Mar 29, 2013

இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் கால் பதிக்கும் கூகிள் – முழுமையான அலசல்

google-android-india
கூகிளின் ஆண்ட்ராய்டு தொழில்நுட்பம் (Android OS) அறிமுகப்படுத்தப் பட்ட பின்னர் கடந்த இரண்டு ஆண்டுகளாகத் தான் இந்தியாவில் பிரபலமாகி வருகிறது. அதற்கு முன்னர் நோக்கியா, ப்ளாக்பெர்ரி போன்றவை தான் வெளிச்சத்தில் இருந்தன. இப்போது ஆண்ட்ராய்டு மட்டுமில்லாமல் ஆப்பிள் மற்றும் விண்டோஸ் மொபைல்களும் பிரபலமாக உள்ளன. அதிக மக்கள் தொகை கொண்ட இந்தியாவில் மொபைல் சார்ந்த வணிகம் உச்சத்தில் இருக்கிறது. தொடக்கத்தில் இதனைக் கண்டு கொள்ளாத கூகிள் நிறுவனம் தற்போது தான் விழித்துக் கொண்டு பல வசதிகளை இந்தியாவில் கொண்டு வர ஆரம்பத்திருக்கிறது.

கடந்த ஆறு மாதங்களாக கூகிள் தனது தொழில்நுட்ப சேவைகளை இந்தியாவிற்கு வழங்கி இந்தியத் தொழில்நுட்ப வணிகத்தில் அழுத்தமாக கால் பதிக்க முயற்சிக்கிறது. இதனை சில தகவல்களோடு பார்ப்போம்.

1. செப்டம்பர் 5, 2012 – கூகிள் மேப்ஸ் சேவையை Turn by Turn மற்றும் Voice Navigation வசதிகளோடு முழுமையாக வழங்கியது.

2. அக்டோபர் 19, 2012 – Google Play Store இல் ஆண்ட்ராய்டு பயன்பாடுகளை இந்தியர்களும் கொடுத்து பணம் சம்பாதிக்க வசதியைத் தந்தது.

3. அக்டோபர் 26, 2012 – Google Play இல் பணம் கொடுத்து வாங்கும் அப்ளிகேசன்களுக்கான மதிப்பை ருபாயில் கொண்டு வந்தது. இதற்கு முன் டாலரில் இருந்தது.

4. பிப்ரவரி 7, 2013 – Google Mapathon போட்டி மூலமாக கூகிள் மேப்ஸில் இந்தியாவிலிருக்கும் சேர்க்கப்படாத புதிய இடங்களை அதிகமாகச் சேர்ப்பவருக்கு பரிசுகள் தரப்படுவதாக அறிவித்தது.

5. பிப்ரவரி 27, 2013 – ஆண்ட்ராய்டில் ஹிந்தி மொழியைத் தட்டச்சு செய்வதற்கான பயன்பாட்டை வெளியிட்ட்து. Google Hindi Input

6. பிப்ரவரி 28, 2013 – Google Play இல் புத்தகங்களை வாங்கும் வசதியான Google Play Books ஐக் கொண்டு வந்தது.
google-plus-books-android-app

7. மார்ச் 26, 2013 – முதன் முறையாக Google Play Store மூலமாக Nexus 7 16 GB டேப்ளட் கணிணியை அறிமுகம் செய்தது. இதான் கூகிள் இந்தியாவில் ஆன்லைனில் விற்கும் முதல் ஹார்ட்வேர் பொருளாகும். Read about Nexus 7
google-nexus-7-on-google-play

8. மார்ச் 28, 2013 – இப்போது Google Play மூலமாக திரைப்படங்களை வாங்க அல்லது வாடகைக்கு எடுக்கும் வசதியான Google Play Movies ஐக் கொண்டு வந்துள்ளது.
google-play-movies-available-in-india

9. மார்ச் 28, 2013 - ஆண்ட்ராய்டுக்கான Google Translator பயன்பாட்டை இணைய இணைப்பு இல்லாமல் பயன்படுத்தக்கூடிய வகையிலான Offline Google Translate வசதியைக் கொண்டு வந்துள்ளது. இதில் இந்தி, தமிழ் போன்ற 50 மொழிகளில் மொழிபெயர்க்கலாம்.

மேலும் கூகிள் இந்தியாவில் Google Play Music, TV and Magazines போன்ற சேவைகளையும் விரைவில் கொண்டு வரலாம். அதே போன்று Nexus 7 தவிர Nexus 4 மற்றும் Nexus 10 போன்ற டேப்ளட் கணிணிகளையும் ஆன்லைனில் கொண்டு வரலாம்.

கூகிள் இந்திய மார்க்கெட்டை குறி வைத்து கொண்டு வரும் இந்த வசதிகள் எல்லாமே இந்தியப் பயனாளர்களுக்கு நிச்சயம் வரப்பிரசாதமே.

ஆனால் இந்திய மக்களில் அதிகம் பேரிடம் Credit Cards இல்லை; மேலும் அதை இணையத்தில் பயன்படுத்துவது பற்றிய விழிப்புணர்வு இல்லை. அதனால் மொபைல் நிறுவனங்களோடு கூகிள் கை கோர்த்து அதன் மூலம் கட்டணங்களை வசூலித்தால் எளிதாகவே இருக்கும். மொபைல் போன் பில்லாகவோ அல்லது Mobile Balance இல் கழித்துக் கொள்வதாக கூட வைத்துக் கொள்ளாலாம். மக்களும் இந்த முறையில் நம்பிக்கையாக வாங்குவார்கள். இந்த Operator Billing முறையையும் கூகிள் விரைவில் கொண்டு வரலாம்.

2 comments:

  1. .com/img/b/R29vZ2xl/AVvXsEizDrv21Y0PJ7UkKf6ePu8V_k_uahoiSeDvuXqchCCc--geLBr2UmLxodt3sawDWlNY-6ENv2k4kePABeEe6JEr-TUFLY8ixdTsuSdlSSeKCJSpQ7V4OSy28rVpSY2HKDY/s45-c/

    முழுமையான அலசல்... நன்றி...

    வரப்போகும் தகவலுக்கும் நன்றி..

    ReplyDelete
  2. blogger_logo_round_35

    very informative.Pl.keep your good work going on for ever

    ReplyDelete