Dec 15, 2011

பேஸ்புக்கின் புதிய Subscribe பட்டன் பிளாக்கில் இணைக்க


முண்ணணி சமுக வலைத்தளமான பேஸ்புக் நிறுவனம் அண்மையில் இணையதளங்களில்/ பிளாக்கர் தளங்களில் Subscribe பட்டன் வைத்துக் கொள்ளும் முறையை அறிமுகப்படுத்தியுள்ளது. இதற்கு முன்னர் எழுதிய பதிவொன்றில் பேஸ்புக்கின் Subscribe பட்டனைப் பயன்படுத்துவது குறித்து விளக்கியிருந்தேன். Subscribe என்பது என்னவென்றால் யாரென்று தெரியாத பலரும் உங்களுக்கு நண்பர்களாக இருக்கத் தேவையில்லை. உங்களின் சுயவிவரப் பக்கத்தில் Subscribe செய்வதன் மூலம் வாசகராக இணைந்து நீங்கள் Public ஆக பகிரும் செய்திகளை மட்டும் அவர்களால் பார்த்துக் கொள்ள முடியும்.

இந்த பட்ட்னை நமது தளத்தில் வைப்பதன் மூலம் பேஸ்புக் வாயிலான வாசகர்களை அதிகரிக்க முடியும். இதற்கு நீங்கள் பேஸ்புக்கின் Subscribe வசதியை Allow Subscribers செய்ய வேண்டும். http://www.facebook.com/about/subscribe மேலும் விவரங்களுக்கு இந்தப் பதிவைப் பார்க்கவும்.

இதில் இன்னொரு வசதியிருக்கிறது. ஒருவரின் அனைத்து செய்திகளையும் பேஸ்புக் பக்கத்தில் பார்க்கும் போது சிலருக்கு எரிச்சலை உண்டாக்கலாம். இந்த Subscribe வசதியினைப் பயன்படுத்தி முக்கியமான பதிவுகள் மட்டும் நமக்குத் தெரியுமாறு செய்ய முடியும். மேலும் குறிப்பிட்ட வகைகளில் பகிரப்படும் செய்திகளைப் பார்க்குமாறு செய்யலாம்; அனைத்து பதிவுகளும் வேண்டுமெனில் All updates வசதியினைத் தேர்வு செய்து கொள்ள முடியும்.

பேஸ்புக் Subscribe பட்டனை எப்படி வைப்பது?

1. http://developers.facebook.com/docs/reference/plugins/subscribe/ இந்த சுட்டியை கிளிக் செய்து Profile URL என்பதில் உங்களின் புரோபைல் முகவரியைக் கொடுக்க வேண்டும். புரோபைல் முகவரியானது பேஸ்புக்கில் சென்று மேல்பகுதியில் உள்ள உங்கள் பெயரைக் கிளிக் செய்தால் அட்ரஸ்பாரில் தெரியும். எடுத்துக்காட்டாக எனது புரோபைல் முகவரி : http://www.facebook.com/ponmalar2050
2. Layout Style – இதில் மூன்று வகைகள் உள்ளன. உங்களுக்குப் பிடித்த்தை தேர்வு செய்து கொள்ளுங்கள்.
3. அடுத்து வண்ணம், வாசகர்களின் முகம் தெரிய வேண்டுமா என்பதையும், அகலம் போன்றவற்றைத் தேர்வு செய்து Get Code என்பதைக் கிளிக் செய்யவும்.

4. இதற்கான நிரல்வரிகள் மூன்று வகைகளில் கிடைக்கும். நமக்கு IFrame வசதிதான் சிறந்த்து. அதில் உள்ள நிரல்வரிகளைக் காப்பி செய்து கொள்ளவும். பிளாக்கரில் சென்று Add Widget ->Html/Javascript என்பதன் மூலமாக சேர்த்திடலாம்.

குறிப்பு : இந்த நிரலில் உயரத்திற்கான அளவு கொடுக்கப்படாத்தால் பெரியதாக வரும். அதற்கு கீழ்க்கண்டவாறு சிவப்பு வண்ணத்தில் உள்ளதை உங்கள் நிரலில் height வரியைச் சேர்ப்பதன் மூலம் சுருக்கிக் கொள்ளலாம்.
<iframe src="//www.facebook.com/plugins/subscribe.php?href=http%3A%2F%2Fwww.facebook.com%2Fponmalar2050&amp;layout=button_count&amp;show_faces=false&amp;colorscheme=light&amp;font&amp;width=450&amp;appId=265922810085260" scrolling="no" frameborder="0" style="border:none; overflow:hidden; width:450px;height:20px;" allowtransparency="true"></iframe>

6 comments:

  1. பகிர்வுக்கு நன்றி...

    ReplyDelete
  2. நல்லதொரு பகிர்வு. பயன்படுத்திக்கொள்கிறோம். நன்றி..!!

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி!

    ஒரு உதவி செய்ய முடியுமா?

    Dashboard >> Design >> Page Elements இற்கு சென்றால் இவ்வாறு ஒரு செய்தி வருகிறது..

    We're sorry, but we were unable to complete your request.

    When reporting this error to Blogger Support or on the Blogger Help Group, please:

    Describe what you were doing when you got this error.
    Provide the following error code and additional information.

    bX-l4u1mh
    Additional information
    blogID: 683785779438316395
    host: www.blogger.com
    uri: /display

    This information will help us to track down your specific problem and fix it! We apologize for the inconvenience.
    Find help

    See if anyone else is having the same problem: Search the Blogger Help Group for bX-l4u1mh
    If you don't get any results for that search, you can start a new topic. Please make sure to mention bX-l4u1mh in your message.


    ஏன் என்று தெரியவில்லை!

    நான் வைத்து இருக்கும் அனைத்து வலைப்பூவிலும் இந்த செய்தியே வருகிறது..

    தெரிந்தால் சொல்லுங்கள்

    நன்றியுடன்
    MHM NIMZATH

    ReplyDelete
  4. உபயோகமன பதிவு ,வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. //MHM Nimzath//

    if you using blogger in chrome, try out in firefox.

    or wait some time , that will be the google's updating process for blogger.

    ReplyDelete
  6. Subscribe
    Error
    5 people are subscribed. Be the first of your friends.
    என்று வருகிறது
    http://ganeshdigitalvideos.blogspot.com

    ReplyDelete