Nov 11, 2011

கூகிள்+ பேஜை தேடுதலில் கொண்டு வர Direct Connect வசதி


google+plus+pagesகூகிள் பிளஸில் பக்கம் (Google+ Pages) உருவாக்குவது பற்றி அறிந்திருப்பீர்கள். இது பேஸ்புக்கின் ரசிகர் பக்கம் (Facebook Fan Page) செயல்படும் விதம் போன்றதே. நமது தளத்தின் வாசகர்களையும் தளத்தையும் இணைக்கும் இவ்வகையான வசதிகளால் வாசகர்களுக்கு தளத்தின் புதிய செய்திகளை எளிதாக அறிந்துகொள்ள ஏதுவாக இருக்கும். சரி, இதெல்லாம் நமது தளத்திற்கு வந்த பின்னரே நமக்கு ஒரு கூகிள் பிளஸ் பக்கம் இருக்கிறது என்று வாசகர்களுக்குத் தெரியும். இல்லையெனில் கூகிள் பிளஸில் நமது வட்டத்திலிருக்கும் நண்பர்களுக்கு உடனே தெரிந்திருக்கும். ஒரு விசயத்தைப் பற்றி கூகிள் தேடுதலில் தேடுபவர்களுக்கு நமது தளத்தைப் பற்றியோ அல்லது நமது தளத்தின் கூகிள்+ பக்கத்தையோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை தானே.

இதற்காக கூகிள் செய்திருக்கும் வசதி தான் Google+ Direct Connect. கூகிள் தேடுதலில் எதாவது தேடும் போது சம்பந்தப்பட்ட இணையதளத்தின் கூகிள்+ பக்கத்தையும் சேர்த்துக் காட்டுவது தான் இந்த வசதி. இதற்கு குறிப்பிட்ட சொல்லுக்கு முன் ‘+’ குறியைச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

உதாரணமாக நீங்கள் "+youtube" என்று தேடும் போது நீங்கள் உடனடியாக யூடியுபின் கூகிள்+ பக்கத்திற்கு கொண்டு செல்லப் படுவீர்கள். அங்கேயே Add to Circles என்பதைக் கிளிக் செய்து அந்த கூகிள்+ பக்கத்தில் இணைந்து கொள்ளலாம். இதனால் குறிப்பிட்ட தளத்தின் பக்கத்தை பார்வையிடவும் இணையவும் எளிதான வேலையாக இருக்கும். தளத்தின் வாசகர்களும் அதிகரிக்க வாய்ப்பிருக்கிறது. நமது கூகிள்+ பக்கத்தையும் எப்படி கூகிள் தேடலில் கொண்டு வருவது என்று பார்ப்போம்.

முதல் முறை :

இதற்கு நமது கூகிள்+ பக்கத்தையும் இணையதளத்தையும் இணைக்க வேண்டும். எளிதான வழி கூகிள்+ பேட்ஜ் (Badge) ஒன்றை உருவாக்கி நமது தளத்தில் வைக்க வேண்டும். கீழே உள்ள இணைப்பில் சென்று உங்கள் கூகிள்+ பக்கத்திற்கான எண்ணைக் கொடுக்க வேண்டும்.
https://developers.google.com/+/plugins/badge/preview

ஒவ்வொரு கூகிள்+ பக்கத்திற்கும் தனியான எண் வழங்கப்பட்டிருக்கும். அதனை உலவியின் அட்ரஸ் பாரில் இருக்கும் முகவரியின் மூலம் அறியலாம். உங்கள் பக்கத்திற்கான எண்ணைக் கொடுத்ததும் நிரல்கள் தரப்படும். அதை பிளாக்கரில் இணைத்துக் கொள்ள வேண்டும்.


இரண்டாவது முறை :

1. உங்கள் கூகிள்+ பக்கத்திற்குச் சென்று Profile->Edit Profile கொடுக்கவும். அங்கே What Pages Interest you? என்பதில் கிளிக் செய்தால் Links பெட்டி ஒன்று வரும். அதில் Add a Custom Link என்பதில் உங்கள் தளத்தின் பெயரையும் முகவரியையும் கொடுத்து சேமித்துக் கொள்ளவும்.

direct-connect-google-plus-pages-1
2. பின்னர் கீழுள்ள வரியில் சிவப்பு வண்ணத்தில் இருப்பதை உங்கள் கூகிள் பிளஸ் பக்க ஐடி எண்ணைக் கொண்டு மாற்றிக் கொள்ளவும்.
<link href="https://plus.google.com/[Google+ Page ID]" rel="publisher" />

3. பிளாக்கரில் நுழைந்து Design->Edit Html செல்லவும். அதில் <head> என்ற் வரியை அடுத்து மேலுள்ள வரியைச் சேர்த்துக் கொள்ளவும்.


கூகிள் உங்கள் தளத்திற்கான பக்கத்தை உறுதி செய்து கொள்ள சில நாட்கள் எடுத்துக் கொள்ளும். இந்த வசதியானது உங்கள் கூகிள்+ பக்கத்தின் கருத்துகளின் தன்மை மற்றும் அதிக வாசகர்களைப் பொறுத்தே அமையும். இதுவும் பரிசோதனையில் இருப்பதால் உடனடியாக எல்லாரின் பக்கங்களும் கூகிள் தேடலில் வந்து விடாது என்பது குறிப்பிடத்தக்கது.

Enjoy 11.11.11 :-)

15 comments:

  1. 22

    வணக்கம் சகோ.. முதல் வருகை..

    எனது தளத்திலும் வசதியை ஆக்டிவேட் செய்துவிட்டேன்

    பயனுள்ள பகிர்விர்க்கு மிக்க நன்றி

    நன்றியுடன்
    சம்பத்குமார்

    ReplyDelete
  2. Education_cap
  3. blank
  4. blogger_logo_round_35

    பகிர்வுக்கு நன்றி

    ReplyDelete
  5. blogger_logo_round_35
  6. blank

    http://ravidreams.net/forum/topic.php?id=104

    ஒரு உதவி தேவை

    மேலே உள்ள லின்க்கில் சொல்லப்பட்டுள்ளதை வைத்து MS wordல் தமிழ் கட்டுரைகளை பேஸ்ட் செய்து பிரிண்ட் அவுட் எடுத்தேன். புள்ளிகளும், எழுத்துகளும் இடம் மாறி மாறி வருகின்றன.

    சலிப்படைந்து போனேன்.

    தமிழ் கட்டுரைகளை mswordல் பிரிண்டு அவுட் எடுக்கும் ஆர்வம் போய்விட்டது.

    http://www.google.com/transliterate


    இந்த பேஜில் paste செய்து தமிழ் கட்டுரைகளை print out எடுத்தேன். பிரிண்ட் அவுட் எடுத்த பிறகு left margin மிகவும் குறுகலாய்
    வருகின்றது. left மார்ஜினை increase செய்யும் வசதி google chromeல் இல்லை.

    தமிழ் கட்டுரைகளை நல்ல முறையில் print out எடுக்க நல்ல வழி ஏதும் இருந்தால் சொல்லுங்கள்.

    நன்றியோடு உங்களை நினைத்துக் கொண்டு இருப்பேன்.

    ReplyDelete
  7. blogger_logo_round_35

    salaam

    thanks for sharing about google+

    ReplyDelete
  8. Scan10131%23

    தங்கள் தள்த்தில் "MS WORD-ல் Water Mark குறித்த தகவலைப் பார்த்ததும், தங்களது 2009--35;2010-68;2011-35 இடுகைகளையும் நாலு தினங்களாக பார்த்துவிட்டு இதனை எழுதுகிறேன். மிகவும் பயனுள்ள தகவல்கள். நன்றி.

    ReplyDelete
  9. Scan10131%23

    "தொட்டணைத்தூறும் மணற்கேணி, ..." கற்றதை பலர்க்கும் அறிவிக்கும் தங்கள் நல்ல உள்ளத்திற்கு நன்றிகள் பல.

    ReplyDelete
  10. blogger_logo_round_35

    பயனுள்ள பகிர்வுக்கு மிக்க நன்றி.

    ReplyDelete
  11. blogger_logo_round_35

    உங்கள் உதவியால் என்னுடைய கூகிள் ப்ளஸ் பேஜை உருவாக்கி விட்டேன். நன்றி!
    இணைந்திருங்கள் www.stressandyou.in

    ReplyDelete
  12. blogger_logo_round_35

    nalla pathivu. blog pathivinai eppadi save chidhu MS word-il padippathu

    ReplyDelete
  13. Scan10131%23

    M.S.WORD-ல் போட்ட 'Water Mark' print எடுக்கும் போது தெரிய வழி கூறினால் நல்லது.

    ReplyDelete
  14. alagu

    பயனுள்ள தெளிவான பதிவு.. பகிர்வுக்கு நன்றி மற்றும் வாழ்த்துக்கள்..!!!

    ReplyDelete
  15. map

    பயனுள்ள தெளிவான பதிவு வாழ்த்துகள்..

    ReplyDelete