May 9, 2011

BSNL 3G இண்டர்நெட்டை மொபைலில் பயன்படுத்துவது எப்படி?


தமிழ்நாட்டில் 3G இண்டர்நெட் சேவையை அனைத்து நிறுவனங்களும் அறிமுகப்படுத்தி விட்டன என்றாலும் அனைத்து நகரங்களிலும் முழுமையாக இன்னும் வரவில்லை. இந்த சேவையில் முந்திக் கொண்ட BSNL நிறுவனம் நகரங்கள், மாவட்டங்கள், முக்கிய ஊர்களில் நன்றாக சேவையை வழங்குகிறது. 3G சேவையை பயன்படுத்த இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று 3G வசதியுடைய மொபைல்கள். இரண்டாவது 3G டேட்டா கார்டுகள் என அழைக்கப்படும் யூஎஸ்பி மோடம்கள் (Data cards / Usb Modems )

நம்மிடம் 3G மொபைல் போன் இருப்பின் டேட்டா கார்டு தேவையில்லை. மொபைல் போனிலியே அதிவேக இண்டர்நெட் இணைப்பு மூலம் பல்வேறு சேவைகளைப் பயன்படுத்தமுடியும். 3G வசதியுடைய மொபைல்கள் ருபாய் 5000 லிருந்து கிடைக்கின்றன.

எப்படிப் பயன்படுத்துவது?

1. உங்களிடம் 3G மொபைல் இருப்பின் புதியதாக ஒரு Bsnl 3G சிம் வாங்கவும்.
இதன் விலை 180 ருபாய். இதில் 200 Mb பயன்பாடும் 120 ருபாய் அழைப்புக்கான பேலன்சும் கிடைக்கும்.

2. ஏற்கனவே உங்களிடம் BSNL சிம் இருப்பின் 3G க்கு மாற இந்த பதிவைப்
பாருங்கள். அடுத்து மொபைலுக்கான நான்கு இண்டர்நெட் செட்டிங்க்ஸ் பெற வேண்டும். (GPRS Settings or 3G Settings).இதற்கு முன் உங்கள் கணக்கில் குறைந்தது 50 ருபாய் இருக்க வேண்டும்.

BSNLNET, BSNLMMS, BSNLLIVE, BSNLSTREAM

ஒவ்வொரு மொபைல்களில் 3G சிம் போட்டவுடன் தானாகவே செட்டிங்க்ஸ்
கிடைத்து விடுகிறது. கிடைக்கப் பெறாதவர்கள் உங்கள் மொபைல் நிறுவனம் மற்றும் ஓரு இடைவெளி விட்டு மாடல் எண் ஆகிய இரண்டையும் குறுந்தகவலாக 58355 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டும்.
எ.கா NOKIA 5230 -> 58355

மேலும் மாற்று வழியாக ஒவ்வொரு தனித்தனி செட்டிங்க்ஸ் ஆகவும் பெறலாம். NET, MMS, LIVE, STREAMING என்று தனித்தனியாக 58355 என்று அனுப்பி பெறலாம்.

மேற்கண்ட வழிகளில் சில மொபைல்களுக்குக் கிடைக்காமலும் இருக்கலாம். அப்படியெனில் 1503 என்ற எண்ணுக்கு போன் செய்து 3G பிரிவில் சொல்லவும். அவர்கள் குறிப்பிட்ட மாடலுக்கு ஏற்றபடி அனுப்புவார்கள்.

டிஸ்கி : நான் முதலில் ஒரு மாதம் Nokia 5230 மொபைலில் பயன்படுத்தினேன். இந்த மொபைலில் சிம் போட்டவுடன் 3G செட்டிங்க்ஸ் உடனே வந்தது. அடுத்ததாக Samsung Omnia i900 மொபைலில் போட்டவுடன் எனக்கு வழக்கமான BSNL ன் 2G க்கான GPRS செட்டிங்க்ஸ் மட்டுமே வந்தது. ஏன் என்றால் GPRS இல் BSNL இன் Access Point “Bsnl_Gprs” என்றும் 3G யில் “bsnlnet” என்றும் இருக்கும்.

எனவே SAMSUNG SGH-I900 என்று 58733 எண்ணுக்கு அனுப்பினேன். இது சரியான பார்மேட் அல்ல என்று செய்தி வந்தது. அடுத்து வாடிக்கையாளர் சேவைக்கு போன் செய்தேன். அவர்கள் அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னார்கள். ஆனால் வரவில்லை. என்னடா இது சோதனை என்று ஒரு நாள் கழித்து சரி 2G யாக இருந்தாலும் பரவாயில்லை என்று கனெக்ட் செய்தேன். உடனே ஒரு ஆச்சரியம். 2G யான EDGE இல் தான் கனெக்ட் ஆகிறது என்று நினைத்தால் 3G யில் கனெக்ட் ஆகி 3G என்று காட்டியது. மொபைலில் 3G வசதியிருந்து உங்கள் ஊரில் 3G டவர் கிடைத்தால் GPRS இல் கனெக்ட் செய்தால் 3G யில் கனெக்ட் செய்யப்படும் என்று அப்போது தான் புரிந்து கொண்டேன்.

3.செட்டிங்க்ஸ் வந்தவுடன் சேமித்துக் கொள்ளவும். சில மேம்படுத்தப்பட்ட மொபைல்களில் தானாகவே சேமித்துவிடும். மொபைலை ஒரு முறை சுவிட்ச் ஆப் செய்து ஆன் செய்யவும்.அடுத்து உங்கள் மொபைலுக்கான செட்டிங்க்ஸ் இயல்பாக சேமிக்கப்பட்டு Default Connection ஆக இருக்கும். நீங்கள் உறுதி செய்ய உங்கள் மொபைலில் Settings->Connections / Configurations / Destinations என்ற மெனுக்கள் இருப்பின் Access Point என்ற இடத்தில் (bsnlnet அல்லது bsnl_gprs) என இருக்கிறதா என்று சரிபார்க்கவும். ( In my Nokia 5230, Settings-> Connectivity -> Destinations -> Internet -> BSNLNET Access Point )


4.அடுத்து உங்கள் மொபைல் நோக்கியாவாக இருந்தால் 0 (Zero) பட்டனை மூன்று வினாடிகள் அழுத்திப் பிடித்தால் இண்டர்நெட் திறக்கப்படும். அதில் சரியாக வலைத்தளங்கள் வருகிறதா என்று பாருங்கள். மேலும் உங்கள் மொபைலில் வேறு ஏதேனும் உலவிகள் நிறுவப்பட்டிருந்தால் அதிலும் பார்க்கலாம் (Opera Mobile or Opera Mini) . சில மொபைல்களில் உலவியில் நுழையும்போது எந்த கனெக்சன் மூலம் நுழைகிறீர்கள் என்பது கேட்கப்படும். இல்லாவிட்டால் Default Connection இல் எது இருக்கிறதோ அதில் கனெக்ட் செய்யப்படும். வெற்றிகரமாக முடிந்தால் மொபைலின் மேல்புறத்தில் 3.5G அல்லது எதாவது ஒரு குறி காட்டப்படும்.

5.சரியாக வராவிட்டால் Settings-> Network->Network Mode-> UMTS என்று சரிபார்க்கவும். UMTS என்பது 3G க்கான நெட்வொர்க் அமைப்பாகும். மொபைலில் பணமிருக்கிறதா என்று பார்த்துக் கொள்ளவும்.

6.அடுத்து முக்கியமான விசயம் என்னவென்றால் இண்டர்நெட்டுக்கு என்று தனியாக காசு போடாமல் இண்டர்நெட்டைத் திறக்காதீர்கள். இல்லையெனில் உங்களின் மெயின் பேலன்ஸ் சொற்ப நிமிடங்களில் காணாமல் போய்விடும்.

டிஸ்கி: என்னுடைய சிம்மில் 50 ருபாய் இருந்தது. ஜிமெயில் சில நிமிடம் பார்த்து விட்டு பிளாக்கர் தளத்தைத் திறந்தேன். திடிரென்று இண்டர்நெட் துண்டிக்கப்பட்டது. நான் விழித்துக் கொண்டே பேலன்ஸ் சரிபார்த்தால் 0 என்று காட்டியது. இத்தனைக்கும் 8 நிமிடம் தான் இருக்கும். அதுவும் எப்படி, ஒரு பதிவை முடித்து போஸ்ட் பட்டனை அழுத்தும் போது. இது ஒன்று தான் குறை. 1 Mb க்கு 2 ருபாய் கணக்கில் எடுத்துவிட்டார்கள்.

7.இதற்காக BSNL இல் இப்போது புதிய ரீசார்ஜ் ஆபர்கள் வந்திருக்கின்றன. இவற்றை ரீசார்ஜ் செய்யும் முன் உங்கள் மெயின் பேலன்சில் 50 ருபாய் இருக்க வேண்டும்.
Rs.103 – 250 Mb.
Rs.203 – 500 Mb.
Rs.404 – 1 GB
Rs.606 – 1 GB in Day + 5 GB in Night

இதனை மற்ற நிறுவனங்களின் 3G கட்டணத்தோடு ஒப்பிடும் போது குறைவாகத் தான் உள்ளது. Bsnl தனது அன்லிமிடெட் பிளானை நிறுத்திவிட்டது. அதனால் அளந்து அளந்து பயன்படுத்த வேண்டியிருந்தது.

டிஸ்கி : எனக்கு இண்டர்நெட் பயன்பாடு ருபாய் 103 இல் ஒரு நாளும் ருபாய் 203 இல் இரண்டு நாளும். ருபாய் 606 இல் 15 நாட்களே வந்தன.

ஆனால் இதில் நல்ல விசயம் என்னவென்றால் இண்டர்நெட் இணைப்பு நல்ல வேகத்தில் கிடைத்தது. BSNL பிராண்ட்பேண்டை விட அதிக வேகத்தில் 2 Mbps வேகத்தில் வலைத்தளங்கள் திறக்கப்பட்டன. மிக முக்கியமாக டவுன்லோடு ஆகும் வேகம் ஒரு வினாடிக்கு 100 Kb யாகவும் அப்லோடு வேகம் 40 Kb யாகவும் சர்வ சாதாரணமாக கிடைத்தது.

பலர் எதிர்பார்க்கும் விசயம் BSNL மறுபடியும் அன்லிமிடெட் கொண்டு வருமா என்பதே. மற்ற நிறுவனங்களின் போட்டி மற்றும் சந்தை வளர்ச்சி காரணமாக அன்லிமிடெட் சேவை விரைவில் வரலாம்.

அடுத்த பதிவில் 3G மொபைல் இண்டர்நெட்டை கணிணியில் இணைத்துப்
பயன்படுத்துவது எப்படி என்று எழுதுகிறேன். இது பற்றிய உங்கள் அனுபவங்களையும் கருத்துகளையும் பதிவு செய்தால் நலமாக இருக்கும்.

"விண்டோஸ் 7 இயங்குதளத்தை விண்டோஸ் 8 ஆக மாற்ற Transformation Pack" என்ற என்னுடைய கட்டுரை தினத்தந்தி நாளிதழில் இன்று வெளியாகியுள்ளது. அனுமதியும் கேட்கவில்லை. பெயரையும் போடவில்லை.

See Also :
1.தமிழ்நாட்டில் 3G இண்டர்நெட் சேவையும் நிறுவனங்களின் கட்டண விபரங்களும்
2.BSNL 2G, 3G டேட்டா கார்டுகளுக்கு இனி அன்லிமிடெட் இல்லை!
3.BSNL 2G லிருந்து 3G க்கும் 3G லிருந்து 2G க்கும் மாறுவது எப்படி?

16 comments:

  1. Migavum thelivaga irukirathu Nandri..............

    ReplyDelete
  2. நானும் இந்தியா வந்தால் BSNL சிம் தான் பயன்படுத்துவது என்று நினைத்துக்கொண்டிருந்தேன். நல்ல உபயோகமான தகவல் நண்பா.

    ReplyDelete
  3. நல்ல தகவல்...
    நீங்க சீசனுக்கு ஏத்தமாதிரி பதிவு எழுதுறிங்க மேடம் .. வாழ்துக்கள்

    நான் 3g விலை குறையட்டும் என காத்துகொண்டிருக்கிறேன் ..

    அப்புறம் விண்டோஸ் 7 to 8 அந்த கிரிடிட் லாம் உங்களுக்குத்தான் மேடம் . தகவலுக்கு நன்றி

    ReplyDelete
  4. எங்கூரில் 100 mbக்கு 10 டாலர். அநியாயவிலை.

    ரியாஸ், நியுசிலாந்து.

    ReplyDelete
  5. மிகவும் தெளிவாக சொல்லியிருக்கீங்க நண்பரே.,!! பயனுள்ள தகவல் பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete
  6. அனைத்து நண்பர்களுக்கும் நன்றிகள்.

    ReplyDelete
  7. நல்ல தகவல் நன்றி ,

    ReplyDelete
  8. naan 5230 use pantren . 3g network irukkum pothu call pesum pothu option open panna share video live apadi endru oru option varuthu . but front camera kidaiyathu . 5230 la video call enabled ah ??

    ReplyDelete
  9. nokia 5230 no video call supported because no secondary camera

    ReplyDelete
  10. இதைத்தான் தேடிக்கொண்டிருந்தேன்...இன்னும் பல இது சம்பந்தமாக எழுதுங்கள்..அப்படியே 3g மொபைல்களில் எது பெஸ்ட்..? என்றும் wi-fi ஃபோன்களை பயன்படுத்தும் முறை பற்றி எழுதுங்களேன்

    ReplyDelete
  11. தினத்தந்தி has stolen your article and published in their paper...it is very sad.......don't worry..keep writing your post...you will get your reward.....

    ReplyDelete