Jun 22, 2010

விண்டோஸ் 7 ல் தானாக பிண்ணணிப்படங்கள் அடிக்கடி மாற…

windows7
நமது கணிணியின் முகப்பில் பிடித்த படம் எதாவது ஒன்றை வைத்திருப்போம்.மாற்ற வேண்டும் என்று விரும்பினால் வேறு படம் ஒன்றை மீண்டும் தேர்வு செய்து பிண்ணணிப்படமாக வைப்போம்.சிலருக்கு முகப்பில் அடிக்கடி படங்கள் மாறிக்கொண்டே இருக்க வேண்டும் என்று இருப்பார்கள். விண்டோஸ் 7 இயங்குதளத்தில் இதற்கென்றே ஒரு வசதி உள்ளது.

இதன் மூலம் படங்கள் கலந்து கலந்து ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் மாறிக்கொண்டே வரும்.இதை பயன்படுத்த கீழ்வரும் வழிமுறைகளை செய்யவும்.
backchange1.டெஸ்க்டாப்பில் எதாவது வெற்றிடத்தில் வலது கிளிக் செய்து வரும் மெனுவில் ”Personalize” -> “Desktop Background” என்பதை தேர்வு செய்யவும்.
2. உங்களுக்கு பிடித்த படங்கள் உள்ள போல்டரில் சென்று தேவையான படங்களை தேர்வு செய்து கொள்ளவும்.
3. எத்தனை நிமிடங்கள் கழித்து மாற வேண்டுமோ, இடைவெளி நேரத்தை கொடுக்கவும்.
4. மறக்காமல் “Shuffle” என்பது தேர்வு செய்யப்படவேண்டும்.

இதன் பின்னர் உங்களுக்கு பிடித்த படங்கள் குறிப்பிட்ட இடைவெளியில் பிண்ணணிப்படமாக மாறிக்கொண்டே இருக்கும்.அடிக்கடி புதியதாய் மாறி வரும் உங்கள் கணிணியின் முகப்பு கண்டு புத்துணர்ச்சி பெறுவீர்கள்.நன்றி!

1 comment:

  1. blogger_logo_round_35

    என்னுடைய windows 7 ல் Personalize” -> “Desktop Background” என்று .டெஸ்க்டாப்பில் வரவில்லை மேடம். pls உதவி செய்யுங்கள்

    ReplyDelete