Dec 17, 2011

Youtube Schools - பள்ளி/கல்லூரிகளுக்கான யூடியுபின் புதிய சேனல்



முன்பெல்லாம் பள்ளிகள்/கல்லூரிகளில் எதேனும் கட்டுரை எழுதி வரச்சொன்னால் மாணவர்கள் நூலகத்தில் தேடி குறிப்பெடுப்பார்கள். இல்லையெனில் பக்கத்திலிருக்கும் அறிவான நபர்களிடம் பொறுப்பைக் கொடுத்து உதவி கேட்பார்கள். இன்றைய தொழில்நுட்ப உலகில் இதெல்லாம் மறந்து எதாவது ஒரு விசயம் தெரியலையா கூகிள் போப்பா என்று சொல்லுமளவுக்கு வந்து விட்டது. இணையத்தில் நல்ல விசய்ங்களோடு கெட்ட விசயங்களும் இணைந்தே தான் இருக்கின்றன. இணையத்தில் பள்ளி மாணவர்களுக்கு கல்வி சார்ந்த வீடியோக்களை பார்ப்பதன் மூலம் குறிப்பிட்ட ஒன்றை எளிதாகப் புரிந்து கொள்ள முடியும். கூகிள் தனது யூடியுப் சேவையில் பள்ளி மாணவர்களுக்காக ஒரு சேனல் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது.

Youtube for Schools என்ற இந்தப் பிரிவின் மூலம் பள்ளி மாணவர்கள் கல்வி சார்ந்த வீடியோக்களை பார்த்து பயன்பெற முடியும். இதற்கு பள்ளி முதல்வர்கள் பள்ளிகளுக்கான கூகிள் கணக்கொன்றை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தங்கள் பள்ளியின் பாடம் சம்பந்தப்பட்ட வீடியோக்களைத் தரவேற்றிக் கொள்ளலாம். யூடியுபில் ஏற்கனவே Youtube Education என்ற சேனலில் பல்லாயிரக்கணக்கான வீடியோக்கள் பல கல்வி நிறுவனங்களால் தரவேற்றப்பட்டுள்ளன. இவைகளின் மூலம் கணிதம், மொழிகள், வரலாறு, அறிவியல் சோதனைகள் போன்றவற்றை மாணவர்கள் கற்றுக் கொள்ளலாம். (educational videos, maths help, learn foreign languages, university lectures, science experiments and world events)
பள்ளி முதல்வர்கள்/ஆசிரியர்கள் யுடியூபில் எந்த வீடியோவினையும் பார்க்க முடியும். ஆனால் மாணவர்களுக்கு Youtube Education சேனலில் உள்ள வீடியோக்களும் தங்கள் பள்ளி சம்பந்தப்பட்ட வீடியோக்களையும் மட்டுமே பார்க்க முடியும். மாணவர்கள் பார்க்கும் போது வீடியோக்களின் கீழே எந்த கருத்துரையும் வராது. Related Videos என்பதும் வராது. தேடினாலும் பாடங்கள் குறித்தான வீடியோக்கள் மட்டுமே வரும். இதனால் வேறு எதேனும் வீடியோக்களைப் பார்த்து மாணவர்களின் கவனம் சிதறாது.
பள்ளி ஆசிரியர்களுக்கென்று Youtube for Teachers என்ற சேனல் இருக்கிறது. இதில் மற்ற ஆசிரியர்களின் பாட வீடியோக்களை நம் பள்ளி ஆசிரியர்கள் பார்த்து அறிவை மேம்படுத்தலாம். மேலும் பள்ளியின் மூலம் தரவேற்றப்படும் வீடியோக்களை தங்கள் பள்ளி மட்டுமே பார்க்க முடியுமாறு அமைக்க முடியும். மாணவர்களுக்கு பள்ளியிலேயே கல்வி சார்ந்த வீடியோக்களை மட்டும் காண்பித்து அறிவைப் பெருக்கும் யூடியுபின் இந்த சேவை பாராட்டப்பட வேண்டிய ஒன்றாகும்.

http://www.youtube.com/schools
http://www.youtube.com/education
http://youtube.com/teachers

10 comments:

  1. நல்ல பதிவு பொன்மலர், குப்பையில் கூட வைரம் என்று சொல்வார்கள் அதை போல தான் உங்கள் சேவையும், நல்ல சேவை நாளும் தொடரட்டும்.

    ReplyDelete
  2. // என்றும் இனியவன் //

    நன்றி நண்பரே. தொடர்ந்து வாசியுங்கள்.

    ReplyDelete
  3. உண்மையிலேயே பாராட்டப்பட வேண்டிய விஷயம்தான்..

    பகிர்ந்தமைக்கு உங்களுக்கும் பாராட்டுகள். நன்றி சகோதரி..!!!

    ReplyDelete
  4. நன்றி நண்பரே.

    by pangusanthaielearn.blogspot.com

    http://pangusanthaielearn.blogspot.com/2011/12/online-live-demo.html

    ReplyDelete
  5. மிகவும் பயனுள்ள ஒரு நல்லதொரு பங்களிப்பு யூடூப்தளத்தின் இந்த சேவை... இந்த பயனுள்ள தகவலை பதிவின் மூலம் தெளிவாக பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்க தோழி!

    ReplyDelete
  6. இந்த சேவை பள்ளி மாணவரகளின் புத்தக சுமையயும், நேரத்தையும் மாற்றி அமைக்கக் கூடும். பகிர்வுக்கு நன்றி!Join this site for peaceful life www.stressandyou.in

    ReplyDelete
  7. mihavum arumaiyana thalam. thanks for your service mam. mam you tube il ulla video-vai eppadi download pannuvathu.

    ReplyDelete