May 30, 2011

பயர்பாக்ஸ் உலவியை கூகிள் குரோம் போல மாற்றும் நீட்சி FxChrome


FxChrome - Make Firefox Looks Like Chrome இணைய உலகில் அதிகம் பேரால் விரும்பப்படும் பயன்படுத்தப்படும் உலாவியாக பயர்பாக்ஸ் இருந்து வருகிறது. ஆனால் கூகிள் வெளியிட்ட குரோம் உலவி தற்போது இதற்கு சவாலாக வந்து கொண்டிருக்கிறது. இதன் வளர்ச்சியும் அபரிதமாக உள்ளது. பயர்பாக்ஸ் ரசிகர்களையும் மெல்ல மெல்ல இழுத்து பயர்பாக்சின் இடத்தைப் பிடிக்கும் வாய்ப்பு உள்ளதாக பேசப்படுகிறது. குரோமின் வளர்ச்சிக்குக் காரணம் அதன் எளிமையான வடிவமைப்பும் அதன் வேகமும் தான். ஒரே கணிணியில் எத்தனை உலாவிகளை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம் என்பது வேறு விசயம்.

பயர்பாக்ஸ் உலவியைப் பயன்படுத்துபவர்கள் குரோமின் இடைமுகத்தை விரும்பினால் அதற்கு ஒரு நீட்சி உள்ளது. இதன் பெயர் FxChrome. இதனை பயர்பாக்ஸ் உலவியில் நிறுவினால் பயர்பாக்ஸ் குரோமின் தோற்றத்தைப் போல மாறிவிடும். மெனுக்கள், டேப்கள், விண்டோக்கள், பட்டன்கள் போன்றவை குரோமில் இருப்பதைப் போல தோற்றமளிக்கும். ஆனால் நீங்கள் பயர்பாக்சில் தான் இருப்பீர்கள்.

பயர்பாக்சும் வேண்டும். குரோம் போலவும் வேண்டும் என வித்தியாசமாக நினைத்தால் உங்களுக்கு இந்த நீட்சி பயன்படும். ஆனால் இதனைப் போட்டு விட்டு குரோம் போல வேகம் வரவில்லை என்று சொல்லக் கூடாது. முக்கிய குறிப்பு என்னவென்றால் இந்த நீட்சி பயர்பாக்ஸ் பதிப்பு 4 இல் தான் செயல்படும்.

FxChrome - Make Firefox Looks Like Chrome
தரவிறக்கச்சுட்டி: https://addons.mozilla.org/en-US/firefox/addon/fxchrome/

தரவிறக்கியதும் Install Now கொடுத்து நிறுவுங்கள். பின்னர் பயர்பாக்ஸ் உலவியை ஒருமுறை Restart செய்தால் பயர்பாக்ஸ் உலவி குரோம் போல மாறியிருக்கும்.

6 comments:

  1. நல்ல உபயோகம் உள்ள பதிவு வளரட்டும் உங்கள் எழுத்துலக பதிவுகள் வாழ்க வளமுடன்
    subburajpiramu@gmail.com

    ReplyDelete
  2. நெத்தில துப்பாக்கிய வச்சி க்ரோம் க்கு வாடா னு சொன்னாலும் வராத பசங்களுக்கு இந்த நீட்சி பயன்படும் னு நெனைக்கிறேன்


    தகவலுக்கு நன்றி பொன்மலர்

    ReplyDelete
  3. நன்றி ராஜா, இன்பம் துன்பம்.

    நன்றி ஆனந்த் உங்கள் கருத்துக்கு

    ReplyDelete
  4. எனக்கு கொஞசம் கம்மிங்க. கொஞ்சம்
    கொஞ்சமா வர்ரேனுங்க!நன்றிங்க!

    ReplyDelete
  5. உங்கள் பயணுள்ள தகவலுக்கு நன்றி...

    ReplyDelete