சைட்மேப் (Sitemap) என்றால் என்ன?
தேடுபொறிகள் ( Search Engines) தளங்களை தேடுவதற்கும் தளங்களைப் பற்றி விவரங்களை புதுப்பிக்கவும் ரோபாட் என்ற நிரலைப்பயன்படுத்துகின்றன.சைட்மேப் என்பது தளத்தின் அனைத்து பக்கங்களையும் அடக்கிய உள்ளடக்கம்போன்ற அமைப்பாகும். இது கூகிள் நிறுவனத்தால் 2005 ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது.கூகிள்,MSN போன்ற முக்கிய தேடுபொறிகள் இந்த சைட்மேப்பை அடிப்படையாக வைத்து தான் ஒரு தளத்தின் பக்கங்களின் விவரங்களை தங்களிடம் உள்ள தரவுத்தளத்தில் (Database)புதுப்பித்துக்கொள்கின்றன.
இந்த சைட்மேப் தளத்தின் தரத்தையும் (Rank ) உயர்த்த உதவுகின்றன. தற்போது Google , Yahoo, MSN, Ask போன்ற தேடுபொறிகள் XML கோப்பு வகையில் சைட்மேப்பை எடுத்துக்கொள்கின்றன.
சைட்மேப்பை உருவாக்குவது எப்படி?
நீங்கள் இணையதளம் வைத்திருந்தால் http://xml-sitemaps.com என்ற தளத்திற்கு
சென்று உங்கள் தளத்தின் பெயரைக்கொடுத்து உருவாக்குங்கள். அதை
நோட்பேடில் காப்பி செய்து “sitemap.xml” என்ற பெயரில் சேமித்து உங்கள்
தளத்தின் Root போல்டரில் தரவேற்றுங்கள் (Upload) . இப்போது உங்கள் சைட்மேப்
இவ்வாறு இருக்க வேண்டும் www. Yourdomain.com / sitemap.xml
வலைப்பூ வைத்துள்ளவர் இந்த மாதிரி உருவாக்க வேண்டிய அவசியமில்லை.
பிளாக்கரிலேயே இரு வகையில் சைட்மேப் உள்ளது.
1. http://yourblog.blogspot.com/atom.xml (அல்லது)
2. http://yourblog.blogspot.com/rss.xml
இதில் உங்கள் வலைப்பூவின் பெயரை மாற்றிக்கொள்ளவும். இதை தேடுபொறிகளில் எப்படி இணைப்பது என்று பார்ப்போம்.
1.GOOGLE
http://www.google.com/webmasters தளத்தில் கூகிள் பயனர் பெயர் கொடுத்து நுழையவும். Add a Site சென்று உங்கள் வலைப்பூவின் பெயருக்கு பின்னால் atom.xml அல்லது rss.xml என்பதை கொடுங்கள் .அங்கே கிடைக்கும் ஒரு வரி கோடிங்கை Layout – Edit Html சென்று <head> வரிக்கு பின்னால் சேர்க்கவும். சேமித்துவிட்டு உறுதிப்படுத்தவும்.இதன்பின் உங்கள் வலைப்பூ கூகிள் தேடுபொறியில் இணைக்கப்படும்.
உங்கள் வலைஉலவியின் முகவரி பகுதியில் கீழ் உள்ளவற்றை காப்பி செய்து தட்டச்சிடவும்.
2.YAHOO
http://search.yahooapis.com/SiteExplorerService/V1/updateNotification?appid=SitemapWriter&url=http://blogname.blogspot.com/atom.xml
http://search.yahooapis.com/SiteExplorerService/V1/ping?sitemap=http://blogname.blogspot.com/atom.xml
3. BING
www.bing.com/webmaster/ping.aspx?siteMap=http://blogname.blogspot.com/atom.xml
4. WINDOWS LIVE
http://webmaster.live.com/ping.aspx?siteMap=http://blogname.blogspot.com/atom.xml
5. MOREOVER
http://api.moreover.com/ping?u=http://blogname.blogspot.com/atom.xml
6. ASK
http://submissions.ask.com/ping?sitemap=http://blogname.blogspot.com/atom.xml
மறக்காமல் http://blogname.blogspot.com/ என்பதில் உங்கள் வலைப்பூ பெயரை மாற்றிக்கொள்ளவும். நன்றி.
Tweet | |||
good post.. useful information.. i submitted my sitemap.. thx
ReplyDeleteபயனுள்ள குறிப்பு.
ReplyDeleteரூட் போல்டரில் ஏற்றுவது குறித்து விளக்கவும்
ReplyDeleteநன்றி
பொன்மலர்...இதனை yahoo..bing...போன்றவற்றில் எப்படி சேர்ப்பது என்பது சரியாக எனக்கு புரியவில்லை...கொஞ்சம் அதனை விளக்கமாக தெரிவிக்கமுடியுமா...சிரமத்திற்கு மன்னிக்கவும்...
ReplyDeleteவலையுலகின் இன்றைய டாப் ட்வென்டி பதிவுகளை WWW.SINHACITY.COM இல் வாசியுங்கள்
ReplyDeleteவணக்கம் மேடம். தங்கள் பதிவுகள் அனைத்தும் மிகவும் பயனுள்ளதாக உள்ளது. தங்களது இந்த "வலைப்பூவிற்கான சைட்மேப்பை 5 தேடுபொறிகளில் இணைத்து இணையவரத்தை அதிகரிக்க…" பதிவில் அனைத்தும் விளக்கமும் எளிமையாக புரிகிறது. ஆனால் 1.GOOGLE என்ற தலைப்பில் இருக்கும் //வலைப்பூவின் பெயருக்குப்பக்கத்தில் atom.xml அல்லது rss.xml என்பதை நிரப்புங்கள்.அங்கே கிடைக்கும் சிறிய நிரலை வலைப்பூவில் Layout – Edit Html சென்று என்பதற்கு பின்னால் சேர்க்கவும்.// சரியாக புரியவில்லை.. எதற்கு பின்னால் சேர்க்கவேண்டும் என்று கூறினால் என்னை போன்ற வாசகர்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். தயவு செய்து இதை சரிசெய்யவும். பகிர்வுக்கு நன்றி.
ReplyDelete//கீதா
ReplyDeleteஒவ்வொரு தேடுபோறிக்கும் கீழ் உள்ள வரியில் உங்கள் வலைப்பூவின் பெயரைகொடுத்து
வலையுலாவியில் காப்பி செய்து எண்டர் செய்யவும். அவளோ தான்
// நன்றி பிரவீன்
ReplyDeletehead tag ஆரம்பித்தவுடன் சேர்க்கவும். ஒரு நாள் கழித்து
உங்கள் வலைப்பூ கூகுளில் தெரியும்
பயனுள்ளதா சொல்லி தாறியள் நன்றி
ReplyDelete( இன்னும் முயற்சிக்கலை)
நான் இதை எத்தனையோ நண்பர்களிடம் கேட்டுப்பார்த்தேன் ஒருவரும் எனக்கு சரியாக விடை கூறவில்லை, உங்கள் விளக்கம் பயனுள்ளதாக இருக்கின்றது.
ReplyDeleteமிகவும் பயனுள்ள தகவல். தகவலுக்கு நன்றி
ReplyDeleteபூங்கொத்துப் பதிவு!!!
ReplyDeleteபயனுள்ள தகவல்கள் நன்றி....
ReplyDeleteபயனுள்ள தகவல்கள் நன்றி....
ReplyDeleteஎந்தஒரு தளத்திலும் காணக்கிடைக்காத தகவல்களைத் தருகிறீர்கள் பொன்மலர். அரிதான விஷயம். பாராட்டுக்கள்.
ReplyDeleteபிளாக்கருக்கு டொமைன் பெயர் வாங்கிய பிறகு, அந்த தளத்திற்கு எப்படி சைட்மேப்பை தயார் செய்து இணைப்பது? தயவு செய்து கூறுங்கள்.
ReplyDelete