
கணிணியில் பல்வேறான மென்பொருள்களை நிறுவி பயன்படுத்தி வருவோம். அதில் இலவச மென்பொருள்களும் இருக்கும்; காசு கொடுத்து உரிமத்துடன் கூடிய மென்பொருள்களையும் (Licensed softwares) வைத்திருப்போம். இந்த மாதிரி மென்பொருள்கள் வாங்கும் போது அதன் சிடி பெட்டியில் அந்த லைசென்ஸ் எண்கள் இருக்கும். அல்லது மின்னஞ்சல் மூலம் அந்த எண்களைப் பெற்றிருப்போம். நிறைய பேர் இந்த முக்கிய லைசென்ஸ் எண்களைத் தனியாக குறித்து வைத்திருக்க மாட்டார்கள்.
வைரஸ் காரணமாக கணிணி செயலிழக்கும் போதோ அல்லது கணிணியில் எதாவது பிரச்சினை ஏற்பட்டு அதனை பார்மேட் (Format) செய்யும் போது மறுபடியும் ஏற்கனவே இருந்த மென்பொருள்களை நிறுவ வேண்டியிருக்கும். அப்போது தான் மென்பொருள்களின் சீரியல் எண் (Serial No) எங்கே என்று தெரியாமல் விழிப்பர். இதற்காக உதவக்கூடிய ஒரு இலவச மென்பொருள் தான் License Crawler. இந்த மென்பொருளின் மூலம் உங்கள் கணிணியில் நிறுவப்பட்டிருக்கும் கட்டண மென்பொருள்களின் லைசென்ஸ் எண்களை விநாடியில் கண்டறியலாம். பின்னர் இதனை எழுதி வைத்துக் கொள்ளலாம். அல்லது Text கோப்பாக சேமித்து வைத்துக் கொள்ளலாம்.

இந்த மென்பொருளை தரவிறக்கி License Crawler என்ற கோப்பைக் கிளிக் செய்யவும். இதில் Computer என்பதில் Localhost எனவும் அதற்கு கீழே HKEY_LOCAL_MACHINE என்று தேர்வு செய்து கொள்ளவும். பின்னர் Start Search என்பதைக் கிளிக் செய்தால் மென்பொருள்களின் பெயர் மற்றும் லைசென்ஸ் பெயர், எண்கள் பட்டியலிடப்படும். இதில் உங்கள் விண்டோஸ் உரிம எண், MS-Office போன்ற மென்பொருள்களின் லைசென்ஸ்களும் கிடைத்துவிடும். Save கொடுத்து ஒரு கோப்பில் எல்லாவற்றையும் சேமித்துக் கொள்ளலாம்.
எளிமையான இந்த மென்பொருள் கணிணியில் நிறுவாமலே பயன்படுத்தலாம். பென் டிரைவில் வைத்தும் பயன்படுத்தலாம்.
தரவிறக்கச்சுட்டி:
Download LicenseCrawler
பகிர்ந்தமைக்கு நன்றிங்க..
ReplyDeleteநல்ல பதிவு.
ReplyDeleteநன்றி.
அனைவருக்கும் பயன் பட கூடிய தகவல்
ReplyDeleteநன்றி ..
தகவலுக்கு நன்றி நண்பா
ReplyDeleteதகவல் தந்தமைக்கு நன்றி நண்பா...
ReplyDeleteசொத்துகளுக்கு பத்திரப் பதிவு மட்டும் இனி செல்லாது வருவாய் துறையில் பட்டா பெறுவது அவசியம்
பயனுள்ள பதிவு ! வாழ்த்துக்கள் சார் !
ReplyDeleteஇணைதளத்தில் நேரடி ஒளிபரப்பு செய்வது எப்படி என்பதை விளக்க முடியுமா?
ReplyDeleteDear Ponmalar,
ReplyDeleteI am appreciate your good job.
Warm Regards,
Pavainesan.
Dear Ponmalar,
ReplyDeleteThis is very use full Software for Desktop Administrator and service engineer.
Thanks for your Valuable information.