிறோம். ஆனால் எல்லோரையும் அவர்கள் சொல்லும் எல்லாவற்றையும் நம்புவது ஆபத்தானது. கூடவே இருந்த ஒன்று தொலையும் போது ஏமாற்றத்தின் வலி அதிகம். இதற்கெல்லாம் வாய்ப்பு கொடுக்காமல் தான் நானும் இருந்தேன்.

முகுந்த் என்றோரு ஆன்லைனில் எனக்கு பழக்கமான நபர்; NewBloggingTipz என்ற ஆங்கில் தொழில்நுட்ப தளமொன்றில் எழுதி வருபவர். இரண்டு மாதங்களுக்கு முன் இவருடைய ஜிமெயில் மற்றும் பிளாக்கர் கணக்கை ஒருவன் ஹாக் செய்து திருடி விட்டான். முகுந்தின் ஜிமெயிலில் நுழைந்த அந்த திருடன் முகுந்தின் பெயரில் என்னிடம் சாட்டிங்கில் வந்தான். உங்கள் தளத்தின் டிராபிக்கினை பல மடங்கு பெருக்கித் தருகிறேன். அதனால் ஆட்சென்சிலும் நல்ல வருவாய் வரும் என்று சொன்னான்.

நான் என்ன செய்ய என்று கேட்டேன். பிளாக்கின் Admin உரிமை வசதியில் தன்னையும் சேர்க்கும்படி சொன்னான். சரி முகுந்த் தெரிந்த நண்பர் தானே என்று நானும் அவரை Blog Admin ஆகச் சேர்த்தேன். மறு நிமிடம் எனது பிளாக் என்னுடைய Blogger Dashboard இல் காணவில்லை. பதறிப்போய் நான் என் பிளாக் எங்கே என்று கேட்டேன். அதற்கு அவன் கூகிளே உங்கள் பிளாக்கை எடுத்துக் கொண்டு விட்டது என்று சொல்லி விட்டு ’எஸ்கேப்’ ஆகிவிட்டான்.

எனது பிளாக்கின் அட்மின் உரிமையைப் பெற்றதும் அவனும் என்னுடைய பிளாக்கின் ஓனராகி விடுவான். பிறகு எனது அட்மின் உரிமையை எளிதாக Delete செய்து விட்டான். பின்னர் எனது பிளாக்கின் டிசைனை மாற்றி அவனின் ஆட்சென்ஸ் போடப்பட்டிருந்தது. மனம் கொள்ளாமல் பலமுறை மின்னஞ்சல் அனுப்பிப் பார்த்தேன்.பதிலே இல்லை. அடுத்த இரண்டாவது நாள் முகுந்தின் பேஸ்புக்கில் தொடர்பு கொள்ளலாம் என்று பார்த்தால் ஒரு அதிர்ச்சியான செய்தி காத்திருந்தது!
எனது ஜிமெயில்/பிளாக் ஹாக் செய்யப்பட்டு விட்டதாகவும் எந்த தொடர்பும் வைத்துக் கொள்ள வேண்டாம் என்று முகுந்த் போட்டிருந்தார். பிறகு தான் புரிந்தது. என்னுடன் சாட்டிங்கில் வந்ததும் பேசியதும் வேறொருவன் என்று. முகுந்தின் ஜிமெயில் ஐடியில் என்னிடம் பேசி நயமாக எனது பிளாக்கைத் திருடி விட்டான். மூன்று வருடங்களாக எழுதி வந்த பிளாக் போனதின் ஏமாற்றம் என்னையே நொந்து கொண்டேன்.

ஜீமெயில் கணக்கைத் திருடியிருந்தாலும் கூகிளிடம் போராடிப் பார்க்கலாம். ஜீமெயில் கணக்குப் போனது முகுந்த்க்கு மட்டுமே. எனக்கோ ஜிமெயில் கணக்கு என்னிடமே இருக்கிறது. இந்த பிளாக்கை பயன்படுத்தும் உரிமை மட்டும் என்னிடம் இல்லை. வலைப்பூவினை மீட்க எந்த வழியும் இருப்பதாக தெரியாததால் மனதைத் தேற்றிக் கொண்டு புதிய பிளாக் ஒன்றை நேற்று தொடங்கி இந்தக் கதையைப் போட்டிருந்தேன்.

UPDATE:

இதைப் படித்தானோ என்னவோ நேற்றிரவு எனக்கு மெயில் அனுப்பியிருந்தான். உங்கள் பிளாக்கைத் தருகிறேன். ஆனால் நீங்கள் என்னை எங்கேயும் புகார் செய்யக் கூடாது என்று சொல்லியிருந்தான். கூடவே எனது பிளாக்கின் அட்மின் உரிமையின்றி வலைப்பூவின் Author உரிமையை மட்டும் கொடுத்து விட்டான். சிறிது நேரத்தில் என்னிடம் சாட்டிங்கில் வந்தான்.

நான் ஆட்சென்ஸ் பயன்படுத்துகிறேன். நீங்கள் புகார் சொன்னால் எனது ஆட்சென்ஸ் கணக்கு முடக்கப்பட்டு விடும். ஏற்கனவே Doubleclick Ads, Ad.fly விளம்பர கணக்குகளை நீங்கள் தான் புகார் செய்து முடக்கினீர்கள் அதனால் எப்படி உங்களை நம்புவது என்று கேட்டான். ( இந்த நேரத்தில் பிளாக்கர் நண்பன் அப்துல் பசித்துக்கு நன்றி சொல்ல வேண்டும். அவர் தான் மேற்கண்ட விளம்பர தளங்களில் அவனைப் பற்றிய புகார் கொடுத்தார்)

பரவாயில்லை நான் இனி எதும் புகார் செய்ய மாட்டேன். நம்பினால் கொடு இல்லாவிட்டால் நீயே வைத்துக் கொள் என்று விட்டேன். நீங்கள் வேறு எங்கெங்கெ புகார் கொடுத்தீர்கள் என்று மறுபடியும் கேட்டான். நான் எங்கேயும் புகார் கொடுக்க வில்லை என்றேன். சரி நான் உங்களை நம்புகிறேன் என்று பிளாக்கின் Admin உரிமையைக் கொடுத்தான். உடனடியாக அவன் பெயரை அட்மின் பகுதியிலிருந்து நீக்கிவிட்டு நிம்மதியடைந்தேன். அவன் உடனே என்னை உடனே நீக்கி விட்டீர்களே என்று வருத்தமடைந்தான். ( பின்ன ஏற்கனவே பட்டது போதாதா)

பிறகு கேட்டான் பாருங்கள் ஒரு கேள்வி: நாம் நண்பர்களாக இருக்கலாமா? நானும் முகுந்திற்கு உதவி செய்யலாம் என்று சரி என்று சொன்னேன். முகுந்தின் பிளாக்கைத் தருமாறு கேட்டேன். அது முடியாது, அதில் நான் எழுதி சம்பாதிக்க வேண்டும் என்றான். சரி அவனுடைய ஜிமெயில் கணக்கையாவது கொடுத்து விடு, அதில் முகுந்தின் முக்கிய தகவல்கள் இருக்கின்றன என்றேன். இன்று பதில் சொல்வதாக இருக்கிறான்.

இவன் முகுந்தின் Newbloggingtipz.org என்ற திருடப்பட்ட தளத்தில் இவனது புரொபைல் மற்றும் ஆட்சென்ஸ் போட்டிருக்கிறான். என்ன செய்யலாம் இவனை?

இன்னொரு வலைப்பூவில் இந்த விசயத்தைப் போட்டதும் என்னிடம் சாட்டிங்கில் வந்திருக்கிறான். முன்னாடியே இப்படி எழுதியிருந்தால் சீக்கிரம் எனது பிளாக் கிடைத்திருக்கும் என்று தோன்றியது. எனக்கு நம்பிக்கையூட்டிய அத்தனை நண்பர்களுக்கும் எனது நன்றிகள்.

50 comments:

 1. எப்படியெல்லாம் யோசிச்சு திருடறானுங்க...!! அவன் நல்லத் திருடனாக இருந்தால் முகுந்தின் ஜிமெயில் கணக்கையும் கொடுத்திருக்க வேண்டும்.. பார்ப்போம் என்ன நடக்கிறதென...!

  எப்படியோ வலைப்பூ மீளப்பெற்றுவிட்டீர்கள். மகழ்ச்சி.!!!

  ReplyDelete
 2. மீண்டும் புதுமலர் பூகட்டும் பொன்மலர் பக்கத்தில் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 3. // அவன் உடனே என்னை உடனே நீக்கி விட்டீர்களே என்று வருத்தமடைந்தான். ( பின்ன ஏற்கனவே பட்டது போதாதா) //

  ஹா ஹா ஹா

  நல்லவேளை அவன் விளம்பரத்துக்காக அழிக்காமல் வைத்து இருந்தான் அந்த வகையில் மனதை தேற்றிக்கொள்ள வேண்டியது தான்.

  //முகுந்தின் பிளாக்கைத் தருமாறு கேட்டேன். அது முடியாது, அதில் நான் எழுதி சம்பாதிக்க வேண்டும் என்றான்//

  :-)) என்னமோ இவர் கஷ்டப்பட்டு உருவாக்கி செய்தது மாதிரி சொல்கிறார்.

  இனி சொல்லவே வேண்டாம்.. யாருக்கும் மறந்து கூட கொடுக்க மாட்டீங்க :-) முடிந்தால் முகுந்த் ஜிமெயில் ஐ டியை மீட்க்கப்பாருங்கள்.. பாவம் அதில் அவர் பல விஷயங்கள் வைத்து இருப்பார். முகுந்த் எப்படி தன்னுடைய ஜிமெயில் கணக்கை இழந்தார் என்பது பற்றி எதுவும் கூறினாரா! என்ன தான் எச்சரிக்கையாக இருந்தாலும் ஏமாந்து விடுகிறோம்.

  அப்துல் பசித் செய்தது எக்சலன்ட் ஐடியா.

  ReplyDelete
 4. தங்கள் பிளாக் கிடைத்ததில் மகிழ்ச்சி.

  ReplyDelete
 5. என்னெல்லாம் நடக்குது?

  எப்படியோ உங்க பிளாக் திரும்ப கிடைத்ததில் மகிழ்ச்சி தான்.

  ReplyDelete
 6. தங்கள் பிளாக் திரும்ப கிடைத்ததில் உங்களை பார்த்து எங்கள் தளங்களை வடிவமைக்கும் எங்களை போன்றோருக்கு மிக்க மகிழ்ச்சி..

  ReplyDelete
 7. திரும்ப கிடைத்ததில் மகிழ்ச்சி!

  நீங்கள் மட்டும் ''சரி'' என்று சொல்லுங்கள் இப்பொழுதே சைபர் கிரைமில் சொல்லி இரண்டில் ஒன்று பார்த்துவிடலாம். நமக்கு ஞானத்தகப்பனின் ஆட்ச்ச்யில் மட்டுமல்லா அம்மையாரின் ஆட்ச்சியிலும் ஆட்கள் இருக்கிறார்கள்

  ReplyDelete
 8. தங்கள் பிளாக் கிடைத்ததில் எங்களுக்கும் மிக்க மகிழ்ச்சி.
  தொடரட்டும் தங்கள் சேவை...!!!

  ReplyDelete
 9. மீண்டும் தங்கள் பிளாக் தங்களுக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி.
  புதிய மலர்பூவை ஆவலுடன்எதிர்பார்கிறோம்...

  ReplyDelete
 10. மிகவும் மகிழ்ச்சி சகோ.

  அட்மின் அக்கௌன்ட் கொடுத்த காரணம் தான் இத்தகைய பிரச்சினைகளுக்கு காரணம். இனி பாதுகாப்பாக இருக்கவும்.

  ReplyDelete
 11. :) :) :)

  தங்கள் ப்ளாக் திரும்பவும் கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி சகோ.!

  ReplyDelete
 12. தங்களின் உதவிக்கும் நன்றி சகோ அப்துல் பாசித்.

  ReplyDelete
 13. வாழ்த்துக்கள் சகோதரி..,

  ReplyDelete
 14. உங்களின் நம்பிக்கை வீண் போகவில்லை. மிகுந்த மகிழ்ச்சி சகோதரி!
  எச்சரிக்கையுடன் விழிப்புடன் உத்வேகத்துடன் தொடருங்கள்!
  வாழ்த்துக்கள்!

  ReplyDelete
 15. எப்படியெல்லாம் ஏமாத்தறர்ங்க பாவிங்க. எங்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை மணி. ப்ளாக்கர் நண்பன் அனைவருக்கும நண்பனே என்பதில் மிக்க மகிழ்ச்சி. உங்கள் தளம் திரும்பக் கிடைத்து சந்திக்க முடிந்ததிலும் மகிழ்ச்சி.

  ReplyDelete
 16. ////உங்கள் தளத்தின் டிராபிக்கினை பல மடங்கு பெருக்கித் தருகிறேன். அதனால் ஆட்சென்சிலும் நல்ல வருவாய் வரும் என்று சொன்னான்.///

  ஆசை யாரை விட்டது. உங்கள் பிளாக் பறிபோனதற்கு உங்கள் ஆசை தானே காரணம். எப்படியோ மீண்டும் தங்கள் பிளாக் தங்களுக்கு கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி. உஙளின் பணி தொடர என் வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 17. தொழில்நுட்பம் தெரிந்தவர்களுக்கே அல்வா கொடுக்கிறார்களே சர்வேசா! நனெல்லாம் எம்மாத்திரம்?

  எப்படியோ உங்கள் தளம் மீளக்கிடைத்தது மகிழ்ச்சியே.

  ReplyDelete
 18. பொன்மலருக்கு வாழ்த்துக்கள் அத்துடன் உதவிய பதிவர்களுக்கும் வாழ்த்துக்கள் நன்றி அப்துல் பாசித்

  ReplyDelete
 19. நண்பர் "அப்துல் பாசித்" சிறந்த மனிதர் உதவி கேட்டு எப்போது மின்னஞ்சல் செய்தாலும் உடனடியாக தன்னாலான உதவியை செய்கிறார். நல்ல உள்ளம் போற்றப்பட வேண்டும்.

  தங்கள் தளம், தங்களுக்கே திரும்ப கிடைத்தது மகிழ்ச்சி, தொடர்ந்து தொழில்நுட்ப பதிவுகளை எழுதி எங்களை செதுங்குங்கள் ...! நன்றி ..!

  ReplyDelete
 20. இதெல்லாம் என்னங்க, சப்பை மேட்டரு. எங்கூர்ல கிணத்தையே களவாடற பசங்க எல்லாம் இருக்காங்க.

  ReplyDelete
 21. All the Best Ponmalar! God never gives up people gracious people.

  ReplyDelete
 22. தங்கள் ப்ளாக் திரும்ப கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி,ஆனால் சில நாட்களுக்கு முன்னர் நான் உங்கள் ப்ளாக்க்கிற்கு வந்தபோது blogger profile இல் பிரபல தமிழ் பதிவர் பெயர் ப்ளாக் அட்மின் ஆக இருந்தார் நீங்கள் பார்த்திர்களா?

  ReplyDelete
 23. வாழ்த்துக்கள் சகோ ....இப்போது திருப்தியாக உள்ளது

  ReplyDelete
 24. சிறு யோசனை:
  முகுந்த் அவர்களை ஜிமெயில் சென்று "I cannot access my account" என்பதைச் சொடுக்கி அதில் My Account is Compromised என்பதைச் சொடுக்க சொல்லுங்கள்..
  மேலும் தகவல்களுக்கு: http://www.aalunga.in/2011/09/blog-post_24.html

  ReplyDelete
 25. நண்பி தங்கள் பதிவுகளை அந்த நாதாரி நீக்கவில்லையா? தங்கள் பதிவுகள் யாழ்ப்பாணத்தில் இருந்து வெளிவரும் மாத கணிணி சஞ்சிகைகளில் கூட உங்கள் படம் பெயருடன் வெளிவந்தது.நானும் அதில் தொடராக எழுதி வந்தேன்.உங்கள் வலைப்பூவை .கொம் க்கு உடனடியாக மாற்றுங்கள்.உங்கள் கட்டுரை கூகிள்சிறி திரட்டியில் இணைத்துள்ளேன். http://www.googlesri.com/

  ReplyDelete
 26. உங்களின் வலைப்பூ, மீண்டு(ம்) கிடைத்ததற்கு சந்தோஷம் சகோதரி!.

  ReplyDelete
 27. காணாமல் போன குழந்தை கிடைக்கும்போது தாய்க்கு ஏற்படும் மகிழ்ச்சியை அடைந்திருப்பீர்கள். வாழ்த்துகள்

  ReplyDelete
 28. மிக்க மகிழ்ச்சி உங்கள் தளத்தை திரும்ப பெற்றதில்
  உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 29. அதிக மகிழ்ச்சி உங்கள் தளத்தை திரும்ப பெற்றதில் பிளாக்கர் அனைவருக்கும் பயனுள்ள தகவலை தந்தீர்கள் இனி எச்சரிக்கையாக இருப்போம் ...நன்றி

  ReplyDelete
 30. தங்கள் ப்ளாக் திரும்ப கிடைத்ததில் மிக்க மகிழ்ச்சி தொடர்ந்து தொழில்நுட்ப பதிவுகளை எழுதி எங்களை செதுங்குங்கள் .எச்சரிக்கையுடன் விழிப்புடன் உத்வேகத்துடன் தொடருங்கள்!

  ReplyDelete
 31. தங்கள் தளம், தங்களுக்கே திரும்ப கிடைத்தது மகிழ்ச்சி, தொடர்ந்து தொழில்நுட்ப பதிவுகளை எழுதி எங்களை செதுங்குங்கள் .

  ReplyDelete
 32. வாழ்த்துக்கள் அக்கா..உங்கள் சேவை என்றும் நம் தமிழ் பதிவர்களுக்கு தேவை..தொடரட்டும் உங்கள் பணி...வாழ்த்துக்கள்..
  உதவி செய்யும் மனநிலை எல்லோருக்கும் வருவதில்லை அதைதாண்டி உங்களுக்கு உதவி செய்த என் நண்பர் அப்துல் பாசித்க்கும் நன்றிகள்..

  ReplyDelete
 33. thank god...good information ponmalars. please tell me how to save my blog

  ReplyDelete
 34. மீண்டும் பூத்துக் குலுங்கட்டும் ”பொன்மலர்”

  ReplyDelete
 35. வாழ்த்துக்கள் சகோதரி..,

  ReplyDelete
 36. உங்கள் வலைப்பூ களவாடப் பட்டதென்கிற அதிர்ச்சித் தகவலை தெரிந்து கொள்ளும் முன்னர் திரும்பக் கிடைத்த இனிப்பான செய்தியை அறிந்து கொண்டதில் மகிழ்ச்சியடைகிறேன். விழிப்புணர்வு தந்ததற்கு நன்றி.

  ReplyDelete
 37. மீண்டும் மலர்ந்து மணம்வீசட்டும் "பொன்மலர்".வாழ்த்துக்கள் சகோதரி
  வாழ்க வளமுடன்
  வேலன்.

  ReplyDelete
 38. வாழ்த்துக்கள் சகோதரி..,

  ReplyDelete
 39. வாழ்த்துகள் சகோதரி. உண்மை என்றுமே அழிவதில்லை

  ReplyDelete
 40. you are very much fortunate, god bless you more and more and lets contiune your blog without any disturbance in future also.

  regards.

  ReplyDelete
 41. வாழத்துக்கள் சகோதரி. நீங்கள் பட்டிருந்த வேதனைகளை உணரமுடிந்தது. தடையின்றி தொடரட்டும் தங்கள் சேவை.

  ReplyDelete
 42. மிக்க மகிழ்ச்சி உங்கள் தளத்தை திரும்ப பெற்றதில்
  உங்கள் பணி தொடர வாழ்த்துக்கள்

  ReplyDelete
 43. எப்பிடியெல்லாம் யோசிக்கிறாங்க? அவ்வ்வ்

  ReplyDelete
 44. அபுதுல் பாசிதின் ப்ளாக் தொடங்குவது எப்படி தொடர் படித்து விட்டு
  நேற்று தான் ஒரு ப்ளாக் தொடங்கினேன். உங்களுடைய இந்த பதிவை
  படித்துவிட்டு எனக்கு ஒரே ஷாக். இப்படியும் நடக்குமா? எங்களை
  போன்றவர்க்கு இது ஒரு எச்சரிக்கை! மீண்டும் உங்களுக்கு வலைபதிவு
  கிடைத்ததில் மகிழ்ச்சி.நான் உங்களுடைய பேன்.இது தான் என்னுடைய
  முதல் பின்னூட்டம்.

  ReplyDelete
 45. ungal blogger mikavum payan ulla onru ungal sevai eppothum thodara vaalththukkal

  ReplyDelete