அசல் மென்பொருள்கள் தான் பயன்படுகிறதா என்று சோதனை நடத்தியது. கரூரில் அதிகமாக டெக்ஸ்டைல்ஸ் தொழிற்சாலைகள் தான் உள்ளன. இந்த ஆலைகளின் சங்கத்திற்கு மைக்ரோசாப்ட் ஆணையிட்டுவிட்டு சென்றதால் அனைத்து ஆலைகளுக்கும் அசல் மென்பொருள்களையே பயன்படுத்துமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. இதனால் எல்லா தொழிற்சாலைகளும் கதிகலங்கி போய் உள்ளன.
ஏன் என்றால் ஒரு விண்டோஸ் XP வாங்கவேண்டும் எனில் ரூபாய் 6700 ஆகிறது. MS-Office மென்பொருள் வாங்கவேண்டுமெனில் ரூபாய் 10,000 ஆகிறது. இதுவே சேர்த்து மொத்தம் 17,000 ரூபாய் ஆகிறது.
ஒரு தொழிற்சாலையில் குறைந்தது 30 கணினிகள் இருந்தாலும் 5 லட்சம் ரூபாய் ஆகிறது. தொழிற்சாலைகளே நஷ்டத்தில் ஓடிக்கொண்டிருக்கும் நேரத்தில் செலவு செய்து இயங்குதளமும் அலுவலக மென்பொருளையும் வாங்குவதற்கு யோசனை செய்யத்தான் வேண்டியிருக்கிறது.
இந்த நேரத்தில் தான் எங்கள் நிறுவனத்தில் ஒரு யோசனை சொன்னேன். இயங்குதளத்திற்கு Linux உம், அலுவலக பயன்பாட்டுக்கு
OpenOffice.org மென்பொருளையும் பயன்படுத்தாலாம் என்று சொன்னேன். இவை இரண்டுமே கட்டற்ற இலவச மென்பொருள்கள். மேலும் முழுதும் இலவசம். எத்தனை பிரதிகள் வேண்டுமானாலும் போடலாம். பயன்படுத்தலாம். உரிமம் ( License ) வாங்க தேவையில்லை.
ஆனாலும் எல்லோரும் பயந்தனர்.எங்களுக்கு இதில் தான் வேலை செய்ய வரும் என்று. விண்டோஸ் மட்டும் என்ன குழந்தையிலேயே கற்றுக்கொண்டு வந்தோமா ? சிறிது சிறிதாக பழக வேண்டியது தானே.இந்த துறையில் மைக்ரோசாப்ட் மட்டுமே ஆதிக்கம் செலுத்த வேண்டுமா என்ன? சரி இந்த மென்பொருள்களை நிறுவி சோதிக்கலாம் என்றனர். பின்னர் Open Office நிறுவி அதை பயன்படுத்தி பார்த்தனர். இயல்பில் MS-Office மாதிரியும் அதை விட அதிகமான வசதிகளும் உள்ளன என்று வியந்தனர். அனால் ஏற்கனவே உருவாக்கப்பட்ட கோப்புகளை திறக்க முடியுமா என்றும் இதை MS-Office வடிவமைப்பில் மெயில் அனுப்பமுடியுமா போன்ற சந்தேகங்கள் எழுந்தன.அவை தீர்க்கப்பட்டும் விட்டன.
பிறகு Ubuntu Linux இயங்குதளத்தை நிறுவி சோதிக்கலாம் என்று எண்ணி நிறுவதொடங்கினேன். அதில் Partition பகுதி தான் புரியவில்லை. அதில்
உள்ள Guided - Resizing partition தேர்வு செய்தேன். ஏன் என்றால் எனக்கு விண்டோஸ் இயங்குதளமும் வேண்டும் என்பதால். ஆனால் அந்த முறையில் நிறுவ முடியவில்லை. பின்னர் Guided - Entire Disk கொடுத்து விட்டு விண்டோசை முழுதும் நீக்கிவிட்டு உபுண்டு மட்டும் இருக்குமாறு நிறுவினேன். இரண்டுமே இருக்குமாறு நிறுவுவது எப்படி என்று சொன்னால் நலமாக இருக்கும்.
ஆனால் விரைவில் உபுண்டுவில் நிபுனராகுவது சிரமம் என்றே
தோன்றியது. எப்படி Network அமைப்பது, தமிழ் மொழியை நிறுவுவது, மெயில் அனுப்புவது, இணையம் பயன்படுத்துவது , மாற்று மென்பொருள்கள் போன்ற விசயங்களை தமிழில் படைத்தால் எவ்வளவு இனிமையாக இருக்கும்?
எனக்கு சுதந்திர மென்பொருள்களின் மேல் உள்ள ஈடுபாடு காரணமாக கற்றுக்கொள்ள வேண்டும் என்ற ஆசை மேலோங்கியுள்ளது. ஆனால் தமிழில் உபுண்டுவை கற்றுக்கொள்ள புத்தகங்களோ அல்லது அதிகமான வலைப்பூக்களோ இல்லை என்று தோன்றுகிறது.
இனிமேல் சுதந்திர மென்பொருள்களின் (Open source Softwares) தேவை அதிகரிக்கும் . லினக்ஸ் இயங்குதளம் முன்னணிக்கு வரும் என்றே தோன்றுகிறது. அதனால் சுதந்திர மென்பொருள்களை அதிகமாக இப்போதிருந்தே பயன்படுத்த முயற்சி செய்தால் நல்லது. மேலும் இவை பற்றிய அதிகமான படைப்புகளை வலைப்பூக்களில் படைப்பதன் மூலம் லினக்ஸ் பற்றிய அறியாமையை நீக்கி விட முடியும்.
லினக்ஸ் வழங்கல்களை பார்க்கவும் தரவிறக்கம் செய்யவும் இந்த வலைப்பக்கத்தில் செல்லுங்கள். http://iso.linuxquestions.org/
சுதந்திர இலவச மென்பொருள்களின் பட்டியல் :
http://en.wikipedia.org/wiki/List_of_open_source_software_packages
சாய்தாசனின் லினக்ஸ் பற்றிய ஒரு கட்டுரை:
இலவச விண்டோஸ் Vs இலவச லினக்ஸ் - ஒரு ஒப்பீடு
லினக்ஸ் பற்றிய தமிழ் வலைப்பூக்கள் :
http://kumarlinux.blogspot.com/
http://suthanthira-ilavasa-menporul.blogspot.com
http://ubuntuintamil.blogspot.com/
http://fedoraintamil.blogspot.com/
http://blog.ravidreams.net/2007/04/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81/
http://ta.wikipedia.org/wiki/%E0%AE%95%E0%AF%8D%E0%AE%A9%E0%AF%82/%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%A9%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A%E0%AF%81
http://www.gnu.org/gnu/linux-and-gnu.ta.html
http://tamilgnu.blogspot.com
http://www.thamilworld.com/forum/lofiversion/index.php?t1096.html
http://suryakannan.blogspot.com/search/label/%E0%AE%89%E0%AE%AA%E0%AF%81%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AF%81%20%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%95%E0%AF%8D%E0%AE%B8%E0%AF%8D
http://www.getittamil.com/index.php?view=article&catid=60%3A2008-11-11-00-36-52&id=128%3A-linux-distribution&tmpl=component&print=1&page=&option=com_content&Itemid=70
http://www.hisubash.com/tblog/?p=387
நண்பர்களே உங்கள் கருத்துகளை கண்டிப்பாக பதிவு செய்யவும். நன்றி.
Tweet | |||
இரண்டுமே இருக்குமாறு நிறுவுவது எப்படி என்று சொன்னால் நலமாக இருக்கும்
ReplyDeleteஎன்னுடைய பதிவுகளிலேயே படத்துடன் சொல்லியுள்ளேனே!
gparted ஐ உபயோகிங்குகள் அல்லது உபுண்டுவிடமே சொல்லிவிடுங்களேன்,அந்த அளவில் நிறுவி விடும்.
உபுண்டு -தமிழில் நிறுவுவதும் இலகு தான். SCIM நிறுவிக்கொள்ளுங்கள்.
ஆஹா! ஆஹா!! சுதந்திர மென்பொருட்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதற்கு இன்னொருவர் கிடைத்துவிட்டார்.
ReplyDeleteஊர்கூடித்தான் தேர் இழுக்க வேண்டும்.
Partition பற்றி என்னால் பதிவு போடமுடியும்.
ஆனால் இந்த தமிழ் கம்ப்ப்யூட்டரை (Magazine) நினைத்தால்தான் பயமாக இருக்கிறது. பேர் கூட போடாமல் காப்பி அடித்து ரத்தத்தை அப்படியே உறிஞ்சுடுவான். காசு ஒருபைசா கொடுக்கமாட்டான்.
suryakannan's
ReplyDeleteஉபுண்டு இயங்குதளத்தை நிறுவுவது எப்படி? படிப்படியான எளிதான விளக்கம்.
http://suryakannan.blogspot.com/2009/09/blog-post_21.html
நன்றி சாய்தாசன். கண்டிப்பாக சுதந்திர மென்பொருள்களை ஆதரிப்பதில்
ReplyDeleteபெருமைப்படுவேன்.மேலும் இவற்றை பிரபலபடுதுவதிலும் வளர்ப்பதிலும் ஆர்வம் காட்ட வேண்டும். அந்த சுட்டி பார்த்து விட்டேன். எனக்கு தமிழ் கம்ப்யூட்டரில்
இருந்து 600 ரூபாய்க்கு செக் வந்தது. என்னுடைய கட்டுரைகளுக்கு அனுப்பி இருந்தார்கள்.
நன்றி குமார். Gparted என்றால் என்ன புரியவில்லை.சொல்வீர்களா?
ReplyDeleteநீங்கள் கூறுவது முற்றிலும் உண்மை. விண்டோஸ்க்கு ஆப்பு வைக்க கூகிள் வேற வந்து விட்டது (ஆனால் இவங்களும் பணம் வாங்குவாங்க)
ReplyDeleteகடைசியில் லினக்ஸ் தான் பெரிய அளவில் வர போகிறது..
ஏன் என்றால் நம்ம ஆளுங்கள பணம் செலவழிக்கனும் என்றால் ஓடியே போய்டுவாங்க..
//இந்த தமிழ் கம்ப்ப்யூட்டரை (Magazine) நினைத்தால்தான் பயமாக இருக்கிறது. பேர் கூட போடாமல் காப்பி அடித்து ரத்தத்தை அப்படியே உறிஞ்சுடுவான். காசு ஒருபைசா கொடுக்கமாட்டான்.//
:-)))
நன்றி கிரி. உண்மையிலேயே லினக்ஸ் நன்றாகத்தான் இருக்கிறது. விண்டோஸ்க்கு
ReplyDeleteமாற்றாக லினக்சை நினைக்கவில்லை. லினக்ஸ் அதன் இயல்பில் சிறப்பாகத்தான் இருக்கிறது.
ஒரு பேட்டியில் சுஜாதா குறிப்பிட்டிருந்தார். ( ஏன் எதற்கு எப்படியில் ).
கேள்வி : விண்டோஸ் இயங்குதளம் தானே சிறந்தது ?
பதில் : நீங்கள் மற்ற இயங்குதளங்களை பயன்படுத்தி பார்த்திருக்கீர்களா? ஒன்றை மட்டுமே உபயோகபடுத்திவிட்டு அதையே சிறந்தது என்று சொல்லாதீர்கள்.
எப்படி ?
எனவே மற்ற இயங்குதளங்களும் சென்று சேர வேண்டும். பயன்படுத்தப்பட வேண்டும். வலை உலவிக்கு Firefox, IE, safari, chrome என்று பல பயன்படுத்துவது போல.
Ubuntu லினக்ஸ் ஒரு அற்புதமான ஓப்பன் சோர்ஸ் ஆகும். Debian மையக்கருவை அடிப்படையாககொண்டு உருவாக்கப்பட்டது, விண்டோஸ் தொகுப்போடு மல்டிபூட்டிங்காக நிறுவலாம்,பார்டிஷன் செய்யும் போது மட்டும் கவனம் தேவை. லினக்ஸ் தொகுப்பில் உங்களுக்கு பயன்படக்கூடிய சில தொகுப்புகளை குறிப்பிடுகிறேன்.
ReplyDeleteVLC Media Player- Multimedia Player
Gimp- Photo Editor
Thunderbird- E-mail Client
Samba Server-network connection between linux and windows
Pidgin- Universal chat client
(google talk,yahoo messenger,msn messenger etc)
Wine-விண்டோஸ் இயங்குதளங்களில் இயங்கும் மென்பொருட்களை லினக்ஸில் இயக்க
Download helper- internet video downloader (Youtube, dailymotion etc)
சாதரண மக்களுக்கு லினக்ஸ் ஒரு வரப்பிரசாதமே இது அனைத்து தரப்பட்ட மக்களையும் சென்றடைய வேண்டும் என வேண்டுகிறேன். மேலும் என்னுடைய வலை நண்பர் மற்றும் தமிழ் கம்ப்யூட்டர் சக எழுத்தாளர் திரு.சூர்யா கண்னன் அவர்கள் பயனுள்ள லினக்ஸ் கட்டுரைகளை அவரது வலையில் பதிப்பதால் நான் லினக்ஸ் குறித்த பதிவுகளை எழுதவில்லை. மேலும் லினக்ஸ் குறித்த ஐயங்கள் தங்களுக்கு ஏற்பட்டால் என்னால் முடிந்த படைப்புகளை தங்களுக்கு அனுப்புகிறேன்....
நித்தியானந்தம் பிரான்ஸிலிருந்து
நன்றி நித்தியானந்தம். தங்களிடம் லினக்ஸ் அல்லது உபுண்டு பற்றிய கட்டுரைகள்
ReplyDeleteஇருப்பின் அனுப்பவும்.உங்களின் கட்டுரைகளும் சிறப்பானதாக உள்ளன. வாழ்த்துகள்.
தாங்கள் நிறுவியுள்ளது என்ன தொகுப்பு என தெரிந்துகொள்ளலாமா?
ReplyDeleteUbuntu 8.10 (The Intrepid Ibex)?
Ubuntu 9.04 ( The Jaunty Jackalope)?
நீங்க கரூரா நான் கரூர்லதான் வேலை பார்க்கிறேன்,
ReplyDeleteதாங்கள் நிறுவியுள்ளது என்ன தொகுப்பு என தெரிந்துகொள்ளலாமா?
ReplyDeleteUbuntu 8.10 (The Intrepid Ibex)?
please check this link. http://www.pudhuvai.com/?p=422
ReplyDeleteThis one is well sufficient for me to install ubuntu as dual boot. Have a look.
Dinesh
விண்டோஸ் காசு குடுத்து வாங்கவேண்டும். லினக்ஸ் காசு குடுத்து படிக்க வேண்டும். லினக்ஸ் சாப்ட்வேர் இன்ச்டள்ளடின் ஏன் கஷ்டமாய் உள்ளது.
ReplyDeleteகடைசியாக நான் லினக்ஸ் மின்ட் பதிப்பை நிறுவினேன். அது உபுண்டு லினக்ஸ் மூலம் விண்டோஸ் பயனாளர்களுக்கு ஏதுவாக திருத்தம் செய்யப்பட்டது.
ReplyDeleteஅகண்ட அலைவரிசை இணையம் இருந்தால் எல்லா வகை மென்பொருளையும் ஆன்லைனில் நிறுவிக் கொள்ளலாம்.
லினக்ஸ் பற்றிய எனது குறு பதிவையும் வாசிக்கவும்.
http://rvkrishnakumar.blogspot.com/2009/09/blog-post_26.html
Linux ஐ பற்றி உங்களின் கருத்துக்கள் அருமையாக உள்ளது. பணி தொடர வாழ்த்துக்கள்.
ReplyDeleteதிரு.சாய்தாசன் சொன்னதுபோல
//ஆனால் இந்த தமிழ் கம்ப்ப்யூட்டரை (Magazine) நினைத்தால்தான் பயமாக இருக்கிறது. பேர் கூட போடாமல் காப்பி அடித்து ரத்தத்தை அப்படியே உறிஞ்சுடுவான். காசு ஒருபைசா கொடுக்கமாட்டான்.//
உண்மைதான். என்னுடைய வலைப்பதிவிலிருந்து firefox பற்றி நான் என்னுடைய பதிவில் எழுதியதை இம்மாத தமிழ் கம்ப்யூட்டரில்(அக்டோபர் 1-16 2009) பக்கம் எண் 13 ல் சிறிய மாற்றத்துடன் வெளியிட்டியிருக்கிறார்கள்.என்னுடைய சுட்டி
http://ubuntuintamil.blogspot.com/2009/09/firefox-353-30-speed.html
thin client தொழில்நுட்பம் பயன்படுத்தி ஒரு கணினிக்கு மட்டும் விண்டோஸ் பயன்படுத்தி க்ளையண்டகளாக லினக்சை பயன்படுத்தலாம்.
ReplyDeleteலினக்ஸ் வழியாக விண்டோசை அணுகலாம்.
இங்கேயும் மைக்ரோசாப்ட் வந்தார்கள் ,ஆனால் நாங்கள் இரவோடு இரவாக மேற்கண்ட நுட்பத்துக்கு மாற்றிவிட்டோம்.
நன்றி!
வணக்கம்.
ReplyDeleteTamilFOSS - கட்டற்ற, திறமூல மென்பொருள்கள் குறித்த தமிழ் உதவி மன்றத்தில் பங்கு கொள்ள அழைக்கிறோம்.
நன்றி.
லினக்ஸ் படிப்பதோ கற்றுக்கொள்வதோ மிகவும் எளிது. ஒரு முறை லினக்ஸில் வேலை செய்து பழகிவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு வின்டோஸில் வேலை செய்ய ஆர்வம் இருக்காது. தேடுதல் என்பது இனிமையானது. அது லினக்ஸ் பயன்படுத்துபவர் மட்டுமே உணரக்கூடியது. கூகுள் ஆண்டவரை கேளுங்கள் நீங்கள் கேட்பது கிடைக்கும். ஜிபார்ட்டட் என்பது பார்ட்டிசன் மேஜிக் என்ற வணிக மென்பொருளின் கட்டற்ற இலவச மென்பொருள் மாற்று. உங்களுக்கு தேவையான வணிக மென்பொருட்களின் கட்டற்ற இலவச மென்பொருளை காண http://osalt.com என்ற தளத்திற்கு செல்லவும். நீங்கள் கூறுவது உண்மைதான். இதைப்பற்றிய தமிழ் விவர நூல்கள் கிடைப்பது அரிது. ஆனால் நீங்கள் நினைத்தால் அதனை தமிழில் மொழிப்பெயர்த்து உங்களைப்போல் உள்ள அனைவருக்கும் கிடைக்குமாறு
ReplyDeleteசெய்திடலாம். லினக்ஸ் மக்களுக்காக
மக்களால் வளர்க்கப்பட்டுவரும் ஒரு ஜனநாயக இயங்குதளம்.
This comment has been removed by a blog administrator.
ReplyDeleteவண்க்கம், என்ன் தான் windos xp குறை கூறினாலும் ஒரு சில வசதிகள் லினக்ஸ் ஓஸ்சில் பல சாப்ட்வேர்கள் லினக்சில் இயக்க முடியவில்லை, பொதுவகா கோமரா சாப்ட்வேர்கள் windosல் இயக்குவது போலத்தான் கிடைக்கின்றது.கோமரா சாப்ட்வேர் லினக்சில் இயக்க என்ன் செய்யவேண்டும்.எனக்கு உதவி செய்யுமாறு கேட்கின்றேன். ந்ன்றி mls.ganesan@gmail.com
ReplyDeleteவண்க்கம், என்ன் தான் windos xp குறை கூறினாலும் ஒரு சில வசதிகள் லினக்ஸ் ஓஸ்சில் பல சாப்ட்வேர்கள் லினக்சில் இயக்க முடியவில்லை, பொதுவகா கோமரா சாப்ட்வேர்கள் windosல் இயக்குவது போலத்தான் கிடைக்கின்றது.கோமரா சாப்ட்வேர் லினக்சில் இயக்க என்ன் செய்யவேண்டும்.எனக்கு உதவி செய்யுமாறு கேட்கின்றேன். ந்ன்றி mls.ganesan@gmail.com
ReplyDeleteகேமரா சாப்ட்வேர் லினக்ஸ்சில் இயக்க முடியவில்லை என்ன செய்வது? எனக்கு உதவி தேவை. mls.ganesan@gmail.com
ReplyDelete