
1. Auto Expanded Share box
நமது வலைப்பூவில் பதிவுகளின் அடியில் கூகிள்+1 பட்டன் வைத்திருப்போம். அதன் மூலம் பதிவைப் படிப்பவர்கள் பிடித்திருந்தால் அவர்களின் கூகிள்+ புரோபைலில் பகிர்ந்து கொள்ளலாம். அந்த பட்டனை ஒரு முறை கிளிக் செய்து ஒட்டுப் போட்டு விட்டு அந்த பட்டன் மேல் மவுசைக் கொண்டு சென்றால் பகிர்வதற்கான பெட்டி (Sharing Box) தோன்றும். அதன் பிறகு அந்த பெட்டியில் கிளிக் செய்தால் பதிவின் சுருக்கம் தெரியும். அடுத்து நமது நண்பர் வட்டத்தைத் தேர்வு செய்து Share பட்டனைக் கிளிக் செய்தால் கூகிள் பிளஸில் அந்த செய்தி பகிரப்படும்.

2. Instant Follow Button on Google+ Badge
நமது வலைத்தளத்தில் கூகிளின் பேட்ஜ் (Badge) ஒன்றினை பிளாக்கில் வைத்து வாசகர்கள் இணைந்து கொள்ள வழி செய்திருப்போம். இந்த பேட்ஜில் Add to Circles என்று தோன்றும். அதன் மேல் மவுசைக் கொண்டு சென்றால் Follow, Friends போன்ற நண்பர் வட்டத்தில் சேர்த்துக் கொள்ளலாம். பொதுவாக வலைப்பூக்களின் கூகிள்+ பக்கங்களை நண்பர் வட்ட்த்தில் சேர்த்து என்ன செய்யப் போகிறோம். இதனை பேஸ்புக் லைக் போல Follow தானெ செய்ய வேண்டும்.


கூகிளின் +1 பட்டன் வெளியிட்ட போதிலிருந்தே வலைப்பூக்களில் தெரிவதற்கு மற்ற ஒட்டுப்பட்டன்களை விட அதிக நேரம் எடுத்துக் கொண்டது. இதனைத் தற்போது மேம்படுத்தி வலைத்தளங்களில் கூகிளின் +1 பட்டன்கள் வேகமாகத் தெரியும் படி செய்துள்ளது.
4. Sharing Posts have their Backlinks in Google+
கூகிள்+ தளத்தில் அடுத்தவரின் செய்திகளைப் பகிரும் போது, Re-Share செய்யும் போது அந்த செய்தியானது யாரிடம் இருந்து பெறப்பட்டது என்று மட்டுமே தெரியும். அதாவது Harsh Agarwal originally Shared this post என்று இருக்கும். அதனைக் கிளிக் செய்தால் ஒரிஜினலாக பகிர்ந்தவரின் புரோபைல் பக்கத்திற்குத் தான் செல்லும்; குறிப்பிட்ட ஒரிஜினல் பதிவுக்குச் செல்லாது. இதனை மாற்றி கடைசியாக வரும் Post வார்த்தையில் ஒரிஜினல் பதிவுக்கு லிங்க் கொடுத்திருக்கிறது.

Tweet | |||
நல்ல தகவல் நன்றிங்க..
ReplyDeleteமீண்டும் சொல்லிகொள்கிறேன் கூகிள் தயாரிப்புக்களை பயன்படுத்துவது மிகவும் எளிமையாகவும் சந்தோசமாகவும் மனத்திற்கு இதமாகவும் இருக்கிறது.
FACE BOOK கை என்றாவது ஒருநாள் கூகிள் கைப்பற்றும்
பகிர்வுக்கு நன்றி ...!
ReplyDeleteஎளிமையான விளக்கத்துடன், அனைவருக்கும் பயன்படும் பதிவு..!!
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி.!
good One...!
ReplyDeleteதகவலுக்கு நன்றி
ReplyDeleteநீங்க ரொம்ப நல்லவங்க நல்ல தகவல்லாம் தர்றீங்க ...
ReplyDeleteஅருமையான தகவல்கள் நன்றி!
ReplyDeleteNice Work......
ReplyDeletevery interesting keep on going..........
ReplyDelete