Apr 13, 2013

இறப்புக்குப் பின் தானாக ஜிமெயில் கணக்கை அழிக்க, தகவல்களை மாற்ற – Inactive Account Manager

மின்னஞ்சல் பயன்படுத்தி வருபவர்கள் திடிரென இறந்து விட்டால் அவர்களின் கணக்கில் உள்ள தகவல்கள் அனைத்தையும் என்ன செய்வது எனத் தீர்மானிக்கும் வசதியை கூகிள் கொண்டு வந்திருக்கிறது. Google Inactive Account Manager என்ற இந்த வசதியின் மூலம் குறிப்பிட்ட காலம் நமது கணக்கைத் தொடர்ச்சியாக பயன்படுத்தாமல் இருந்தால் நமது கணக்கை என்ன செய்ய வேண்டும் என அமைக்கலாம்.


இதன் படி குறிப்பிட்ட காலத்திற்கு பின்னர் இணையத்தில் உங்கள் மின்னஞ்சல் கணக்கு பாதுகாப்பான முறையில் அழிக்கப்படும் அல்லது நீங்கள் குறிப்பிடும் நம்பகமான நபருக்கு தகவல்கள் மாற்றப்படும்.
Google Inactive Account Manager
Notify Contacts->Add Trusted Contact -> இந்த வசதியின் மூலம் உங்கள் கணக்கு குறிப்பிட்ட காலத்திற்கு மேல் பயன்படுத்தாமல் இருந்தால் அதிகபட்சமாக 10 பேருக்கு Notification செய்தி அனுப்பலாம். மேலும் உங்களின் கூகிள் கணக்கின் Contacts மற்றும் தகவல்களை அனைத்தையும் நம்பகமானவர்களுக்கு அனுப்பி பகிர்ந்து கொள்ள முடியும். உதாரணத்திற்கு உங்களுக்குப் பின் உங்கள் மனைவியோ குழந்தைகளுக்கோ தகவல்களை கிடைக்கச் செய்யலாம்.

கீழ்க்கண்ட சேவைகளை அடுத்தவருக்கு அனுப்பலாம்.
+1s, Blogger, Contacts and Circles, Drive, Gmail, Google+ Profiles, Pages and Streams, Picasa web albums, Google Voice and YouTube.
Google Inactive Account Manager

Timeout Period -> இதற்கான  காலமாக 3, 6, 9 மாதங்கள், 1 வருடம் என அமைக்கலாம். கூகிள் இந்த வசதியை செயல்படுத்துவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பு உங்களின் மொபைல்க்கு SMS ஒன்றும் நீங்கள் கொடுத்திருக்கும் இரண்டாவது மின்னஞ்சல் முகவரிக்கு மெயிலும் அனுப்பி தகவல் தெரிவிக்கும். உங்களிடமிருந்து பதில் வரவில்லையெனில் இந்த செயல்பாட்டினை கூகிள் செய்து விடும்.
Google Inactive Account Manager

இதனைச் செயல்படுத்த Google Account Settings பக்கத்திற்குச் செல்ல வேண்டும். அல்லது நேரடியாக கீழுள்ள சுட்டியைக் கிளிக் செய்து செல்லுங்கள். எல்லா அமைப்புகளையும் செய்து விட்டு Enable பட்டனைக் கிளிக் செய்து விடவும்.



/* வலைப்பூ எழுத ஆரம்பித்து 4 ஆண்டுகள் முடிந்து 5 வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறேன். மகிழ்ச்சியாக இருக்கிறது. அனைத்து நண்பர்களுக்கும் நன்றி */

19 comments:

  1. 5வது ஆண்டிற்க்கு வாழ்த்துக்கள்... தொடருங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  2. விரிவான விளக்கத்திற்கு நன்றி...

    ஐந்தாம் ஆண்டு மேலும் சிறக்க வாழ்த்துக்கள் சகோதரி...

    இனிய தமிழ்ப் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. தொடரட்டும் உங்கள் பணி . வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. 5 ஆவது ஆண்டுவிழாவிற்கு வாழ்த்துக்கள்! சிறப்பான தகவல்! இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்!

    ReplyDelete
  5. அருமையான, பயனுள்ள தகவல்! மிக்க நன்றி!

    ReplyDelete
  6. மிகவும் பயனுள்ள பதிவுகளைத் தொடர்ந்து வெளியிட்டு வருகிறீர்கள்! தங்களுடைய இந்த அருமையான சேவை தொடர, இந்த ஐந்தாம் ஆண்டுத் தொடக்கத்தில் என் உளம் கனிந்த நல்வாழ்த்துகளைத் தங்களுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்! நன்றி! வணக்கம்!

    ReplyDelete
  7. உபயோகமான தகவல். நன்றி

    ReplyDelete
  8. பயன் தரும் தகவலைப் பகிர்ந்துள்ளீர்கள். அருமை. உங்களுக்கு ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைப்பதற்கும், இனிய தமிழ்ப் புத்தாண்டிற்கும் என் இதயம் நிறைந்த நல்வாழ்த்துகள்!

    ReplyDelete
  9. பதிவு பயனுள்ளது. ஐந்தாம் ஆண்டு தொடக்கத்திற்கு என்னுடைய வாழ்த்துகள் சகோதரி.. மேலும் மேலும் தொடர்ந்து பல ஆண்டுகள் தங்கள் சேவை தமிழர்களுக்கு அளிக்க வேண்டுகிறேன். புத்தாண்டு வாழ்த்துகள்.!!!

    ReplyDelete
  10. எ்ன்ன ஒரு தொலைநோக்குப் பார்வை கூகிள் காரங்களுக்கு..ஐந்தாம் ஆண்டு அற்புதமாக அமைய வாழ்த்துக்கள் தோழி..

    ReplyDelete
  11. தகவலுக்கு நன்றி

    ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் உங்களுக்கு வாழ்த்துக்கள் நன்றி

    இன்னும் நூறு ஆண்டுகளுக்கு தொடரட்டும் உங்கள் பணி

    ReplyDelete
  12. ஐந்தாம் ஆண்டு தொடக்கத்திற்கு வாழ்த்துக்கள் சகோ.!

    ReplyDelete
  13. Plz continue your Nobel work sister. wish u happy Tamil New year.

    ReplyDelete
  14. புதிய விளக்கங்கள் பகிர்வுக்கு நன்றி இனிய தமிழ் புத்தாண்டு வாழ்த்துகள்

    ReplyDelete
  15. அருமையான தகவல்
    5 ஆம் ஆண்டிலும் வெற்றிகள் தொடர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  16. பயனுள்ள பதிவு. பொன்மலருக்கு வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  17. ஐந்தாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் பொன்மலருக்கு வாழ்த்துக்கள்...........

    ReplyDelete
  18. 5வது ஆண்டிற்க்கு வாழ்த்துக்கள்... தொடருங்கள் மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

    ReplyDelete
  19. http://blogintamil.blogspot.ae/2013/06/blog-post_23.html
    இன்று வலைச்சரத்தில் பகிர்ந்துள்ளேன்,அருமை. பகிர்வுக்கு நன்றி.

    ReplyDelete