May 16, 2011

கணிணியின் Font களை ஒரே நேரத்தில் முன்னோட்டம் பார்க்க உதவும் இணையதளம்.


நமக்குப் பிடித்த ஏராளமான எழுத்துருக்களை (Fonts) கணிணியில் நிறுவி வைத்திருப்போம். போட்டோ ஸ்டுடியோ, DTP கடைகளில் உள்ளவர்களும் அதிகமான எண்ணிக்கையில் கணிணியில் எழுத்துருக்களை வைத்திருப்பார்கள். வேர்ட் தொகுப்பில் எதாவது கோப்பொன்றை தட்டச்சிட்டு வருகையில் விருப்பமான எழுத்துருக்களை சிரமப்பட்டு தேட வேண்டியதாக இருக்கும். எந்த டிசைனில் இருக்கும் எழுத்துரு நமக்குப் பொருத்தமாக இருக்கும் என்பதை அறிய ஒவ்வொரு எழுத்துருவாக தேர்வு செய்து பார்க்க வேண்டும்.

எதாவது ஒரு எழுத்துரு என்றால் பரவாயில்லை. எல்லாவற்றையும் பார்ப்பதற்குள் உங்கள் நேரம் தான் கரைந்துவிடும். ஒவ்வொரு எழுத்துருவாக பார்க்கும் சிரமத்தைத் தவிர்க்க இணையதளம் ஒன்று உதவுகிறது. Wordmark.it என்ற இணையதளம் நமது கணிணியில் நிறுவப் பட்டுள்ள அத்தனை எழுத்துருக்களையும் ஒரே நேரத்தில் முன்னோட்டம் பார்க்க உதவுகிறது. (Preview Fonts)

இந்த இணையதளத்திற்குச் சென்று Load Fonts என்பதைக் கிளிக் செய்தால் போதும். சில வினாடிகளில் அகர வரிசைப்படி உங்கள் கணிணியின் எழுத்துருக்கள் அதன் முன்னோட்டத்துடன் தோன்றும். இதன் மூலம் நமக்குப் பொருத்தமான எழுத்துருவை எளிதாக கண்டறிந்து பயன்படுத்த முடியும்.


மேலும் இதில் குறிப்பிட்ட எழுத்துருக்களை மட்டும் வடிகட்டி பார்க்க முடியும். கருப்பு பிண்ணணியிலும் வெள்ளை நிறப் பிண்ணணியிலும் எழுத்துருக்களை பார்க்க முடியும். எழுத்துருவின் அளவை கூட்டியும் குறைத்தும் பார்த்துக் கொள்ள முடியும். இது இணைய சேவை எனினும் ஒரு முறையாவது முயற்சித்துப் பார்க்கலாம்.

இணையதள முகவரி : http://wordmark.it/

7 comments:

  1. தகவலுக்கு மிக்க நன்றி பொன்மலர் அவர்களே..!

    ReplyDelete
  2. பயனுள்ள புதுமையானத் தகவலை பகிர்ந்திருக்கிரீர்கள் நன்றி

    ReplyDelete
  3. தேவையான தகவல் பொன்மலர்.

    ReplyDelete
  4. தங்கள் வருகைக்கு நன்றி தங்கம்பழனி, பனித்துளி சங்கர், பாவா மற்றும் குணசீலன்

    ReplyDelete
  5. பகிர்வுக்கு மிக்க நன்றி

    ReplyDelete