Oct 11, 2011

உலகில் மிக மலிவான விலையில் இந்தியாவின் டேப்ளட் பிசி Akash


ubislate+tablet+pc+2டேப்ளட் பிசி (Tablet PC) என்று அழைக்கப்படும் மினி வகையான கம்ப்யூட்டர்கள் தற்போது சந்தையில் பிரபலமாக இருக்கின்றன. ஆப்பிள் ஐபேடும் இந்த வகையில் சார்ந்ததே. சாம்சங், ஆப்பிள் உட்பட பெரும்பாலான நிறுவனங்களின் டேப்ளட் பிசிகள் விலையில் அதிகமாக இருப்பதால் வாங்குவதற்கு ஆர்வம் இருந்தாலும் வாங்காமல் இருப்பார்கள். இவைகள் கையடக்கமாகவும் கணிணியின் வசதிகளைக் கொண்டும் மொபைல் போன்களின் வசதிகளையும் கொண்டிருப்பதால் பலரால் விரும்பப் படுகிறது.

இந்திய நாடு உலகிலேயே மலிவு விலையில் முதன்முறையாக ஒரு டேப்ளட் பிசியைத் தயாரித்துள்ளது. அக்டோபர் 6 ந்தேதி டெல்லியில் மனிதவள மேம்பாட்டுத்துறை மந்திரி கபில்சிபல் இதனை அறிமுகப்படுத்தினார். இந்த தொடுதிரை கணிணி Datawind என்ற நிறுவனத்தின் மூலம் உருவாக்கப் பட்டுள்ளது. பள்ளி மற்றும் கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களுக்கும் மலிவு விலையில் கணிணி அறிவு சென்று சேர வேண்டும் என்ற முயற்சியின் காரணமாக இந்த டேப்ளட் பிசி தயாரிக்கப்பட்டதாக அமைச்சர் தெரிவித்தார். இந்த வருட இறுதிக்குள் ஒரு லட்சம் கருவிகள் மாணவர்களுக்கு 1500 ருபாய் விலையில் வழங்கப்படும். ஆகாஷ் (Akash) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கணிணியைத் தயாரிக்க 2300 ருபாய் செலவானதாகக் குறிப்பிட்டார்கள்.

ubislate+tablet+pc+3ubislate+tablet+pc+4
இதில் உள்ள வசதிகள்:

* ஆண்ட்ராய்டு இயங்குதளம் 2.2 (Android)
* 2GB Hard disk
* 256 Mb RAM
* 2GB External Memory ( Support upto 32GB)
* 3 Hour Battery Power
* 7” Touch Screen Display
* HD Video Processor
* Wifi & 3G Modems
* 2 USB Ports ( கீபோர்டு மற்றும் மவுஸ் இணைக்க முடியும்)

ubislate+tablet+pc+5
மேலும் இதனை வர்த்தக ரீதியாகவும் நவம்பர் மாதத்தில் Datawind நிறுவனம் 3000 ருபாய் விலையில் அனைவருக்கும் அறிமுகப் படுத்தப் போகிறது. இந்தியக் கணிணிச் சந்தையில் அதிகமான விலையில் விற்கப்படும் பொருள்களுக்கு இடையே இதன் வரவு புதிய மாற்றத்தை உருவாக்கலாம். UbiSlate என்று பெயரிடப்பட்டுள்ள இதில் செல்லுலர் மோடம் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் இணையப் பயன்பாடும் மொபைல் பயன்பாடுகளும் இதிலேயே பயன்படுத்திக் கொள்ளலாம். இதன் மூலம் உலகின் இணையப் பயன்பாட்டாளர்களில் இந்தியாவும் முக்கிய இடத்தைப் பெறும் எனச் சொல்லப்படுகிறது.

See more visit UbiSlate website

19 comments:

  1. blogger_logo_round_35

    இதைப்பற்றி செய்திகளில் பார்த்தோம், படித்தோம். மகிழ்ச்சி. இது ஒரு புரட்சிகரமானதுதான். ஆனால் கிராமப்புற மாணவர்களுக்கு அல்ல, நம்மைப் போன்றவர்களுக்கு. 3 மணி நேரம் மட்டும் இயங்கும், WI-FI, Bradband கட்டணம், இயக்குவதற்க்கும், பாடங்களுடன் இணைப்பதற்கும் தேவையான.... என்று நிறைய தடைகளைக் கடந்தால் இது ஒரு உலக சாதனையாகக் கொள்ளலாம். இது குறித்து நண்பர்களிடம் கருத்துக் கேட்க ஆவல்.
    www.stressandyou.in

    ReplyDelete
  2. blank

    sister

    நம்ம ஊருல Tablet PC வாங்கலாமா .....

    ReplyDelete
  3. -H

    நல்ல பதிவு.
    பயனுள்ள விபரங்கள்.
    வாழ்த்துக்கள்
    http://rathnavel-natarajan.blogspot.com/2011/10/blog-post.html

    ReplyDelete
  4. Education_cap

    இந்தியாவின் டேப்ளேட் பிசி பற்றி முன்னமே அறிந்திருந்தாலும் அழகு தமிழில் தகவல்களையும், அதன் பயன்பாடுகளையும் தொகுத்து பகிர்ந்துகொண்டமைக்கு நன்றிங்க தோழி!

    ReplyDelete
  5. .com/img/b/R29vZ2xl/AVvXsEhyfajUMG7KM_P-sJyML9EwAdn3GFgurXiLezc3zpA8ciX3qd7mHGRSKldjAYwMroeaC6DshhMxeKFZt-S5WNZ0jV5wjNX1_a2yP0RVLHs-THPklkBfzTIbOSMxbh7cAw/s45-c/

    மிக உபயோகமான தகவல். இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வந்ததும் மறவாமல் எங்கே வாங்கலாம் என்பது பற்றியும் பதிவிடுங்கள் :))

    ReplyDelete
  6. alagu

    thank for sharing sister..! good luck..!!

    ReplyDelete
  7. blogger_logo_round_35

    //Mathi
    இதைப்பற்றி செய்திகளில் பார்த்தோம், படித்தோம். மகிழ்ச்சி. இது ஒரு புரட்சிகரமானதுதான். ஆனால் கிராமப்புற மாணவர்களுக்கு அல்ல, நம்மைப் போன்றவர்களுக்கு. 3 மணி நேரம் மட்டும் இயங்கும், WI-FI, Bradband கட்டணம், இயக்குவதற்க்கும், பாடங்களுடன் இணைப்பதற்கும் தேவையான.... என்று நிறைய தடைகளைக் கடந்தால் இது ஒரு உலக சாதனையாகக் கொள்ளலாம்.//

    கண்டிப்பாக நடக்கும் நண்பரே

    ReplyDelete
  8. blogger_logo_round_35

    //என்டர் தி வேர்ல்ட்,

    sister

    நம்ம ஊருல Tablet PC வாங்கலாமா .....//

    வாங்கலாமே!

    ReplyDelete
  9. blogger_logo_round_35

    நன்றி ரத்னவேல், மாணவன், தங்கம்பழனி

    // கோமாளி செல்வா,

    மிக உபயோகமான தகவல். இந்தியச் சந்தையில் விற்பனைக்கு வந்ததும் மறவாமல் எங்கே வாங்கலாம் என்பது பற்றியும் பதிவிடுங்கள் :))//

    பதிவிற்கு கீழே உள்ள சுட்டியைக் கிளிக் செய்து நீங்கள் இப்போதே Pre Order செய்து கொள்ளலாம் செல்வா.

    ReplyDelete
  10. blogger_logo_round_35

    ஆரம்பத்தில் 2gb ராம் என்றார்கள் திடீர் என்று என் குறைத்து விட்டார்கள் என்று தெரியவில்லை

    ReplyDelete
  11. blogger_logo_round_35

    பத்திரிகைச் செய்திகளில் படித்ததுதான் என்றாலும் நீங்கள் விரிவாக எழுதியுள்ளீர்கள். பகிர்விற்கு நன்றி!

    ReplyDelete
  12. blogger_logo_round_35

    இவ்வளவு மலிவான விலையிலா... கூடிய சீக்கிரத்தில் அனைவரின் கைகளிலும் டெப்ளட் பிசி இருக்கும்... பகிர்வுக்கு நன்றி!

    ReplyDelete
  13. blogger_logo_round_35
  14. blogger_logo_round_35
  15. star-shape-flat-icon-psd

    இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  16. star-shape-flat-icon-psd

    இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. photo
  18. wave

    ஸலாம் சகோ.பொன்மலர்,

    ஆகாஷ் (Akash) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த கணிணியைத் தயாரிக்க 2300 ருபாய் செலவானதாகக் குறிப்பிட்டார்கள். //---அட இவ்வளவு விலை குறைவா..?

    UbiSlate என்று பெயரிடப்பட்டுள்ள இதை நவம்பர் மாதத்தில் Datawind நிறுவனம் 3000 ருபாய் விலையில் அனைவருக்கும் அறிமுகப் படுத்தப் போகிறது. //---சூப்பர் சேல்ஸ் ஆகப்போவது தெரிகிறது..!

    ஏற்கனவே இரண்டு பெயர்கள்...
    இனி மக்கள் என்ன செல்ல பெயர் வைக்க போகிறார்களோ..?

    மிக அருமையான ஒரு பகிர்வுக்கு நன்றி சகோ.

    ReplyDelete
  19. blogger_logo_round_35

    பேருந்து பயணத்தில் மொபைலில் மல்லுக் கட்டிக் கொண்டிருக்கும் நான் Ubislate-ன் வரவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கி றேன்.

    ReplyDelete