டுவிட்டர் போன்ற சமூக வலைத்தளமான Google Buzz ஐ 2009 இல் அறிமுகப்படுத்தியது கூகிள். இந்த சேவையானது கூகிள் மின்னஞ்சலோடு இணைக்கப்பட்டு வழங்கப்பட்டதால் இதையும் சேர்த்து பலரும் பயன்படுத்துவார்கள் என கூகிள் எதிர்பார்த்தது. ஆனால் சில நாடுகளைத் தவிர இது பிரபலமாக வரமுடிய வில்லை. இதே காலகட்டத்தில் டுவிட்டரின் வளர்ச்சி அபரிதமாக சென்று கொண்டிருந்தது. டுவிட்டரில் போலவே சுட்டிகள், படங்கள், வீடியோக்கள் பகிரலாம் என்றாலும் இதில் டுவிட்டரின் 140 எழுத்துகள் என்ற கட்டுப்பாடுகள் இல்லை.
சிலருக்கு இது பிடித்திருந்தாலும் பலர் Buzz இல் தங்களது வலைப்பதிவுகளை தானியங்கி முறையில் பகிருமாறு செய்துவிட்டு அதன் பக்கமே போகாமல் இருப்பார்கள். டுவிட்டர் அளவுக்குக் கூட வராத இதனை கூகிள் தோல்விப்பட்டியலில் சேர்த்து இன்று முறைப்படியாக மூடப்பட்டுள்ளது. இதன் இணைப்புகள் ஜிமெயில் மற்றும் கூகிள் பிளஸ் போன்ற இடங்களில் இன்று முதல் தெரியவில்லை.
இதிலிருந்து பாடம் கற்றுக் கொண்ட கூகிள் தனது புதிய சமூக வலைத்தளமான கூகிள் பிளஸில் மட்டுமே கவனம் செலுத்துவதால் Buzz ஐ மூடியிருக்கிறது. கூகிள் பிளஸும் தற்போது வளர்ச்சிப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. இதனை ஒரு மாதத்திற்கு முன்பே கூகிள் தெரிவித்து விட்டது. தமிழ் பதிவர்கள் பலரும் வலைப்பக்கம் வராமல் பஸ்ஸில் தீவிரமாய் இருந்து வந்தனர். இன்று மூடப்பட்டதால் அதிகம் பேர் கவலைப்பட்டதை கூகிள் பிளஸில் பார்க்க முடிந்தது. (பழையன கழிதலும் புதியன புகுதலும்.)
கூகிள் பஸ் பயன்படுத்திய போது பலரும் முக்கிய செய்திகள், புகைப்படங்கள், பதிவுகள், வீடியோக்கள் போன்றவற்றை பகிர்ந்திருப்பார்கள். அவையெல்லாம் போய் விட்டன என்று கவலைப்பட வேண்டாம். கூகிள் நாம் பஸ்ஸில் பகிர்ந்தவற்றை எல்லாம் பேக்கப் எடுத்து வைத்திருக்கிறது. இந்த வசதியும் எப்போது மூடப்படும் என்று தெரியவில்லை. அதனால் உடனே நமது Google Buzz தகவல்களை தரவிறக்கிக் கொள்வது நல்லது.
எப்படி கூகிளிடம் இருந்து தகவல்களைத் தரவிறக்குவது?
Google Takeout என்ற சேவையின் மூலம் +1, Buzz, Contacts and Circles, Picasa Albums, Profile, Stream, Voice போன்ற தகவல்களைத் தரவிறக்க முடியும். இதற்கு கீழே உள்ள சுட்டியில் சென்று உங்கள் கூகிள் கணக்கில் நுழையவும்.
https://www.google.com/takeout/?pli=1
இதில் All of your data உங்கள் மேற்கண்ட சேவைகளின் பட்டியல் தோன்றும். அனைத்தும் வேண்டுமெனில் அப்படியே Create Archeive என்பதைக் கொடுக்கவும்.
Google Buzz தகவல்கள் மட்டும் வேண்டுமெனில் Choose Services சென்று Buzz என்பதைக் கிளிக் செய்து கொள்ளவும். வேறு எதாவது வேண்டுமெனில் ஒவ்வொன்றாகத் தேர்வு செய்து கொள்ளவும்.
பின்னர் Create Archive கொடுத்தால் Zip வகையில் சுருக்கப்பட்டு தரவிறக்கப்படும். அதனை நிங்கள் Extract செய்து கொண்டு பார்த்துக் கொள்ளலாம்.
Tweet | |||
பஸ் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பதிவு எழுதுவதையே மறந்துவிட்டேன். முழு நேரமும் அங்குதான் இருந்தோம் :)
ReplyDeleteதகவலுக்கு நன்றி சகோ...
ReplyDelete//புதுகை.அப்துல்லா said...
ReplyDeleteபஸ் அறிமுகம் செய்யப்பட்டதில் இருந்து பதிவு எழுதுவதையே மறந்துவிட்டேன். முழு நேரமும் அங்குதான் இருந்தோம் :) //
எனக்கு கூகிள் பஸ் ரொம்ப தாமதமாகத் தெரியும். பதிவுகளை மட்டுமே நான் பகிர்வேன்.
நல்ல தகவல்.... நிறைய நண்பர்களுக்கு உதவும்.....
ReplyDeleteவாசிக்க:
குடிகாரன் மனசும், மக்கள் மனசும் - கவிதை
Good Article... The last photo was good...
ReplyDeleteநல்லதோர் தகவல். நன்றி நன்றி.வாழ்க வளர்க உங்கள் பணி.
ReplyDeleteநல்ல தகவல்....பகிர்விற்க்கு நான்றி...!
ReplyDeleteCOMPUTER TRICS | COMPUTER TIPS | TECHNOLOGY UPDATES | LEARN COMPUTER