தகவல் தொழில்நுட்பத்தில் அலைபேசிகளின் பங்கு முக்கியமானது. இப்போது நவீன ஸ்மார்ட்போன்களின் வருகை பலவிதமான சேவைகளை மொபைலில் பயன்படுத்தும் படியாக உள்ளது. இணையம், செயலிகள், விளையாட்டுகள் மற்றும் இதர பயன்பாடுகள் என மொபைல் துறையில் மென்பொருளாக்கம் வளர்ந்திருக்கிறது. ஆப்பிள், மைக்ரோசாப்ட், கூகிள் போன்ற பெரிய ஜாம்பவான்களும் மொபைல் துறையில் நுழைந்து தங்களுக்கென இத்துறையில் சந்தை வாய்ப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். மாறி வரும் காலகட்டத்தில் சாதாரண மொபைல் போனிலிருந்து நவின ஸ்மார்ட் போன்களையே பலரும் விரும்புகின்றனர்.
மொபைல்களில் பயன்படுத்த மென்பொருள்கள், விளையாட்டுகள் போன்றவற்றை எங்கே தரவிறக்குவது? ஒவ்வொரு மொபைல் நிறுவனமும் தனக்கென ஒரு கடையை வைத்துள்ளது. இவர்களின் இணையதளத்தின் மூலம் மொபைலுக்குத் தேவையான மேம்பட்ட மென்பொருள்களை இலவசமாகவும் சில கட்டணமாகவும் பெறமுடியும்.
1. GetJar
மொபைல் பயன்பாடுகளுக்குச் சிறந்த தளமாகும். இணைய உலவிகள், மென்பொருள்கள், விளையாட்டுகள், ஆபிஸ் பயன்பாடுகள், PDF போன்ற பயன்பாடுகளை தலைப்பு வாரியாக வைத்துள்ளார்கள். இதில் ஆப்பிள் ஐபேடுக்கும் கூட மென்பொருள்களைப் பெற முடியும். எளிமையான பயன்பாடுகள் முதற்கொண்டு Google map, Google Earth போன்ற அட்வான்ஸ்டு மென்பொருள்களையும் இலவசமாக தரவிறக்கலாம்.
http://getjar.com
2.Mobile9.com
இந்த தளத்தில் சாதாரண மொபைலில் இருந்து எல்லாவகையான மொபைல்க்கும் பயன்பாடுகளைப் பெற முடியும். இத்தளத்தில் லட்சக்கணக்கான மொபைலுக்கான மென்பொருள்கள் உள்ளன. மேலும் புதிது புதிதாக பயன்பாடுகள் ஏற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றன. மொபைலுக்குத் தேவையான Themes, Ringtones, Wallpapers, Videos, Screensavers, Java Softwares, Games என அனைத்துமே ஒரே இடத்தில் இருக்கின்றன. போனின் மாடலைக் குறிப்பிட்டால் போதும் அனைத்து வகையான பயன்பாடுகளும் ஒடிவரும்.
http://mobile9.com
3.Nokia OVI Store
இது நோக்கியா நிறுவனத்தின் இணையதளமாகும். நோக்கியா போனைப் பயன்படுத்துபவர்கள் இத்தளத்தின் மூலம் மொபைலுக்குத் தேவையான எல்லாவற்றையும் பெறமுடியும். இதில் தரவிறக்கம் செய்ய நோக்கியா ஸ்டோர் கணக்கொன்றைத் தொடங்க வேண்டும். நீங்கள் நோக்கியா மொபைலிலிருந்து கூட இத்தளத்தில் நுழைந்து தரவிறக்கம் செய்ய முடியும்.
http://store.ovi.com
4. Android Market
கூகிளின் மென்பொருளான ஆண்ட்ராய்டு போன்களைப் பயன்படுத்துவோர்கள் இத்தளத்தின் மூலம் இலவச மற்றும் கட்டண பயன்பாடுகளைத் தரவிறக்கலாம். இத்தளத்திலும் லட்சக்கணக்கான பயன்பாடுகள் உள்ளன. பயன்பாட்டு வகைகளின் மூலம் எளிதாக தேர்வு செய்ய முடியும். மேலும் ஆண்ட்ராய்டு இயங்குதளம் உள்ள டேப்ளட் பிசி போன்ற இதர கருவிகளுக்கும் தரவிறக்கிக் கொள்ளலாம். கவனிக்க வேண்டிய விசயம் நீங்கள் எந்த வெர்சன் பயன்படுத்துகிறிர்களோ அதற்கேற்ப தரவிறக்க வேண்டும். வெர்சன் மாறுபட்டால் சில பயன்பாடுகள் இயங்காது.
http://market.android.com
ஆண்ட்ராய்டு மார்க்கெட் அல்லாமல் சில தளங்களும் ஆண்ட்ராய்டு மென்பொருள்களை இலவசமாகத் தருகின்றன. உபயோகமான சில தளங்கள்.
http://www.freewarelovers.com/android
http://freeandroidapplications.net/
http://www.androidfreeware.net/
5. Microsoft Windows Mobile OS
மைக்ரோசாப்டின் மொபைல் இயங்குதளமான Windows Mobile OS கொண்ட போன்களைப் பயன்படுத்துபவர்கள் மைக்ரோசாப்டின் Mobile Market இணையதளத்திலிருந்து பயன்பாடுகளைத் தரவிறக்கலாம். இதனை PocketPC என்று சொல்கின்றனர். ஏனெனில் முழுதும் விண்டொஸ் இருக்கும் கணிணியைப் போலவே செயல்படுகிறது. இதில் சில பயன்பாடுகளை நிறுவும் போது கணிணியிலிருந்து தான் மொபைலில் நிறுவ முடியும். சில மென்பொருள்களை கணிணியில் நிறுவி கணிணி வழியாக மொபைல் அமைப்புகளை மேற்கொள்ளலாம். உதாரணமாக Registry Editor.
மொபைல் உதாரணங்கள் – Samsung Omnia Series, Sony Ericson Xperia X1
http://marketplace.windowsphone.com
விண்டோஸ் பயன்பாடுகளை தரவிறக்க மைக்ரோசாப்டின் மார்க்கெட் தளத்தை விட சிறப்பான இணையதளம் மற்றொன்று இருக்கிறது.
http://www.freewarepocketpc.net/
6.Apple Store
ஆப்பிள் நிறுவனத் தயாரிப்புகளான ஐபோன் மற்றும் ஐபேடு பயன்படுத்துவர்கள் ஆப்பிளின் ஸ்டோர் இணையதளத்திலிருந்து பயன்பாடுகளை இலவசமாக தரவிறக்கிக் கொள்ளலாம்.
http://store.apple.com/us
இதைத் தவிர மற்றவற்றைப் பயன்படுத்தி உள்ளதால் இதைக் கடைசியாக எழுதியுள்ளேன். ஐபோன் ஒன்று கூட சிக்கவில்லை இதுவரை. மற்றவை எல்லாம் நான் பயன்படுத்திப் பார்த்த அனுபவத்தில் குறிப்பிட்டுள்ளேன்.மொபைல் பயன்படுத்துபவர்கள் தயவு செய்து தங்கள் கருத்துகளைக் கூறவும்.
Tweet | |||
பயன் உள்ள பதிவு .முயற்சி செய்து பார்க்கிறோம்
ReplyDeleteநன்றி சிபி
ReplyDeleteAdd Zedge also..
ReplyDeleteIt has more applications than Mobile9
ஐயா, நான் நோக்கியா 6300 பயன்படுதுகிறேன். ஆன்லைனில் ஒப்ராவில் தமிழ் யுனிகோட் சைட்கள் தெரிய ஒப்ராவை கெட்ஜார்,மொபைல்9 இறக்கி இன்ஸ்டால் செய்தேன் அது எர்ரர் மெஸ்சேஜ் தந்தது. சரியானப்படி ஒப்ரா சாப்ட்வேர் ஒரு இணையத்தளத்தில் மட்டும் கிடைத்தது அந்த வெப்சைட் (http://www.cell11.com)இதுதான் இது வேகமாக கேபி செலாவாகிறது. கெட்ஜாரில் பினு பிரோசர்(தினகரன்) மற்றும் அகரம் சாப்ட்வேர் நியுஸ்ஹன்ட் ரொம்ப பயனுள்ளது. பினு பிரோசர் ரொம்ப சிக்கனமான, வேகமான பிரோசர் தமிழ் சப்போர்ட் பன்னாத செல்பேசிகளிலும் இந்த நான்கு சாப்ட்வேர்களையும் பயன்படுத்தலாம்.
ReplyDeleteThanks for your info SHAFIUDEEN
ReplyDeleteGoood information sir,
ReplyDeleteநவீன கைபேசி மென்பொருள்களைப் பற்றிய விளக்கத்திற்கு நன்றி.
ReplyDeleteகைபேசிகளுக்கான மென்பொருள் சந்தைகளைப் பற்றிய விளக்கத்திற்கு நன்றி.
ReplyDelete