கூகிள் பிளஸ் சமூக வலைத்தளத்தில் நம் வலைப்பூவிற்கு என்று ஒரு கூகிள்+ பக்கம்(Pages) வைத்திருப்போம். இதன் மூலம் நமது வாசகர்களை கூகிள்+ தளம் வழியாக இணைந்திருக்க செய்ய முடியும். இதற்காக கூகிள்+ பக்கத்திற்கான பேட்ஜ் (Badge) ஒன்றினை நமது வலைத்தளத்தில் வைத்துக் கொண்டால் வாசகர்கள் அதனைக் கிளிக் செய்து இணைந்து கொள்ள ஏதுவாக இருக்கும். தற்போது இதில் புதிய வசதிகள் சில சேர்க்கப்பட்டுள்ளன.
கூகிள் பிளஸ் பேட்ஜினை Icon, Small Badge, Standard Badge என்ற மூன்று வகைகளில் உருவாக்கலாம். இப்போது இதன் அகலத்தை மாற்றியமைக்கும் படியாக Width வசதியும் வண்ணத்தை மாற்றுகிற மாதிரி Color Theme வசதியும் இப்போது தரப்படுகிறது.
முதலில் உங்களின் கூகிள்+ பக்கத்தின் ஐடி எண்ணைக் குறித்துக் கொள்ளவும். இதற்கு உங்களின் பக்கத்திற்கு சென்று இணைய உலவியின் அட்ரஸ் பாரில் இருக்கும் எண்ணைக் குறிக்கவும். உங்களின் தனிப்பட்ட கூகிள்+ புரோபைலில் செல்லாமல் உங்கள் வலைப்பூவிற்கான கூகிள்+ பக்கத்திற்கு செல்ல வேண்டும்.
(எ.கா) https://plus.google.com/u/0/b/117031685099046800181/
பிறகு கீழிருக்கும் சுட்டிக்குச் சென்று Link to this Google+ Page என்ற இடத்தில் உங்கள் ஐடி எண்ணை மட்டும் கொடுக்கவும்.
https://developers.google.com/+/plugins/badge/config
உங்களுக்குத் தேவையான வடிவத்தை Features இல் தேர்ந்தெடுக்கவும். அடுத்து Advanced Option இல் Width பகுதியில் தேவையான அகலத்தைக் கொடுக்கலாம். அகலம் 100 முதல் 1024 க்குள் இருக்க வேண்டும். Color Scheme இல் Light என்பது வெள்ளை நிறத்திலும் Dark என்பது கருப்பு வண்ண பின்புலத்திலும் மாற்றிக் கொள்ள முடியும்.
இதற்கு கீழே Get the Code பகுதியில் ஒரு பெட்டியில் உங்களுக்கான இரண்டு நிரல் வரிகள் காணப்படும். இதில் ஏற்கனவே கூகிள்+ பேட்ஜ் பயன்படுத்துபவர்கள் இரண்டாவது நிரலை காப்பி செய்து பழைய இடத்தில் போட்டு விடுங்கள்
மாதிரி நிரல்வரிகள் :
<!-- Place this tag in the <head> of your document -->
<link href="https://plus.google.com/117031685099046800181" rel="publisher" /><script type="text/javascript">
window.___gcfg = {lang: 'en'};
(function()
{var po = document.createElement("script");
po.type = "text/javascript"; po.async = true;po.src = "https://apis.google.com/js/plusone.js";
var s = document.getElementsByTagName("script")[0];
s.parentNode.insertBefore(po, s);
})();</script>
<!-- Place this tag where you want the badge to render -->
<g:plus href="https://plus.google.com/117031685099046800181" width="270" height="131" theme="light"></g:plus>
இதற்கு முன்னர் பேட்ஜ் வைக்காதவர்கள் உங்களுக்கான நிரல்வரியின் முதல் பகுதியில் நீல நிற வண்ணத்தில் உள்ளவற்றை மட்டும் பிளாக்கர் Design -> Edit Html சென்று </head> என்ற வரியைத் தேடி அதற்கு முன்னர் பேஸ்ட் செய்து Save Template கொடுக்கவும். இரண்டாவது பகுதி நிரல் வரிகளை உங்களுக்குத் தேவையான இடத்தில் பிளாக்கர் Page Elements ->Add a Gadget -> Html/JavaScript என்றவாறு போய் பேஸ்ட் செய்து சேர்த்துக் கொள்ளலாம்.
இதில் உயரத்தை மாற்ற இரண்டாவது நிரல் வரியில் உள்ள height=”131” என்பதில் உங்களுக்குத் தேவையான உயரத்தைக் கொடுத்துக் கொள்ளுங்கள்.
Tweet | |||
நான் இணையத்துல L K G ங்கறதால இந்த பதிவு என் அறிவிற்கு அப்பாற்பட்டதாக உள்ளது.
ReplyDeleteஇருந்தாலும் உங்கள் எழுத்துநடை எளிமையாகவும் தெளிவாகவும் உள்ளது. வாழ்த்துக்கள் நன்றி
நன்றி சகோ.
ReplyDeleteமாற்றங்களை கவனித்தேன்.... ஈமெயிலில் பின்தொடர்பவர்கள் 2000 பெற்றமைக்கு வாழ்த்துக்கள்... மிகப்பெரிய விஷயம்...
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteநன்றி.
பகிர்வுக்கு நன்றி மலர்..! தொடர்ந்து பயனுள்ள தகவலைத் தரும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துகள்..!
ReplyDeleteToo good. It worked. thanks a lot for such useful tips,. Getting them in easy steps is very good for non-tech savvy people.:-)
ReplyDeleteThanks once again.
nice my wishes
ReplyDelete