May 5, 2011

பயர்பாக்ஸ் உலவியின் டேப்களை வண்ணமயமாக்க FabTabs


இணைய உலவிகளில் தற்போது டேப் (Tabs) பயன்பாடு அவசியமான ஒன்றாகி விட்டது. முன்பெல்லாம் இண்டர்நெட் எக்ஸ்புளோரர் (Internet Explorer) உலவியில் இணையம் பயன்படுத்தும் போது வேறு பக்கத்தை பார்க்க அல்லது மற்ற எதாவது இணைப்புகளை (Links) புதிய விண்டோவில் தான் பார்க்க முடியும். ஒவ்வொரு முறையும் புதிய விண்டோ திறக்கும் அனுபவம் எரிச்சலானது. திரும்பவும் எந்த விண்டோவிற்கு செல்வது என்ற குழப்பமும் அதிகம். இப்போது ஒரே நேரத்தில் வலை உலவியின் மென்பொருளுக்குள்ளே பல பக்கங்களைத் திறப்பது தான் Tabs எனப்படுகிறது.

பலரும் விரும்பும் இந்த டேப்ஸ் வசதி எல்லா வலை உலவியிலும் தற்போது இருக்கிறது. பல டேப்களில் வேலை செய்யும் போது குறிப்பிட்ட விசயமுடைய இணையப் பக்கம் எந்த டேபில் இருக்கிறது என்ற சிறிய குழப்பம் ஏற்படலாம்.ஒவ்வொரு டேபிற்கும் குறிப்பிட்ட வண்ணம் இருந்தால் சுலபமாக இருக்கும் அல்லவா? குறிப்பிட்ட பக்கத்தை எளிதாக அடையலாம். இதற்கு உதவுகிறது பயர்பாக்சின் ஒரு நீட்சி FabTabs.

இதன் மூலம் ஒவ்வொரு டேபையும் ஒவ்வொரு வண்ணத்தில் காட்ட முடியும். மேலும் இதன் சிறப்பம்சம் என்னவென்றால் நாம் பார்க்கும் இணையதளம் எந்த வண்ணத்தில் இருக்கிறதோ அதை ஒத்த வண்ணத்தில் மேல்புறத்தில் டேபின் வண்ணத்தையும் அமைக்கும்.


இந்த நீட்சி நாம் பார்க்கும் இணையதளத்தை முழுதும் சோதித்து அதில் எந்த வண்ணம் அதிக அளவில் பயன்படுத்தப் பட்டுள்ளது என அறிந்து அதிலிருந்து டேபின் வண்ணத்தைத் தீர்மானிக்கிறது.

பல டேப்களில் வேலை செய்வோருக்கு குறிப்பிட்ட இணையதளத்தை உடனே கண்டறிய உதவும் இந்த நீட்சி வேலையை எளிதாக்குகிறது.

தரவிறக்கச்சுட்டி : Download FabTabs Addon for Firefox

3 comments:

  1. பகிர்வுக்கு நன்றி பொன்மலர் அவர்களே...!

    ReplyDelete
  2. ரொம்ப பயனுள்ள பதிவு...பகிர்வுக்கு நன்றி பொன்மலர்...

    ReplyDelete