கூகிளின் இணைய சேவையான பிளாக்கர் தளம் மூலம் பலரும் வலைப்பதிவுகள் எழுதி வருகிறார்கள். பிளாக்கரில் வலைப்பதிவுகளின் முகவரியானது .Com என்று முடியும். இன்று டொமைனை .in என்று முடியுமாறு மாற்றிவிட்டது. பிளாக்கர்களுக்கு இன்று காலையில் அதிர்ச்சியே எற்பட்டது. முகவரி மாற்றத்தால் முக்கிய பெருமையான (?) அலெக்சா ரேங்க் குறைந்து பாதாளத்திற்கு போய்விட்டது. பலருக்கு Followers Widget ஆன பின் தொடர்பவர்களின் பட்டியல் காணாமல் போனது. தமிழ்மணத்தில் இணைக்க முடியவில்லை. இண்ட்லியில் இணைத்தால் பரிந்துரை பட்டியலில் வராமல் சாதாரண பதிவாக வெளியிடப்பட்டது. கூகிள் பிளாக்கரை இவ்வாறு மாற்ற என்ன காரணம்?
பிளாக்கர் தளத்தின் முகவரியை அந்தந்த நாடுகளில் இருந்து பார்ப்பவர்களுக்கு ஏற்றவாறு மாற்றி Redirect செய்கிறது. உதாரணமாக இந்தியாவிலிருந்து பார்த்தால் .in என்றும் ஆஸ்திரேலியாவிலிருந்து பார்த்தால் .com.au என்று முடியும் படியாகவும் தெரியும். இதன் காரணம் பிளாக்கர் தளங்களை கூகிள் தணிக்கை செய்யப்போகிறது. முக்கியமாக ஒவ்வொரு நாட்டின் சட்டதிட்டத்தின் படியாக தேவையில்லாத கருத்துகள் எனில் நாடு வாரியாக பிரித்தெடுத்து நீக்கி விடலாம். பிரச்சினையில்லாத மற்ற நாட்டினர் பார்த்துக் கொள்ளலாம்.
இதனை ccTLD (Country code top level domain ) என்று சொல்கிறது. மேலும் நாம் வலைப்பூவை குறிப்பிட்ட நாட்டிற்கேற்ப பார்த்துக் கொள்ள முடியும். குறிப்பிட்ட நாட்டின் முகவரிக்குப் பின் /ncr என்று கொடுப்பதன் மூலம் இவ்வாறு செய்ய முடியும். இது No Country Redirect என்று அழைக்கப் படுகிறது.
உதாரணமாக எனது வலைப்பூவை ஆஸ்திரேலிய நாட்டின் படி பார்க்க http://ponmalars.blogspot.com.au/ncr
குறிப்பிட்ட நாட்டைச் சாராமல் வலைப்பூவின் ஒரிஜினல் அல்லது இயல்பான வடிவத்தைப் பார்க்க முகவரியில் .com/ncr என்று கொடுப்பதன் மூலம் பார்க்க முடியும். உதாரணமாக http://ponmalars.blogspot.com/ncr
இதுவும் குறிப்பிட்ட நேரத்திற்கு (Session) மட்டுமே செயல்படும். Domain வைத்திருப்பவர்களுக்கு இப்போது எதும் பிரச்சினையில்லை. இதனால் தேடுதலில் உங்கள் வலைப்பூவிற்கு எந்த மாற்றமும் இல்லை. கூகிளின் விளக்கம் இங்கே பார்க்க http://support.google.com/blogger/bin/answer.py?hl=en&answer=2402711
இதனால் ஏற்படும் சிக்கல்கள்:
1. அலெக்சா ரேங்க் :
பல நாடுகளில் இருந்து வலைத்தளத்தினைப் பார்க்கும் போது பல முகவரிகளில் தெரிவதால் அலெக்சா ரேங்க் என்பது தீர்மானிக்க முடியாத விசயமாக இருக்கும். கூகிள் அலெக்சா ரேங்கினை முக்கியமாக எடுத்துக் கொள்வதில்லை என்பது தனி விசயம்.
2. Followers Widget
இதில் பிளாக்கர் தளத்தில் உள்ள Add widget-> Followers மூலமாக வைத்திருப்பவர்களுக்கு எந்த பிரச்சினையுமில்லை. கூகிளின் Friend Connect சேவை மூலம் வைத்திருப்பவர்களுக்கு We're sorry... This gadget is configured incorrectly. என்ற பிழைச்செய்தி காணப்படும். இதனால் பிளாக்கர் Design-> Page Layout-> Add Gadget கொடுத்து Followers Widget இன் மூலம் சேர்த்துக் கொள்ளலாம். இந்த முறை மட்டுமே எல்லா நாடுகளிலும் வேலை செய்யும்.
3. இண்ட்லியில் பதிவுகள் பரிந்துரையில் வராத பிரச்சினை.
இண்ட்லி தற்போது முக்கிய வலைப்பூக்களைப் பரிந்துரைப் பட்டியலில் வைத்திருக்கிறது. அதனால் பதிவுகளை இணைக்கும் போது அந்த பழைய முகவரி இருந்தால் மட்டுமே பரிந்துரையில் வரும். இப்போது மாறி விட்டதால் சின்ன மாற்றம் செய்வோம். பதிவிலிருந்த படியே புதிய பதிவை இணைக்காமல் இண்ட்லி தளத்தில் சென்று இணைக்க என்பதைக் கிளிக் செய்யவும். நமது பதிவின் முகவரியை இட்டு அதில் .in என்பதை .com என்று மாற்றிச் சேர்த்தால் சரியாக பரிந்துரைப் பட்டியலில் வந்துவிடும்.
4. தமிழ்மணத்தில் இணைக்கும் போது.
தமிழ்மணத்தில் புதிய பதிவை இணைக்கும் போது கீழ்க்கண்டவாறு உங்கள் வலைப்பூ எங்கள் பட்டியலில் இல்லை என்று வரும். இதிலும் சின்ன மாற்றம் செய்ய வேண்டும். இந்த பிழைச்செய்தி வந்திருக்கும் விண்டோவில் மேலே இருக்கும் இணைய முகவரிக்குச் செல்லவும். (URL Address) . தமிழ்மணத்தில் இணைக்கும் போது முகவரியானது இப்படி இருக்கும்.
http://tamilmanam.net/blog_home_update.php?url=http://ponmalars.blogspot.in&posturl=http://ponmalars.blogspot.in/2012/01/railway-ticket-booking-websites.html
இந்த இணைப்பில் நமது வலைப்பூவின் முகவரியில் இருக்கும் .in என்பதை .com என்று மாற்றி விட்டு Refresh அல்லது Enter தட்டவும். இப்போது உடனே தமிழ்மணம் சேர்த்து விடும். இந்த முறையில் உங்கள் பதிவுகளைச் சேர்க்கவே முடியும். ஆனால் ஓட்டுப்பட்டை வேலை செய்யாது. இதனைத் தற்காலிகமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இந்த முகவரி மாற்ற பிரச்சினையால் திரட்டிகளில் இணைப்பது பிரச்சினைக்குரிய விசயமே.
Update :
தமிழ்மணம் தளத்தில் பதிவுகள் சேர்ப்பது பற்றிய அவர்கள் வெளியிட்டுள்ள
கட்டுரை. http://blog.thamizmanam.com/archives/387
மேலும் சில நண்பர்களின் பதிவுகள்:
1.தணிக்கைக்கு தயாரானது ப்ளாக்கர் - பிளாக்கர் நண்பன்
2.பிளாக்கர் வலைபூக்களில் கூகுளின் அதிரடி மாற்றம் - அலெக்சா ரேங்க் காலி - வந்தே மாதரம்
1.தணிக்கைக்கு தயாரானது ப்ளாக்கர் - பிளாக்கர் நண்பன்
2.பிளாக்கர் வலைபூக்களில் கூகுளின் அதிரடி மாற்றம் - அலெக்சா ரேங்க் காலி - வந்தே மாதரம்
Tweet | |||
தெளிவான விளக்கங்கள்...
ReplyDeleteஇன்னும் என்ன மாற்றம் வருகிறது பொருத்திருந்து பார்ப்போம்...
தகவலுக்கு நன்றி
தமிழ்மணத்தில் நீங்கள் சொன்னது போல் இணைத்தால் இணைத்துக்கொள்கிறது ஆனால் ஓட்டுப்பட்டை வரவில்லை
ReplyDeleteகவிதை வீதி... // சௌந்தர் //,
ReplyDeleteதமிழ்மணத்தில் நீங்கள் சொன்னது போல் இணைத்தால் இணைத்துக்கொள்கிறது ஆனால் ஓட்டுப்பட்டை வரவில்லை //
அதைத் தான் சொன்னேன். தமிழ்மணத்தில் நமது வலைத்தள முகவரி இருக்காதல்லவா? அதனால் ஓட்டுப்பட்டையும் செயல்படாது. பதிவை வேணால் இணைக்கலாம். பதிவுக்கு வரும் போது தானே கூகிள் தானாக .in க்கு மாற்றி விடுகிறது.
பலருக்கு பயனுள்ள தகவல் நன்றி
ReplyDeleteஎனக்கு எந்த பிரச்னையும் இல்லாதது போலதான் உள்ளது
ReplyDeleteஎன் தளத்தில் இணைந்திருக்கும் நண்பர்களுக்கு பிளாக்கர் டாஷ்போர்டில் என் பதிவுகள் தெரிய வில்லையெனில் சொல்லவும்.
ReplyDeleteபொன்மலர் நட்சத்திர பதிவர் ஆனதிற்கு வாழ்த்துகள்.
ReplyDeleteகொஞ்ச நாள் முன்பு உங்கள் தளத்தை உங்கள் facebook fan page ல் இணைத்தால் பிரச்சனை வருகிறது என்று கூறி இருந்தீர்கள். தற்போது .in மூலம் வரும் முகவரியை இணைத்துப்பாருங்கள் வேலை செய்கிறதா என்று.
சூப்பர் கிரி. இதை நான் யோசிக்கவே இல்லை. நன்றி
ReplyDeleteமறுபடியும் பழைய மாதிரியே Spam என்று சொல்கிறது
ReplyDeleteநன்றி சகோ காலையில் முதன்முதலாக வலைசரத்தில் பதிவிட்டு இணைத்தபோது
ReplyDeleteஇணையவில்லை கடைசியில் பார்த்தால் .in என்று மாறியிருக்கிறது. அப்போது நேரம் 4.15
அப்போதே கோரிக்கை வைத்தேன் மாலைக்குள் அதற்கு தீர்வு கண்டுபிடித்த நீங்கள் மற்றும் அனைத்து தொழில்நுட்ப பதிவர்களுக்கும் நன்றிகள்!
என்னால் உங்கள் .in தளத்தை உங்கள் fan page ல் இணைக்க முடிகிறது. உங்கள் பழைய தளத்திற்கு (.com) தான் Blocked என்று வருகிறது.
ReplyDeleteபலருக்கு பயனுள்ள தகவல் பகிர்ந்தமைக்கு நன்றி சகோ
ReplyDeleteஉபயோகமான தகவல்களை சரியான சமயத்தில் கொடுத்து பலரின் குழப்பத்தை தீர்த்து வைத்துள்ளீர்கள்.
ReplyDelete/ஆனால் இண்ட்லியிலும் தமிழ்மணத்திலும் நமது வலைப்பூ முகவரியை முழுமையாக மாற்ற கோரிக்கை விடுப்பதே பதிவுகளை இணைக்கும் பிரச்சினைக்குத் தீர்வாக இருக்கும்./
உண்மைதான். விரைவில் செய்வார்கள் என நம்புவோம்.
அனைவருக்கும் அறிந்து கொள்ளும் விதத்தில் தெளிவான விளக்கம். நன்றி.
ReplyDeleteஇதானா மேட்டரு,
ReplyDeleteநான் மெர்சலாகிட்டேன் தல!
// அலெக்சா ரேங்க் குறைந்து பாதாளத்திற்கு போய்விட்டது.//
ReplyDeleteபோகவில்லை ....
.in க்குதான் அலெக்ஸ்சா பாதாளத்திற்கு சென்று விட்டது ..
http://www.alexa.com/data/details/main?url=http://URL.blogspot.com
என்று பார்த்தீர்கள் என்றால் ...
உங்கள் பழைய அலெக்ஸா ரேங்க் வரும்..
ஒன்று தெரிகிறது ...
டொமைன் மாறவில்லை ...
REDIRECT ஆகிறது ..
நன்றி நண்பரே
// Wesmob
ReplyDeleteஒன்று தெரிகிறது ...
டொமைன் மாறவில்லை ...
REDIRECT ஆகிறது .. //
கரெக்ட் நண்பரே
நன்கு புரியும்படி விளக்கினீர்கள். வழிகாட்டுதலுக்கு நன்றி.
ReplyDeleteதமிழ்வெளி திரட்டியில் இப்பிரச்சினை சரிசெய்யப்பட்டுள்ளது... http://tamilveli-news.blogspot.com/2012/01/blogger-com-in.html
ReplyDeleteஉங்களுக்கு ஒரே ஜாலி தான்..எங்களுக்கு வடபோச்சே ...இன்னும் என்னால வரபோதோ தெரியல ...ஆனா ஒன்னு உங்களுக்கு வேலை அதிகமாச்சு ...
ReplyDeleteதெளிவான விளக்கங்களுடன், தீர்வுகளையும் எழுதி, விழி பிதுங்கி மிரண்டு போன பதிவர் நண்பர்களை தெளிவாக்கியதுடன், மகிழ்ச்சியை வரவழைத்துள்ளீர்கள்.. பாராட்டுகள் பொன்மலர்.!
ReplyDeleteவழிகாட்டுதலுடன் அழகான தீர்வுகள்.... நண்பர்கள் இப்பொழுதாவது கஷ்டம் டொமைனுக்கு மாறுங்கள்...
ReplyDeleteவிரிவான விளக்கத்திற்கு நன்றி சகோ.!
ReplyDeleteசிக்கல்கள் வரும் சில நாட்களுக்கு பிறகே தீர்வு கிடைக்கும். ஆனால் அன்றே எங்களுக்கு தீர்வு கிடைக்க செய்தமைக்கு வாழ்த்துக்கள் பொன் மலர்.
ReplyDeleteவிளக்கமான பதிவு நண்பரே ! மிக்க நன்றி !
ReplyDeleteFriend,
ReplyDeleteI encountered the same problem.I can't post my blog in tamilmanam. I tried by rechanging the .in to .com but its not working. Can u pls help me to solve this.
Also my hearty congrats for your star status in tamilmanam
நீங்கள் சொன்னது போல இன்ட்லியில் செய்தேன்..
ReplyDeleteஅந்த பதிவையே இன்ட்லி காட்டவில்லை!! (புதுவரவிலும் காணோம், எனது இணைத்தவை பட்டியலிலும் இல்லை).. சரி,இருப்பதையே மீண்டும் இடலாம் என்று இட்டால் பதிவு ஏற்கனவே இருப்பதாகக் காட்டுகிறது.. இது சரியாக என்ன வழி? கொஞ்சம் சொல்லுங்க!
உங்களை இந்த ஏரியாவுல நான் இது வரைக்கும் பார்த்ததேயில்லையே:)
ReplyDeleteஓ!நீங்கதான் தமிழ் மணம் நட்சத்திரமா?
வாழ்த்துக்கள்.
//ஆளுங்க (AALUNGA)
ReplyDeleteநீங்கள் சொன்னது போல இன்ட்லியில் செய்தேன்..
அந்த பதிவையே இன்ட்லி காட்டவில்லை!! (புதுவரவிலும் காணோம், எனது இணைத்தவை பட்டியலிலும் இல்லை).. சரி,இருப்பதையே மீண்டும் இடலாம் என்று இட்டால் பதிவு ஏற்கனவே இருப்பதாகக் காட்டுகிறது.. இது சரியாக என்ன வழி? கொஞ்சம் சொல்லுங்க!//
இது மாதிரி சில நேரங்களில் எனக்கும் இண்ட்லியில் நடந்திருக்கிறது. நீங்கள் கண்டிப்பாக பழைய பதிவு அல்லது வேறு எதாவது ஒரு பதிவை இப்போது .com மாற்றி போட்டுப்பாருங்கள். வந்து விடும். இப்போதும் சோதித்து விட்டேன்.
உங்களை ஆனந்த விகடன் தேர்ந்தெடுத்தது தகுதி அடிப்படையில்தான். எல்லோரும் இந்த in மாற்றத்தால் தலைவலியில் இருக்க சரியான பதிவு போட்டு உதவி செய்திருக்கிறீர்கள்.
ReplyDeleteஅருமையான விபரங்கள்.
ReplyDeleteமிக்க நன்றி.
//இது மாதிரி சில நேரங்களில் எனக்கும் இண்ட்லியில் நடந்திருக்கிறது. நீங்கள் கண்டிப்பாக பழைய பதிவு அல்லது வேறு எதாவது ஒரு பதிவை இப்போது .com மாற்றி போட்டுப்பாருங்கள். வந்து விடும். இப்போதும் சோதித்து விட்டேன்.//
ReplyDeleteசமீபத்தில் நான் இட்ட பதிவு வருகிறது..
ஆனால், பழைய பதிவு (உங்களிடம் சந்தேகம் கேட்பதற்கு முன் இட்ட பதிவு வரவில்லை)..
ஆலோசனைக்கு நன்றி
//இது மாதிரி சில நேரங்களில் எனக்கும் இண்ட்லியில் நடந்திருக்கிறது. நீங்கள் கண்டிப்பாக பழைய பதிவு அல்லது வேறு எதாவது ஒரு பதிவை இப்போது .com மாற்றி போட்டுப்பாருங்கள். வந்து விடும். இப்போதும் சோதித்து விட்டேன்.//
ReplyDeleteசமீபத்தில் நான் இட்ட பதிவு வருகிறது..
ஆனால், பழைய பதிவு (உங்களிடம் சந்தேகம் கேட்பதற்கு முன் இட்ட பதிவு வரவில்லை)..
ஆலோசனைக்கு நன்றி//
ஒரு குறிப்பிட்ட சில வார்த்தைகள் உங்கள் பதிவின் தலைப்பிலோ, Description-ல் இருந்தால் இன்ட்லி அந்த பதிவை காட்டாது...உதாரணமாக மற்ற திரட்டிகளின் பெயர்கள்
மிக நன்றி. உங்கள் இந்த பதிவை பார்த்து தான் எனது பதிவுகளை கடந்த ஒரு வாரமாக இணைத்து வருகிறேன்.
ReplyDeleteமிக இளையவரான தாங்கள் அற்புதமாக எழுதி வருகிறீர்கள். விகடனில் அறிமுக படுத்தப்பட்டமைக்கு வாழ்த்துகள் !