Jan 30, 2012

பென் டிரைவ்களின் தரத்தை சோதிக்க இலவச மென்பொருள் ChkFlsh


USB கருவிகளான பென் டிரைவ், மெமரி கார்டு போன்றவை இன்றைய கணிணியுலகத்தில் தகவல்களை சேமித்து வைத்துக் கொள்ள அதிகமாக பயன்படுத்தப்படுகின்றன. இவை குறிப்பிட்ட காலம் செயல்பட்ட பின் தானாகவே இயக்கத்தை நிறுத்திக் கொள்கின்றன. பென் டிரைவ்களும் தற்போது போலியாக 32 GB என்றெல்லாம் சொல்லி விற்கப்படுகிறது. சிலருக்கோ தாங்கள் வாங்கிய பென் டிரைவ் தரமானதா அல்லது போலியானதா என்று கண்டறியத் தெரியாது. அதே போல தற்போது நாம் பயன்படுத்திக் கொண்டிருக்கும் பென் டிரைவ் பழுதாயிருக்கிறதா என்றும் கண்டுபிடிக்க முடியாது.

பென் டிரைவ் மற்றும் ஏனைய USB கருவிகளின் தரத்தைச் சோதிக்க ChkFlsh என்ற இலவச மென்பொருள் இணையத்தில் கிடைக்கிறது. இதன் மூலம் Read Speed, Write Speed, Sector wise Errors போன்ற விசயங்களை சோதித்து அறியலாம். இதனால் நமது பென் டிரைவ் தரமாக உள்ளதா என்றும் தெரிந்து கொள்ளலாம்.

பென் டிரைவை எப்படி சோதிப்பது?

இந்த மென்பொருளைத் தரவிறக்கி ChkFlsh என்ற கோப்பை கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் பென் டிரைவை கணிணியில் செருகவும். பென் டிரைவில் உள்ள தகவல்களை அழித்து விட்டு சோதிக்கப் பயன்படுத்துவது நலமானது. இதில் 3 வகையான Access Type கள் இருக்கின்றன.

Use Temporary file என்பதைக் கிளிக் செய்வதன் மூலம் Write and Read சோதனையைச் செய்ய முடியும். உங்கள் பென் டிரைவில் ஏதேனும் தகவல்கள் இருந்து Read Test மட்டுமே மேற்கொள்ள வேண்டும் எனில் As Logical Drive என்பதைக் கிளிக் செய்து கொள்ளவும். Test Length – இதில் One Full Cycle என்பதைத் தேர்வு செய்யவும். பின்னர் Start கொடுத்தால் பென் டிரைவ் சோதிக்கப்படும்.
ஒவ்வொரு பைல் செக்டார்களாக (File Sector) களாக சோதிக்கப்பட்டு வரும். இறுதியில் ஒவ்வொரு செக்டாரும் பச்சை வண்ணத்தில் காண்பிக்கப்பட்டால் உங்கள் பென் டிரைவ் நலமாக இருக்கிறது என்று அர்த்தம். இதோடு பென் டிரைவின் வேகம் மற்றும் பிழைகள் இருந்தால் காண்பிக்கப்படும்.
தரவிறக்கச்சுட்டி : http://mikelab.kiev.ua/PROGRAMS/ChkFlsh.zip


முக்கிய குறிப்பு : தமிழின் முண்ண்ணி திரட்டியான தமிழ்மணத்தில் இந்த வார நட்சத்திரமாக என்னை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். அவர்களுக்கு எனது நன்றிகள். தமிழ்மணம் தளத்தைப் பார்க்க.


18 comments:

  1. நல்லதோர் பகிர்வு!நட்சத்திர பதிவரானமைக்கு வாழ்த்துக்கள் !

    ReplyDelete
  2. ஆனந்த விகடனில் இடம் பிடித்தமைக்கு இன்னுமொரு வாழ்த்து சகோதரி ..

    ReplyDelete
  3. தமிழ் மணம் ஸ்டார் ஆனதற்கு வாழ்த்துக்கள் பொன்மலர்,

    நீங்கள் இன்னும் இன்னும் பல உயரங்களுக்கு செல்ல என் இதயம் கனிந்த வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. எனதருமை தோழி பொன்மலர் நீங்கள் அறிமுகப்படுத்தும் ஒவ்வொரு மென்பொளும் தங்கம் போல எப்பொழுதும் குறை என்பதே இருக்காது. தொடரட்டும் உங்கள் எழுத்துலக வாழ்க்கை. தமிழ்மணம் நட்சத்திரம் தகுதி உங்களுக்கு உள்ளதால் மட்டுமே உங்களை தேர்ந்தெடுத்திருக்கின்றனர் இன்னும் பலவண்ண நட்சத்திரமாக ஜொலிக்க இறைவனை பிரார்த்திக்கிறேன் நன்றி வணக்கம்.

    ReplyDelete
  5. வாழ்த்துக்கள் பொன்மலர் :)))))

    ReplyDelete
  6. நட்சத்திரமாய் ஜொலிக்க முழுத் தகுதியும் படைத்தவர் தாங்கள்! மேலும் பல சிறப்புகள் பெறவும், இதுபோன்ற பயனுள்ள பகிர்வுகளை எங்களுக்கு அளிக்கவும் உளமார வாழ்த்துகிறேன்.

    ReplyDelete
  7. நட்சத்திர வாழ்த்து(க்)கள்.

    என்னை மாதிரி உள்ள க கை நா க்களுக்கும் புரியும்படியான வகையில் எழுதறீங்க. இனிய பாராட்டுகள்.

    ReplyDelete
  8. ஆனந்த விகடனில் இடம் பிடித்தமைக்கு,தமிழ் மணம் ஸ்டார் ஆனதற்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  9. நன்றி கூடல் பாலா,
    நன்றி பெருமாள்
    நன்றி வடிவேலன்,
    நன்றி ராஜசூரியன்,
    நன்றி துளசி கோபால்,
    நன்றி சிபி.செந்தில்

    ReplyDelete
  10. நல்ல பகிர்வு,நட்சத்திர பதிவரானமைக்கு வாழ்த்துக்கள் சகோதரி

    ReplyDelete
  11. மிகுந்த நன்றிங்க பதிவுக்கு ,
    வாழ்த்துக்கள் தமிழ்மண நட்சத்திரமாய் மின்னுவதற்கு ,..

    ReplyDelete
  12. தமிழ்மணம் இந்த வார நட்சத்திரமே வாழ்த்துக்கள். ஆனந்த விகடனின் வரவேற்பறையில் இடம்பெற்றுள்ளமைக்கும் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  13. அனைவருக்கும் தேவையான பதிவு....

    ReplyDelete
  14. நட்சத்திர வாழ்த்துகள்.

    ReplyDelete
  15. இந்த வார நட்சத்திரத்துக்கு ஒரு பூங்கொத்து. அருமையான பதிவு இது. எனக்கு மிகவும் அவசியமான பதிவு இது. வாழ்த்துக்கள்! இந்த வாரம் அசத்துங்க மேடம்.

    ReplyDelete
  16. உபயோகமான பதிவு. எனக்கு உபயோகமான பதிவு! விகடன், தமிழ்மணம் -வாழ்த்துகள்.

    ReplyDelete
  17. மேன்மேலும் வளர வாழ்த்துக்கள் சார் ! URL (.com to .in) எல்லாம் மாறிக் கொண்டே வருகிறதே! இதைப் பற்றி விரிவாக ஒரு பதிவு இடுங்கள் ! (Followers widget not working)

    ReplyDelete