இந்தியாவின் மிகப்பெரிய தொழில் துறையான ரயில்வே துறையின் பிரத்யேக இணையதளமான IRCTC மூலம் நாளொன்றுக்கு லட்சக்கணக்கானோர் டிக்கெட்டுகளைப் புக் செய்து பயணிக்கின்றனர். தட்கல் முறையிலான டிக்கெட்டுகளை எடுக்க இந்த இணையதளம் பெரும் உதவியாக இருக்கும். ஆனால் இந்த இணையதளத்தின் மிகப்பெரிய குறைபாடுகளான மிக மெதுவாக லோடிங் ஆவது, சர்வர் தொக்கி நின்று விடுவது போன்றவற்றால் இணையதளத்தில் புக் செய்வது சில நேரங்களில் எரிச்சலை உண்டாக்கும். ஏனெனில் ஒரே நேரத்தில் பல பேர் இதனை அணுகுவதாலே ஆகும். கூட்டம் அதிகமாக இருக்கும் நேரத்தில் Service Unavailabale என்று வந்து விடும். இதற்கு மாற்றாக இருக்கும் சில இணையதளங்களைப் பார்ப்போம்.
1.ClearTrip
IRCTC க்கு அடுத்த படியாக அதிகம் பேர் புக் செய்யும் தளம். மிக எளிதான வழியில் மூன்றே கிளிக்கில் டிக்கெட்டைப் புக் செய்யலாம். டிக்கெட் புக் செய்த பின்னர் மின்னஞ்சலில் பெற்றுக் கொள்ள முடியும். இதிலும் SMS Alert வசதியிருக்கிறது. டிக்கெட்டை ரத்து செய்வதும் எளிதாகவே இருக்கிறது. மிக்குறைந்த கட்டணத்தையே இந்த இணையதளம் எடுத்துக் கொள்ளும். இதில் டிக்கெட்டைப் புக் செய்ய கணக்கு ஒன்றை ஆரம்பிக்க வேண்டும்.
2.Yatra.Com/Trains
3.MakeMyTrip.Com/Railways
4.http://www.railticketonline.com/SearchTrains.aspx
5.http://www.ezeego1.co.in/rails/index.php
6.Thomas Cook.Co.In/IndianRail
ERail.in
இந்த இணையதளம் மூலம் மிக விரைவாக ரயில்களின் நேரம், தொலைவு, கட்டணம், பயணிக்கும் ஸ்டேசன்கள், சீட் இருக்கிறதா (Seat Availablity) போன்றவற்றைப் பார்த்துக் கொள்ளலாம். உங்களின் PNR Status மிக விரைவாக அறிய முடியும். புதியதாக டிக்கெட் புக் செய்ய சேவை இதில் இல்லையென்றாலும் வேகமாக தகவல் அறிய உதவியாக இருக்கும்.
முக்கிய குறிப்புகள் :
• இந்த இணையதளங்கள் அனைத்துமே IRCTC இணையதளத்துடன் பார்ட்னர்ஷிப் முறையில் செயல்படுகின்றன. நீங்கள் டிக்கெட் புக் செய்யும் போதும் கேன்சல் செய்தாலும் எல்லாமே IRCTC இன் தகவல்தளத்திலும் சேர்ந்துவிடும். அதனால் பயப்படத் தேவையில்லை.
• நீங்கள் எடுக்கும் ரயில் டிக்கெட்டுகளுக்கு Train Class, Train Type, Tatkal போன்ற சேவைகளைப் பொறுத்து 10 முதல் 50 ருபாய் வரை கமிசனாகப் பிடிக்கபடும்.
• இவை எல்லாமே IRCTC ன் தகவல்தளத்தை வைத்தே செயல்படுவதால் நம்பகத்தன்மையில் பிரச்சினையில்லை. இந்த தளங்கள் அனைத்துமே IRCTC தளத்தை விட வேகமாக செயல்படுகின்றன.
Tweet | |||
நான்,cleartrip ஐ தான் ,பயன் படுத்தி வருகிறேன்....மிகவும் அருமையான தளம்.......மிக எளிமையாக வடிவமைக்க பட்டு இருக்கிறது.... விளபரங்கள் குறைவு...அதே போல் ,நாம் பயணத்தை பற்றி முடிவு எடுப்பதற்கு ,மிகவம் பயனுள்ள தளம்...மற்ற தளங்களை நான் பயன் படுத்தியதில்லை.....
ReplyDeleteஅதேபோல்,,, விமான டிக்கெட் புக் செய்வதற்கு... http://www.ixigo.com/ தளம்...நன்றாக இருக்கும்...குறைந்த விலை இல் விமான டிக்கெட் களை பெறலாம்....
ReplyDeleteதகவலுக்கு நன்றிங்க.
ReplyDeleteஉங்கள் மீது இறைவனின் சாந்தியும் சமாதானமும் நிலவுவதாக..
ReplyDeleteபயனுல்ல தகவல்களுக்கு நன்றி..
Though I am working in railways I have so far been not aware of these sites.Immediately checked and found it will be useful one.Thank you very much Pon malar
ReplyDeleteரொம்ப நன்றி நண்பா. தினமும் இன்டர்நெட் பார்த்தாலும் இந்த விபரங்கள் எனக்குத் தெரிந்திருக்கவில்லை. தற்போது நான் கிளியர் ட்ரிப் கணக்கைத் துவங்கிவிட்டேன், இத்தனை நாளும் IRCTC கொடுமையில் தவித்து வந்தேன், தற்போது விடுதலை. நண்பர் pangusanthaieLearnஅவர்கள் கொடுத்த தகவலும் பயனுள்ளது, அவருக்கும் நன்றிகள்.
ReplyDeleteIRCTC கொடுமையில் தவித்து வந்தேன்,..... feel sorry for you
Deleteplease add this wonderful site www.indiarailinfo.com
Deletemay i know how to book tatkal ticket ?
ReplyDeletenice information. thank you for sharing it.
ReplyDelete