இணைய உலகில் தற்போது சமூக வலைத்தளங்கள் இடையான போட்டியில் கூகிளின் பிளஸ்க்கும் பேஸ்புக் தளத்திற்குமே பலத்த போட்டியாக இருக்கிறது. கூகிளை விட பேஸ்புக் இமாலய கூட்டத்தை வைத்திருப்பதால் எவ்வாறு முந்தலாம் என்று காய் நகர்த்தி வருகிறது. பேஸ்புக்கில் எதாவது ஒரு வசதி தந்தால் கூகிளும் அதனை ஏற்படுத்துகிறது. பேஸ்புக் நிறுவனமும் இதற்கு சளைத்தவாறில்லை. அண்மையில் கூகிள் தனது தேடியந்திரத்தின் தேடல் உத்திகளில் சில மாற்றங்களை ஏற்படுத்தியிருக்கிறது. Google Personal Search (Search Plus your World) என்று அறிமுகப்படுத்தப் பட்டிருக்கும் இந்த புதிய வசதியினால் தேடல் சேவையானது கூகிள்+ தளத்தின் தரவுகளோடு (Data) இணைக்கப் பட்டிருக்கிறது. இதன் நன்மைகள், சமூக வலைத்தளப் பிரச்சினைகள் பற்றியும் பார்ப்போம்.
Personal Search என்றால் என்ன?
கூகிள் தேடியந்திரத்தில் இதற்கு முன் நீங்கள் தேடும் போது இணையத்தில் கிடைப்பவை மற்றும் உங்கள் நண்பர்களால் +1 செய்யப்பட்ட பக்கங்களிலிருந்து மட்டுமே முடிவுகளைக் காட்டும். இதனை மேலும் விரிவுபடுத்தி நீங்கள் கூகிள் பிளஸ் தளத்தில் போட்ட செய்திகள், புகைப்படங்கள், உங்கள் நண்பர்களால் பகிரப்பட்ட தளங்கள் மற்றும் தகவல்களிலிருந்தும் திரட்டி உங்கள் தேடலுக்குப் பொருத்தமான முடிவுகளை பரிந்துரை செய்யும். இதில் நாம் Private ஆகவும் வெளியிடுகிற பகிர்வுகள் கூகிள் தேடலில் இடம்பெறும் என்பதை கவனத்தில் கொள்ளவும். இது கூகிளின் google.com முகவரியில் மட்டும் பரிசோதனையில் வந்திருக்கிறது. விரைவில் கூகிள் இதனை பொதுவாக அறிமுகப்படுத்தும்.
இதில் இணைக்கப்பட்டுள்ள வசதிகள்:
1. Profiles, Pages and Peoples in Search
கூகிள் பிளசில் இணைந்திருப்பவர்கள் பெயர்கள் மற்றும் பக்கங்கள் ஆகியவை தொகுக்கப்பட்டு விடும். கூகிளில் தேடும் போது தேடல் பெட்டியில் எதாவது ஒரு எழுத்தை அடிக்கும் போதே பொருத்தமான புரோபைல்கள் Auto Suggestion முறையில் தேடல் பெட்டிக்குக் கீழே தோன்றும். இந்த இடத்தில் இருந்தபடியே அவர்களின் புரோபைலில் நண்பராகவோ அல்லது பக்கத்திற்கு Follower ஆக Add to Circle என்பதைக் கொடுத்து இணைத்துக் கொள்ளலாம்.
2.Suggested Results from Google+ Users
கூகிள் பிளசில் நமக்கு ஒருவரை நண்பராகச் சேர்த்துக் கொள்ளுமாறு கூகிள் பிளஸில் இணைந்திருக்கும் சிலரை Suggested List ஆக வலப்புறம் காட்டும். தேடும் போது நமது பகிர்வுகள், நண்பர்கள் பகிர்ந்த தளங்களில் மட்டுமின்றி இந்த Suggested List இல் உள்ளவர்களின் பகிர்தலையும் தேடலில் காட்டும். இதன்படி அதிகம் பேர் இணைந்திருக்கும் கூகிள் பிளஸ் புரோபைலுக்கு தேடலில் முக்கியத்துவம் கிடைக்கலாம். இதற்கு வலைத்தளம் வைத்திருப்பவர்கள் கூகிள்+ Badge வைத்துக் கொள்ளலாம்.
சமூக வலைத்தளங்களின் போட்டி :
கூகிள் பிளஸ் + கூகிள் தேடல் இரண்டையும் இணைத்தது சிலருக்கு வசதியாக இருந்தாலும் சிலருக்கு எரிச்சலை உண்டாக்கியிருக்கிறது. சிலர் இதனை தனிப்பட்ட நபர்களின் அந்தரங்கத்தைப் பாதிக்கும் என்று கூறியிருக்கிறார்கள். கூகிளின் இந்த செயல்பாட்டால் டுவிட்டர் அதிர்ச்சியடைந்து கோபமாக செய்தி வெளியிட்டிருக்கிறது. ஏனெனில் இனி மேல் கூகிள் தேடலில் கூகிள் பிளஸில் இருக்கும் புரொபைல்கள் மற்றும் பக்கங்களே அதிக முக்கியத்துவம் பெறும். இப்போது வரை குறிப்பிட்ட நபரைத் தேடும் போது அவரின் டுவிட்டர் முகவரியும் பேஸ்புக் முகவரியோ பக்கமோ கூகிளில் பட்டியலிடப்படும். கூகிள் இதனை மெல்ல மெல்லக் குறைத்து விடுமே. இதனால் டுவிட்டர், பேஸ்புக்குக்கு கூகிள் தேடலினால் வரும் கூட்டம் குறைந்து விடுமல்லவா? எப்படியோ தொலைந்து போனால் நன்றாக இருக்குமல்லவா?
பேஸ்புக்கில் தான் கருத்துகளும் செய்திகளும் அதிகமாக பகிரப்படுகின்றன. அவை வெளியுலகத்துக்கு வராமல் பேஸ்புக்கினுள்ளேயே முடங்கிப் போய்விடும். தற்போது கூகிளுக்கு பேஸ்புக் அளவுக்கு பயனர்களும் இல்லை. கூகிள் பிளஸ் தளம் இன்னும் முழுமையடையாவிட்டாலும் மற்ற தளங்களை இப்படி ஒரங்கட்டுவதன் மூலம் சமூக வலைத்தளங்களின் இடையிலான போட்டியில் அழுத்தமாக காலூன்ற முயற்சிக்கிறது கூகிள்.
பேஸ்புக்கும் ஒரு தேடியந்திரம் ஆரம்பிச்சா எப்படியிருக்கும்? பொறுத்திருந்து பார்ப்போம் என்ன நடக்கிறதென்று. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் நண்பர்களே?
Tweet | |||
பொன்மலர்.... நீங்க சொல்லியிருக்குற மாதிரி என் google பக்கத்தில் காட்டவில்லையே.(எப்பவும் போலத்தான் search பக்கம் காட்டுது)
ReplyDeleteஇதுக்கு தனியா ஏதாவது add on இணைக்கணுமா.நான் windows xp உபயோகிக்கிறேன்.அதனால் ஏதாவது பிரச்சனையா?
தன்னை மட்டுமே உயர்த்தி கொள்ள நினைக்கிறது கூகுள் ...
ReplyDeleteநன்றி சகோ ..
இது கூகிளின் google.com முகவரியில் மட்டும் பரிசோதனையில் வந்திருக்கிறது. விரைவில் கூகிள் இதனை பொதுவாக அறிமுகப்படுத்தும்.
ReplyDeleteமிக மிக அற்புதமான பதிவு .அட்டகாகசமான விளக்கம்.
ReplyDeleteஎப்படி உங்களுக்கு நன்றி சொல்வதென்றே தெரியவில்லை.
நன்றி வாழ்த்துக்கள்.
நிற்க.
எனக்கு FB யை விட G+ பயன் படுத்துவதுதான் பிடித்துள்ளது. இது மட்டுமல்லாமல் கூகிளின் அணைத்து தயாரிப்புகளை பயன் படுத்தும் பொழுது ஒருவித சவ்கரியத்தை உணர்கிறேன். இணையத்தில் L K G லெவலில் இருக்கும் என்னை போன்றவர்களையும் GOOGLE அரவணைத்து செல்வது இதமாக உள்ளது.
GOOGLE இன் பங்குகளை இந்திய பங்கு சந்தையில் வெளியிட்டால் வாங்க ஆவலாக இருக்கிறேன்.
I LOVE GOOGLE.
நல்ல பதிவு.
ReplyDeleteவாழ்த்துகள்.
FB யை ஒருநாள் GOOGLE வாங்கிவிடும் என்று என் உள்ளுணர்வு சொல்கிறது.
ReplyDeleteஅனைத்தும் பயனுள்ளவை ! நன்றி நண்பரே !
ReplyDeleteபேஸ்புக்கும் ஒரு தேடியந்திரம் ஆரம்பிச்சா... அது, எம்.எஸ்.என்., யாகூ அளவுக்கு கூட வருமாங்கிறதே சந்தேகம்தான். சமூக வலைதளங்களில் பேஸ்புக் கிங்குன்னா தேடியந்திரங்களில் கூகிள்தான் கிங்...
ReplyDeletePayanulla pathivu. Nanri.. :)
ReplyDeletenice information
ReplyDelete