Jun 28, 2010

போட்டோஷாப்பில் Action Palette ஐப் பயன்படுத்துவது எப்படி?


நாம் போட்டோஷாப்பில் படங்களை உருவாக்கும் போது பல்வேறு எஃபெக்ட்களைக் கொண்டு படங்களை வடிவமைப்போம்.உதாரணமாக பில்டர்கள், Blending போன்றவற்றைப் பயன்படுத்தி படத்தின் அழகை மேம்படுத்துவோம்.ஆனால் ஒரே விதமான எஃபெக்ட்கள் பல படங்களுக்கு தேவைப்பட்டால் என்ன செய்வது? ஒவ்வொரு படத்திற்கும் பல முறை தனித்தனியாக செய்து கொண்டிருந்தால் பல மணி நேரங்கள் ஆகும்.இந்த நேரத்தில் உங்களுக்கு உதவுவது தான் Action Palette ஆகும்.
உதாரணமாக ஒரு படத்தில் உருவாக்கப்பட்ட செயற்கையாக மழை பெய்யும் எஃபெக்ட்டை பல படங்களுக்கு பொருத்திக்கொள்ள முடியும்.

Action Palette ஐ திறக்க Alt + F9 அல்லது window-> Actions அழுத்தவும்
Actions என்றால் என்ன? போட்டோஷாப்பில் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் ஆக்‌ஷன் தான்.லேயர் உருவாக்குவது, வண்ணம் கொடுப்பது போன்ற செயல்களே ஆகும். இதன் மூலம் நீங்கள் செய்யும் அனைத்து செயல்களையும் பதிவு செய்து கொண்டு அதை பல முறை எத்தனை படங்களுக்கு வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். நீங்கள் உருவாக்கிய அதே வரிசையில் (Sequence of Actions) செயல்கள் உருவாக்கப்படும்.இதனால் பல மணிநேரம் மிச்சமாகிறது.
புதியதாக ஒரு ஆக்‌ஷனை உருவாக்க Create new action பட்டனை கிளிக் செய்து வரும் பெட்டியில் ஆக்‌ஷனுக்கு பெயர் கொடுத்து அதற்கு குறுக்குவிசை எதேனும் கொடுக்க விரும்பினால் கொடுத்துவிட்டு Record பட்டனை அழுத்தவும்.

இனிமேல் நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் பதிவு செய்ய்ப்படும். படத்தின்
வண்ணத்தை சரி செய்வது,பில்டர் அமைப்புகள், Blending வேலைகள் போன்ற அனைத்தும் பதிவாகும்.தேவையான செயல்களை செய்து முடித்து விட்டு “Stop” பட்டனை அழுத்தவும்.
இப்போது நீங்கள் செய்தவை அனைத்தும் பதிவாகிவிட்டது. இனிமேல் வேறொரு படத்திற்கு இதே வேலைகளைச்செய்ய விரும்பினால் Action Palette ல் நீங்கள் சேமித்த ஆக்‌ஷனைத் தேர்வு செய்து “Play selection” என்பதை தேர்வு செய்தால் போதும் அல்லது குறுக்கு விசைகளை அழுத்தினால் போதும்.
நன்றி!

6 comments:

  1. பகிர்வுக்கு மிகவும் நன்றி...

    ReplyDelete
  2. இனிய தமிழில் எளிய முறையில் தொகுத்துள்ளீர்கள்...உங்கள் சேவை பன்மடங்கு பெருக வாழ்த்துக்கள் சகோதரி!!

    ReplyDelete
  3. ஆகா சூப்பர் நல்லா புரிஞ்சிடுச்சி, விளக்கியவிதம் அருமை நல்லா பதிவு, உங்கள் புகழ் மென்மேலும் உயர என் மனமார்ந்த வாழ்த்துக்கள்

    ReplyDelete
  4. hi ponmalar, i read ur post i really appreciate and i give u one suggestion. In tha action pallete window left click the top right corner, and choose the button mode, its really better to work on action pallette. Thanks for sharing.

    ReplyDelete
  5. புத்தம் புதிய தமிழ் திரட்டி

    www.periyarl.com - பகலவன் திரட்டி



    உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

    தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

    ReplyDelete
  6. www.venkateshviews.blogspot.com

    ReplyDelete