Nov 28, 2013

ப்ரவுசர் டேப்கள், கோப்புகளை இணையத்தில் Sync செய்து பயன்படுத்த CupCloud

2 Comments
இணையத்தில் முக்கியமான செயலில் இருக்கும் போதும் அல்லது கணிணியில் எதாவது ஒரு கோப்பில் வேலை செய்து கொண்டிருக்கும் போதும் வேறு அவசர அழைப்புகளோ அல்லது சந்திப்புகளோ திடிரென வந்து விடும். தேடிக் கொண்டிருக்கும் விசயத்தை பாதியில் போட்டு விட்டு போகவும் முடியாது. திரும்ப வருவதற்கு நேரமானால் என்ன செய்வது? செல்லும் இடத்தில் நாம் செய்த வேலையை விட்ட இடத்திலிருந்து தொடரும் வாய்ப்பு கிடைத்தால் நன்றாக இருக்குமல்லவா?


இதற்கு கண்டிப்பாக Cloud Computing எனப்படும் மேகக்கணிணி சேவை தான் பயன்படும் என்று தெரிந்திருக்கும். உங்கள் ஃபைல்களை Google Drive / Dropbox இல் ஏற்றி வைத்து இணையத்தில் எங்கே வேண்டுமென்றாலும் எடுத்து பயன்படுத்தலாம். அடுத்து நீங்கள் உலவிக் கொண்டிருந்த ப்ரவுசர் டேப்களையும் (Browser Tab) இணையத்தில் சேமித்து பின்னர் தேவையெனில் மீட்டுக்கொண்டால் இன்னும் அருமையல்லவா? இந்த இரண்டு விசயங்களுக்கும் உதவுவது தான் CupCloud எனும் மென்பொருள்.


இந்த மென்பொருள் நீங்கள் இணையத்தில் உலவிக்கொண்டிருக்கும் அத்தனை ப்ரவுசர் டேப்கள், நீங்கள் கணிணியில் வேலை செய்யும் குறிப்பிட்ட வகை கோப்புகள், போல்டர்கள் அனைத்தையும் ஒரே கிளிக்கில் இணையத்தில் சேமித்து விடும். இதற்கு Cup என்ற பட்டனையும் திறப்பதற்கு UnCup பட்டனையும் கிளிக் செய்ய வேண்டும். பிறகு எந்த கணிணியிலிருந்தும் விட்ட இடத்திலிருந்து அவற்றைத் திறந்து வேலை செய்யலாம்.


இந்த மென்பொருள் அவசரமாக வெளியே சென்று இணையத்தில் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல,  மறுபடியும் வீட்டிற்கு வந்து நீங்கள் வேலை செய்த டேப்கள், கோப்புகள் அனைத்தையும் உங்கள் கணிணியிலும் ஒரே கிளிக்கில் திறந்து தொடரலாம்.இந்த மென்பொருள் தற்போது Chrome, Internet Explorer, Safari போன்ற உலவிகளும் Microsoft Word, Excel Powerpoint போன்ற கோப்பு வகைகளும் மற்றும் Windows Explorer, Apple Mac Finder, Apple iWork போன்றவற்றையும் பேக்கப் செய்கிறது. மேலும் புதிய வகை ஃபைல்களும் பயன்பாடுகளையும் இதில் கொண்டு வருவதாக குறிப்பிட்டிருக்கிறது.



Read More

Nov 18, 2013

ஜிமெயிலில் புதிய வசதிகள் - Save to Drive மற்றும் Quick Actions

6 Comments
கூகிளின் மின்னஞ்சல் சேவையான ஜிமெயிலில் சில புதிய வசதிகள் அறிமுகப்படுத்தப் பட்டுள்ளன. ஜிமெயிலை விரைவாகவும் எளிமையாகவும் பயன்படுத்த இந்த வசதிகளான Preview Attachments, Save to Drive, Quick Action Buttons போன்றவை உதவும்.

1. Preview Attachments:

Gmail New Features - Save to Drive, Quick Actions

இனி மின்னஞ்சலில் Attachment ஆக இணைக்கப்பட்டு வரும் படங்கள், வீடியொ, கோப்புகள், PDF ஃபைல்கள் போன்றவற்றை டவுன்லோடு செய்யாமலே முன்னோட்டத்தை( Preview) பார்க்கலாம். அதற்கு கோப்புகளின் மேல் கிளிக் செய்தால் FullScreen முறையில் பார்க்கலாம்.

Read Also: YouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி?
 
2. Save to Drive :

மின்னஞ்சலில் வரும் அனைத்து Attachment ஃபைல்களையும் டவுன்லோடு செய்யாமலே நேரடியாக கூகிள் டிரைவில் சேமித்துக் கொள்ள முடியும். இதற்கு Attachment ன் மீது மவுசைக் கொண்டு சென்றால் Save to Drive என்ற பட்டன் தோன்றும். அதனைக் கிளிக் செய்தால் போதும். இனி நீங்கள் குறிப்பிட்ட கோப்பை எங்கிருந்தும் எப்போது வேண்டுமானாலும் கூகிள் டிரைவில் பார்த்துக் கொள்ளலாம். மின்னஞ்சலை அழித்து விட்டாலும் Google Drive இல் இருக்கும்.

3.Quick Action Buttons: 

இந்த வசதி முன்பே கொண்டு வரப்பட்டது தான். Quik Actions என்ற பெயருக்கேற்ப இதன் மூலம் ஜிமெயிலில் மின்னஞ்சலைத் திறந்து பார்க்காமலே சில வசதிகளை பட்டன்கள் மூலம் ஒரே கிளிக்கில் விரைவாக திறக்கவும் அணுகவும் முடியும். இப்போது சில புதிய பட்டன்களை இதில் சேர்த்திருக்கிறார்கள். இந்த பட்டன்கள் மின்னஞ்சலின் வலது ஒரத்தில் தோன்றும்.

Gmail New Features - Save to Drive, Quick Actions

இப்போது ஜிமெயில் மின்னஞ்சலைத் திறக்காமலே குறிப்பிட்ட ஹோட்டல்கள், சினிமா, பொருள்களுக்கு மதிப்பீடு கொடுக்கவும் விமர்சனம் செய்யவும் முடியும்.(Rate and Review). Google Offer களை ஒரே கிளிக்கில் சேமிக்கலாம். Google Drive, Dropbox போன்ற தளங்களிலிருந்து வரும் Attachment களை நேரடியாகத் திறக்கலாம். YouTube இல் அப்லோடு செய்தால் வரும் மின்னஞ்சலைத் திறக்காமல் அந்த வீடியோவை உடனே பார்க்கலாம். இதில் இன்னும் பல சேவைகள் இணைக்கப் பட உள்ளதாக கூகிள் தெரிவித்துள்ளது. இது பற்றி மேலும் அறிய 

நன்றி.
Read More

Nov 8, 2013

YouTube இல் கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் பயன்படுத்துவது எப்படி?

2 Comments
கூகிள் தனது கூகிள் ப்ளஸ் கமெண்ட்ஸ் (Google+ Comments) வசதியை YouTube தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஃபேஸ்புக் கமெண்ட்ஸ் போன்று இணையத்தில் அறிமுகப்படுத்தப் பட்ட இந்த கூகிள்+ கருத்துரை வசதி முதலில் ப்ளாக்கர் தளத்தில் பயன்படுமாறு கொண்டு வரப்பட்டது. கூகிள் தனது சமூகவலைத்தளமான கூகிள் ப்ளஸை மற்ற சேவைகளான தேடல், ப்ளாக்கர், யூடியுப் போன்றவற்றில் இணைப்பதன் மூலம் பயனர்களை அதிகரித்து வருகிறது.
Read More