கூகிள் ப்ளஸ் இணையதளத்தில் நேற்று சில புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டன. அவற்றில் ஒன்று Google+ Custom URL. இதன் மூலம் உங்கள் கூகிள்+ புரொபைல் அல்லது பக்கத்திற்கு எளிமையான சிறிய URL முகவரியைப் பெற முடியும். முன்பு இந்த முகவரியில் நீண்டதாக எண்கள் அமைந்திருக்கும். அதனால் அதனை நினைவில் கொள்வதும் பகிர்வதற்கும் கடினமான ஒன்றாக இருந்தது. இந்த வசதி இதற்கு முன்னரே பிரபலங்கள், கூகிள் பணியாளர்கள் ஆகியோருக்கு தரப்பட்டிருந்தது. தற்போது எல்லோருக்கும் இந்த வசதி அறிமுகப்படுத்தப் பட்டுள்ளது...
Oct 31, 2013
Oct 30, 2013
ஸ்மார்ட்போன்கள், டேப்ளட், கேமரா போன்றவற்றின் வசதிகளை ஒப்பீட்டுப் பார்க்க சிறந்த தளங்கள்
7 Comments
இன்றைய தொழில்நுட்ப உலகத்தில் புதிய வசதிகளோடு ஸ்மார்ட்போன்கள் (Smartphones), டேப்ளட் கணிணிகள்(Tablet PC), கேமரா (Camera), ரீடர்கள் (E-readers) போன்ற பல வகையான கருவிகள் சந்தையில் கிடைக்கின்றன. சாதாரண மொபைல்களை விட தற்போது ஸ்மார்ட்போன்களின் விற்பனை அதிகமாகியுள்ளது. இதற்குக் காரணம் பல வசதிகளுடன் வரும் ஸ்மார்ட்போன்களில் இணையம்,விளையாட்டுகள்,பயன்பாடுகள் போன்றவற்றிற்கு பயன்படுத்தலாம். இவைகள் ஒவ்வொன்றும் தனிப்பட்ட வசதிகளைக் கொண்டும் தனிப்பட்ட இயங்குதளத்திலும் (Operating System) வெளிவருகின்றன...
Oct 14, 2013
விளம்பரத்தில் உங்கள் புகைப்படம், பரிந்துரைகளை பயன்படுத்தும் கூகிள்
5 Comments
கூகிள் சமீபத்தில் தனது சேவை விதிமுறைகளில் மூன்று புதிய மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. கூகிள் விளம்பரத்தில் உங்கள் தகவல்களைப் பயன்படுத்துதல், வாகனம் ஓட்டும் போது மொபைல் பயன்பாடு தவிர்த்தல், கூகிள் கணக்கின் கடவுச்சொல்லைப் பாதுகாத்தல் போன்றவற்றை விதிமுறைகளில் சேர்த்துள்ளது. கடைசி இரண்டும் நமக்கான அறிவுரை மட்டுமே, ஆனால் முதலாவது நமது ப்ரைவசிக்கு வேட்டு வைக்கும் ஒன்றாக வந்துள்ளது.
கூகிளின் சேவைகளான Search, Maps, Places, Google Play, Adsense,...
Oct 5, 2013
ப்ளாக்கர் பதிவில் சமூக வலைத்தளங்களில் பகிரும் Status களை இணைக்க
6 Comments
இணையத்தில் முண்ணணி சமூக வலைத்தளங்களான Facebook, Twitter, Google Plus போன்றவற்றில் பல தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இப்படி பகிரப்படும் செய்திகளை (Status) ப்ளாக்கர் பதிவுகளில் Screenshot எடுக்காமல் நேரடியாக இணைத்து காட்ட முடியும். ப்ளாக் வாசகர்களும் நமது பதிவிலிருந்தே குறிப்பிட்ட Status க்கு Like, Comment, Share, Retweet, +1 போன்ற வேலைகளை செய்ய முடியும்...