கூகிளின் சமூக வலைத்தளமான கூகிள் பிளஸ் புதிய வசதிகளை அறிமுகம் செய்து கொண்டே வருகிறது. கூகிள் பிளஸ் பட்டன், பக்கங்கள் உருவாக்குதல், பக்கங்களுக்கான பேட்ஜ் போன்றவைகள் உருவாக்கப்பட்டு மற்றொரு தளமான பேஸ்புக்கிற்கு நிகராக போட்டிகளைக் கொடுத்து வருகிறது. தற்போது வரை நமது கூகிள் மின்னஞ்சல் முகவரி தெரிந்திருந்தால் மட்டுமே கூகிள் பிளசிலும் பேசிக் கொள்ள முடியும். இப்போது நமது வட்டத்திற்குள் இருக்கும் நண்பர்களுக்குள் பேசிக் கொள்ளும் வசதியினை (Chatting) கொண்டு வந்திருக்கிறது.
இதைப்பற்றி இரண்டு நாள்களுக்கு முன் தான் நினைத்துக் கொண்டிருந்தேன். இந்தியாவில் கூகிளின் ஆர்குட் (Orkut) சமூக வலைத்தளத்திற்கு இருந்த வரவேற்பையும் அதில் நண்பர்களானால் பேசிக் கொள்ளும் வசதியும் இருந்ததையும் கூகிள் பிளஸில் இது வரவில்லையே என்று நினைத்திருந்தேன். Chatting வசதியின்றி சமூக வலைத்தளங்கள் பிரபலமாவதில்லை தானே. இப்போது இதனையும் கூகிள் பிளஸ் எற்படுத்தியிருக்கிறது.
கூகிள் பிளஸில் நமது வட்டத்திற்குள் இருப்பவர்கள், அவர்களின் வட்டத்திற்குள்ளும் நம்மைச் சேர்த்திருப்பார்கள் என்றால் அவர்களிடம் நாம் எளிதாக சாட்டிங் செய்யலாம். கூகிள் பிளஸ் மூலம் சேர்ந்து நண்பர்களானவர்களிடம் நாம் வேறு இடைமுகங்களான GMail, iGoogle, Google Talk போன்ற இடங்களிலும் சாட்டிங் செய்து கொள்ள முடியும்.
கூகிள் பிளசில் யாரென்று தெரியாத பல நண்பர்கள் நம் வட்டத்திற்குள் இருக்கலாம். அதனால் பல குழப்பங்கள் ஏற்படாதபடி கூகிள் பிளஸ் அடிக்கடி பேசுபவர்களின் பெயரை மட்டும் சாட்டிங் வரிசையில் தற்போது காண்பிக்கும். இருப்பினும் அவர்களது பெயரை Chat Box இல் தட்டச்சிட்டுத் தேடி சாட்டிங் செய்து கொள்ள முடியும்.
மேலும் நமது வட்டத்திற்குள்ளேயே Family, Friends, Relatives என்று பல வட்டங்கள் பிரித்திருப்போம். குறிப்பிட்ட வட்டத்திற்குள் மட்டுமே பேசிக் கொள்ள நினைத்தால் Chat என்பதற்கு நேராக உள்ள சின்ன வட்டத்தைக் கிளிக் செய்து Privacy Settings என்பதில் செல்லவும். அதில் Your Circles மற்றும் Custom என்று இருக்கும்.
Your Circles – இதில் உங்கள் வட்டத்திலிருக்கும் எல்லோரிடமும் பேச அப்படியே விட்டு விடுங்கள்
Custom – இந்த வசதியினைத் தேர்வு செய்தால் குறிப்பிட்ட வட்டத்தில் அடங்கியிருக்கும் நண்பர்களிடம் மட்டுமே பேசிக் கொள்ள முடியும்.
(எ.கா) Friends, Relatives, Office, School,College.
முக்கிய வசதி: கூகிள் பிளசில் சாட்டிங் வசதி தொந்தரவாக இருப்பின் அதை மட்டும் Sign Out செய்து கொண்டு தளத்தில் தொடரலாம். வேண்டுமெனில் Sign In செய்து சாட்டிங் வசதியில் இருக்கலாம்.
இனி கூகிள் பிளஸ் நண்பர்களிடமும் தடையின்றி பேசுங்கள்.
Tweet | |||
பயனுள்ள தகவல். பகிர்வுக்கு நன்றி சகோ.!
ReplyDeleteஓஹோ..லெட் ட்ரை..
ReplyDeletethanks,
ReplyDeleteaaanaa innum google + ,facebookka muntha muiyalaye?
தகவலுக்கு நன்றி!
ReplyDeleteகூகுள் சாட் பற்றி நான் ஒரு அவரசப் பதிவு ஒன்று போட்டிருந்தேன்.. அதையே விரிவாக அனைவருக்கும் பயன்படும்படி தெளிவாக பதிவிட்டுள்ளீர்கள். .. பாராட்டுக்கள்..!!
ReplyDeleteநல்ல தகவல் நன்றி
ReplyDeleteஅன்புடன்
ராஜா
நெருப்பு நரியுடன்(FIREBOX) சில விளையாட்டுகள்.
பகிர்வுக்கு நன்றி
ReplyDeleteone more option in G+ > we can share file .. just drag and drop on chat window :)
ReplyDeleteவணக்கம் நண்பரே! தங்களின் தளத்தைப் பார்த்து நிறைய தெரிந்து கொண்டேன். தங்களின் பல சேவைகளுக்கு எனது நல்வாழ்த்துக்கள். நன்றி.
ReplyDeleteGreat news dear :) Good update..
ReplyDelete