
நாம் கணினியை பயன்படுத்தும் போது ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட மென்பொருள்கள் அல்லது பயன்பாடுகளை திறந்து வைத்திருப்போம். திடிரென்று கணினியை அணைக்க வேண்டிய சூழ்நிலையில் நாம் என்ன செய்வோம்? ஒவ்வொரு பயன்பாடாக சென்று மூடிக்கொண்டிருப்போம். ஆனால் எல்லாவற்றையும் ஒரே கிளிக்கில் மூடிவிட்டால் எவ்வளவு சுலபமாக இருக்கும்.