May 6, 2011

பிளாக்கர் பதிவுகளில் Google Buzz பட்டனை இணைப்பது எப்படி?


google+buzzஇணையத்தில் நமது எண்ணங்கள், ஒளிப்படங்கள், வீடியோ போன்றவற்றை பகிர்ந்து கொள்ள உதவும் சமூக வலைத்தளங்களைப் போல ஒரு சேவை தான் கூகிளின் பஸ் (Google Buzz). பலரின் வலைத்தளத்தில் பதிவின் எதாவது ஒரு இடத்தில் கூகிள் பஸ் பட்டனைப் பார்த்திருக்கலாம். இதன் மூலம் படிக்கும் வாசகர்கள் பட்டனைக் கிளிக் செய்து அவர்களின் கூகிள் பஸ் பக்கத்தில் நமது பதிவைப் பற்றி பகிர்ந்து கொள்ள முடியும். இந்த சேவையை குறிப்பிட்ட எண்ணிக்கையில் பலர் பயன்படுத்தி வருவதனால் நமது வலைப்பூவின் இணைய வரத்தை (Web Traffic) அதிகரிக்க முடியும்.

பிளாக்கரில் எப்படி இணைப்பது?

1.முதலில் பிளாக்கர் தளத்தில் நுழைந்து Design -> Edit HTML செல்லவும்
2. வலைப்பூவின் நிரல்வரிகள் காட்டப்படும். பிறகு வலது மேல்புறம் இருக்கும் Expand widget Template என்ற கட்டத்தைக் கிளிக் செய்து கொள்ளவும்.
3. <data:post.body> என்ற வரியைத் தேடிப் பிடிக்கவும்.

4.பதிவின் மேல்புறத்தில் அதாவது முதல் வரி ஆரம்பிக்கிற பகுதியில் வேண்டுமெனில் <data:post.body/> க்கு மேலெ கீழுள்ள கோடிங்கை காப்பி செய்து போட வேண்டும். பதிவின் அடியில் வேண்டுமெனில் <data:post.body/> க்கு கீழே காப்பி செய்யவும்.

<b:if cond='data:blog.pageType == "item"'>
<div style="padding: 4px; float: right;">
<a title="Post on Google Buzz" class="google-buzz-button" href="http://www.google.com/buzz/post" expr:href="data:post.url" data-button-style="normal-count" data-locale="en"></a>
<script type="text/javascript" src="http://www.google.com/buzz/api/button.js"></script>
</div>
</b:if>


5. இந்த முறையில் பதிவின் வலது மேல்புறம் (Top Right) வருமாறு அமைக்கப்பட்டுள்ளது. பதிவின் இடதுபுறம் (Top Left )வேண்டுமெனில் float: left என்பதை மாற்றிக்கொள்ளவும்.

google+buzz+button+in+blogger+posts
6. ஒவ்வொரு வலைப்பூவில் முகப்புப் பக்கத்தில் 5 பதிவுகள் வருமாறு வைத்திருப்பார்கள். முகப்புப் பக்கத்தில் உள்ள பதிவுகளிலும் இந்த பட்டன் தெரிய வேண்டுமெனில் சிவப்பு நிறத்தில் உள்ள முதல் வரியையும் கடைசி வரியையும் நீக்கி விடுங்கள்.

7. கீழ்க்கண்டவாறு சிறிய பட்டன் (Button style) வேண்டும் என்பவர்கள் data-button-style=”small-count” என்று மாற்றிக்கொள்ளவும்.
google+buzz+small+button
உங்கள் பிளாக்கர் வலைத்தளத்திற்கு கூகிளின் பஸ் தளத்திலிருந்தும் இந்த பட்டனை சேர்க்க முடியும்.

5 comments:

  1. .com/img/b/R29vZ2xl/AVvXsEj-CWw0xTP75V552iK76OP87Jn9t-axDEG_vfxJtTxTMCvWkxjPd5cRBx87wavDEMhg8o0qyzAbPyBHYSvKrZgqpVtFe02sNN38WpBpXnx0Tkdopwx0oybDjhXpo4cIzw/s45-c/
  2. head

    பயனுள்ள பகிர்வு நண்பரே..! ஆனால் என்ற வரியைத் தேடிப் பிடிக்கவும். இதில் பிழை உள்ளது. என்பதே சரியானதாகும்.

    ReplyDelete
  3. Padmini+13

    நல்ல தகவல்களை கூறியுள்ளீர்கள் நன்றி.
    இதுபோன்ற பல பிரச்னைகள் புதிதாக புளோக்கரில் பிரவேசமாகியிருக்கும் எழுத்தாளர்களுக்கு பயன் உடையதாக இருக்கும் உங்கள் வழி முறைகள். நன்றி

    ReplyDelete
  4. blogger_logo_round_35

    அருமையான தகவல்...
    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. blogger_logo_round_35

    google buzz button-ஐயும் இணைத்துவிட்டேன்....
    thank u frind,
    Rajeshnedveera,
    maayaulagam-4u.blogspot

    ReplyDelete