Dec 3, 2011

மைக்ரோசாப்டின் புதிய சமூக வலைத்தளம் Socl


இணையத்தில் சமூக வலைத்தளங்களின் வளர்ச்சி அபாரமானதாக இருக்கிறது. Facebook, Google+ போன்ற சமூக வலைத்தளங்களில் பலரும் மணிக்கணக்கில் நேரத்தைச் செலவிடுவதால் நிறுவனங்கள் நல்ல இலாபமீட்டுகின்றன. மென்பொருள் துறையில் முதன்மையான மைக்ரோசாப்ட் தற்போது புதிய சமூக வலைத்தளம் ஒன்றை கட்டமைத்து வருகின்றனர். இயங்குதளம், மென்பொருள் துறையில் கோலோச்சிய மைக்ரோசாப்ட் இணைய தொழில்நுட்பத்தில் அஜாக்கிரதையாகவே இருந்து வந்தனர். இணையம் மட்டுமே தொழில்நுட்ப உலகை அடுத்த கட்டத்துக்கு நகர்த்திப் போகும் என புரிந்து கொள்ள மைக்ரோசாப்டுக்கு அதிக காலமாகிவிட்டது. இப்போது மைக்ரோசாப்டும் சமூக வலைத்தள போட்டியில் குதிக்கத் தயாராகி வருகிறது.

மைக்ரோசாப்டின் புதிய சமூக வலைத்தளத்திற்கு Socl என்று பெயரிடப்பட்டுள்ளது. உச்சரிப்பில் Social என்று சொல்லக்கூடியதாக இருக்கிறது. இத்தளத்தின் பரிசோதனை அனுபவத்திற்காக Verge நிறுவனத்திடம் மைக்ரோசாப்ட் கேட்டுக் கொண்டிருந்தது. Verge நிறுவனம் சோதனை செய்து அதன் விமர்சனத்தை வெளியிட்டுள்ளது.

• இதன் இடைமுகம் மூன்றாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இடது புறத்தில் Navigation வசதிகள் கொடுக்கப்பட்டுள்ளது. செய்திகள் Feed என வகைப் படுத்தப் பட்டுள்ளன. நமது செய்திகளைப் பகிர்ந்து கொள்ளும் வசதி கொடுக்கப்பட்டுள்ளது. (Update Status).

Social Search : இதில் சமூக வலைத்தளத்திலிருந்தே தேடிக் கொள்ளும் வசதியும் தரப்பட்டுள்ளது. நீங்கள் தேடும் போது வழக்கமான தேடல், நண்பர்களின் செய்திகள், ஒத்த சேவைகள் போன்றவற்றிலும் தேடி முடிவுகள் தரப்படும். எதாவது தேடிப் பெறப்பட்ட விசயத்தை அப்படியே உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியும். நண்பர்களின் தேடல்களையும் உங்கள் பக்கத்தில் பார்த்துக் கொள்ள முடியும். இது கூகிள்+1 பட்டன்களின் மூலம் பெறப்படும் Recommendation களை கூகிள் பிளஸ் தளத்தில் தேடுதலுக்குப் பயன்படுத்துவதைப் போல ஆகும்.

• தேடுதலுக்கு பிங் சேவை (Bing) பயன்படுத்தப்படும். நண்பர்கள் உங்களின் தேடல்களுக்கு கருத்துரை அளிக்கலாம்; லைக் செய்யலாம்; Tag செய்யலாம்.

Tagging – நீங்கள் ஒருவரின் செய்தியை Tag செய்யும் போது சம்பந்தப்பட்ட விசயம் உங்களின் Interest Tags பிரிவில் இடதுபுறத்தில் தோன்றும். இதனால் விரைவில் குறிப்பிட்ட விசயம் சார்ந்தவற்றைப் பார்த்துக் கொள்ள முடியும். உதாரணத்திற்கு Photography, Cinema, Arts.

• வலதுபுறத்தில் Video Party வசதி தரப்பட்டுள்ளது. இதில் நண்பர்களிடம் சாதாரண மற்றும் வீடியோ சாட்டிங் செய்து கொள்ள முடியும். மேலும் Youtube வீடியோக்களையும் பார்த்துக் கொள்ளலாம். இது முற்றிலும் HTML5 தொழில்நுட்பத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளதால் அடோப் பிளாஷ் சப்போர்ட் தேவைப்படாது.

இதில் குறைபாடுகளாக மற்ற சமுக வலைத்தளங்களில் இருக்கும் சில வசதிகள் இல்லை. அதாவது செய்திகளை குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் பகிர்தல், கூகிள் பிளசில் இருக்கும் வட்டங்கள் போல குருப்புகள் போன்றவை இல்லை. இதன் பரிசோதனை செயல்பாடுகள் முடிந்து மைக்ரோசாப்ட் விரைவில் வெளியிட ஆயத்தமாகி வருகிறது. பார்க்கலாம் சமூக வலைத்தளங்களின் போட்டி எப்படிப் போகிறதென்று!

Verge Review of Microsoft Socl

11 comments:

  1. புதிய செய்தி, விறுவிறுப்புடன் தந்தீங்க. நன்றி!

    ReplyDelete
  2. vaalththukkal.. elimaiyaana nadaiyil socialvalaithalam arimukaththirkku..

    ReplyDelete
  3. தகவலுக்கு நன்றி.
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  4. good article.please tell how to connect(updates via) blogger to google + .ur article i read .how to find java/htmlscricpt.please tell.

    ReplyDelete
  5. புதிய செய்தி. நன்றி ஐயா. ஆனால் மைக்ரோசாப்ட், பேஸ்பூக்கையும் கூகுள்+யும் ஈ அடிச்சான் காபி அடிக்கிறது :-).

    ReplyDelete
  6. MS has also acquired the domain social.com. So we can expect the final version of the service will be out with the brand name 'social' rather than 'socl'. Also rumors say that this socl will hav a tight integration with Windows 8 and WP8.

    ReplyDelete
  7. பாப்போம் பாப்போம் அடுத்த வருடம் பேஸ்புக்,கூகுள்+ இல்லே மைக்ரோசாப்ட் என்று!

    புதிய செய்தி..
    அன்புடன்
    P.ராஜா
    http://cinnapayan.blogspot.com

    ReplyDelete
  8. இது ரொம்ப பழைய செய்தி..பல மாதங்களுக்கு முன்பே இதெல்லாம் எல்லோருக்கும் தெரியும்:)

    ReplyDelete
  9. That news may be old, but all are dont know that matter

    ReplyDelete
  10. என் போன்றவர்களுக்கு இதெல்லாம் புதிய செய்திதான். தொடர்ந்து இதை போல பலவற்றை அறிமுகப்படுத்துங்கள் பொன்மலர். உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  11. நிறைய சமூக வலைத்தளங்கள் வருவதில் ஒரு ஆபத்து இருக்கிறது. எப்போதும் இந்த வலைத்தளங்களில் நேரத்தை செலவிடும் நண்பர்கள் எல்லாவற்றிலும் இணைவார்கள். பின்பு எதில் எந்த கான்டாக்ட் இருக்கிறது என்ற குழப்பம் வந்து stress form ஆகும். பொதுவாக மன அழுத்தத்திலிருந்து விடுபட இணைந்திருங்கள்: www.stressandyou.in

    ReplyDelete