நம்மிடம் இருக்கும் ஒளிப்படங்களை சிடி/டிவிடியில் அப்படியே புகைப்படமாக ஏற்றினால் டிவிடி பிளேயரில் தெரியும் வசதியிருக்கிறது. ஆனால் அவைகளை ஒவ்வொன்றாக கிளிக் செய்து பார்க்க வேண்டியிருக்கும். எல்லா ஒளிப்படங்களும் சீரான இடைவெளியில் பிண்ணணி ஒலியுடன் ஒவ்வொன்றாக காட்டப்பட்டால் நன்றாக இருக்கும். இதனை SlideShow என்பார்கள். அதே நேரத்தில் ஒளிப்படங்கள் வரிசையாகவும் ஒவ்வொன்றும் ஒவ்வொரு எபெக்ட்டுடன் வந்தால் சிறப்பாக இருக்கும். மேலிருந்து படம் வருவது, கட்டம் கட்டமாய் வருவது போன்ற மாதிரி வருவதை Transition Effect என்று சொல்வார்கள்.
பல்வேறு புகைப்படங்களை வைத்து அவற்றை வீடியோவாக மாற்ற உதவும் இலவச மென்பொருள் ஒன்று தான் PhotoFilmStrip. எளிமையாகவும் பல்வேறு வடிவங்களில் வீடியோவினை இதில் உருவாக்க முடியும். முதலில் இதனைத் தரவிறக்கி நிறுவிக் கொள்ளவும். New Project மெனுவில் சென்று உங்களுக்குத் தேவையான புகைப்படங்களைச் சேர்க்கவும். இதில் ஒளிப்படங்களை அது இருக்கும் இடத்திலிருந்தே இழுத்து விட்டால் கூட போதுமானது. (Drag and Drop)
சேர்க்கப்பட்ட ஒவ்வொரு ஒளிப்படங்களும் வரிசையாக கீழ்புறத்தில் தோன்றும். அதைக் கிளிக்கினால் பெரிதாக மேலே தோன்றும். படத்தில் தேவையில்லாத பகுதிகளை வெட்டிக் கொள்ள முடியும். (Crop Pictures) . ஒவ்வொரு ஒளிப்படமும் எந்த எபெக்டில் தோன்ற வேண்டும் என்று அமைத்துக் கொள்ளலாம். பிண்ணணியில் எதாவது பாடல் ஓட வேண்டுமெனில் சேர்க்கலாம். Subtitle என்பதில் அந்த ஒளிப்படத்தைப் பற்றிய குறிப்பைக் கொடுத்தால் வீடியோவின் அடியில் தோன்றும். உருவாக்கப்படும் வீடியோ எவ்வளவு நேரம் ஒடும் என்பதை மென்பொருளின் Status Bar இல் தெரியும்.
இறுதியில் வீடியோ வகைகளான FLV, Mp4, Avi போன்றவற்றில் தேர்வு செய்யலாம். மேலும் Full HD , VCD, Pal, NTSC போன்ற டிவிடி கோடக் (Codecs) வசதியின் மூலம் வீடியோ தரத்தை அமைக்கலாம். உங்கள் புகைப்படங்களின் அளவு, கணிணியின் வேகம் போன்றவற்றைப் பொறுத்து சில நிமிடங்களில் வீடியோ உருவாக்கப்படும்.
தரவிறக்கச்சுட்டி : Download PhotoFimStrip
Tweet | |||
என் நண்பர் இந்த மென்பொருளைத்தான் கேட்டுக்கொண்டிருந்தார், பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteIF YOU ARE USING WINDOWS IT HAS A SOFTWARE CALLED WINDOWS MOVIE MAKER..
ReplyDeleteIS IT DIFFERENT FROM THIS?
இதை இதைதான் தேடிக்கிட்டு இருந்தேன் - தகவலுக்கும் பகிர்வுக்கும் நன்றி
ReplyDeleteமிக்க நன்றி சகோ..
ReplyDeleteநானும் இதை தான் தேடிக்கொண்டிருந்தேன்
பயனுள்ள தகவலுக்கு நன்றி..
தற்போது முயற்சிக்கிறேன்..
நன்றியுடன்
சம்பத்குமார்
//SuryaJeeva
ReplyDeleteIF YOU ARE USING WINDOWS IT HAS A SOFTWARE CALLED WINDOWS MOVIE MAKER..
IS IT DIFFERENT FROM THIS? //
இந்த மென்பொருள் Windows Movie Maker போன்றது தான். ஆனால் இதில் எளிமையாகவும் பல வீடியோ வகைகளிலும் சேமிக்க முடியும் என்பது சிறப்பு.
புரிஞ்சிடுச்சு, விண்டோஸ் movie maker வெறும் wmv files மட்டும் தான் தரும்..
ReplyDeleteபகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteஎக்ஸலண்ட். இதுபோன்ற ஒரு சாஃப்ட் வேரைத்தான் நான் தேடிக் கொண்டிருந்தேன். கல்யாணப் படங்களை வீடியோவாக்கித் தந்தால் அனைவரும் மகிழ்வார்கள். பயனுள்ள பகிர்வுக்கு நன்றி...
ReplyDeleteI got lot of excellent from your magazine
ReplyDeleteபயனுள்ள பகிர்வு....
ReplyDeleteசூப்பர் போஸ்ட்..!!
ReplyDeleteஉங்களிடம் இருந்து இன்னும் நிறைய தொழில்நுட்ப்ப் பதிவுகளை எதிர்பார்க்கிறோம். !!பகிர்வுக்கு நன்றி..!
ReplyDeletesuper post. பயனுள்ள பகிர்வுக்கு நன்றி
ReplyDelete