Jun 7, 2013

வேறு மொழிப் படங்களுக்கு English Sub-Titles பெறுவது, பார்ப்பது எப்படி?

இணையத்தில் இப்போதெல்லாம் தெலுங்கு, மலையாளம், ஹிந்தி போன்ற வேற்று மொழிப் படங்களை டவுன்லோடு செய்து பார்ப்பது பொழுது போக்காகி விட்டது. படங்களின் ஒரிஜினல் டிவிடியாக டவுன்லோடு செய்தால் படம் பார்க்கும் போது அதன் ஆங்கில சப்-டைட்டில் (English sub-title) கூடவே அடியில் தெரியும். மொழி புரியாதவர்களுக்கு இது நலமாக இருக்கும்.

ஆனால் நிறைய படங்கள் டொரண்ட்களில் எடுக்கும் போது முக்கியமாக YouTube லிருந்து வேறு மொழிப் படங்கள் எடுக்கும் போது சப்-டைட்டில் சேர்ந்து வருவதில்லை. இதற்கு தீர்வாக இணையத்தில்  சில தளங்கள் பல லட்சக்கணக்கான மொழிப்படங்களுக்கு சப்-டைட்டில்களை சேகரித்து
வைத்திருக்கிறார்கள்.

1. http://subscene.com/
2. http://www.opensubtitles.org/
3. http://www.moviesubtitles.org/


சப்-டைட்டில்களை படத்தில் பார்க்க

பொதுவாக சப்-டைட்டில் கோப்புகள் .SRT or .SUB என்ற பார்மேட்டில் முடியும். உங்களுக்குத் தேவையான சப்-டைட்டிலை டவுன்லோடு செய்து விட்டு அந்த படத்தின் பெயரை சப்-டைட்டிலுக்கும் Re-name செய்து விட்டால் படத்தைக் கிளிக் செய்து பார்க்கும் போது தானாக வந்து விடும்.

Example : Movie Name – Dookudu.avi , Sub-title Name – Dookudu.srt
இல்லாவிட்டால் VLC மீடியா ப்ளேயரில் படத்தினைத் திறந்து விட்டு மெனுவில் Video -> Subtitles Track -> Open File என்று கிளிக் செய்து நீங்கள் டவுன்லோடு செய்த சப்-டைட்டிலைத் தேர்வு செய்தால் போதும்.

  

இதர சில இணையதளங்கள்

8 comments:

  1. அட.. இது அருமையான தகவலாக இருக்கிறதே! நானும் பயன்படுத்திப் பார்க்கிறேன்..

    ReplyDelete
  2. நன்றி.பயன்படுத்திப் பார்க்கிறேன்..

    ReplyDelete
  3. ஆஹா... நிச்சயம் அனைவருக்கும் பயன்படும் அருமையான தகவலைப் பகிர்ந்திருக்கீங்க. ரொம்ப ரொம்ப நன்றி!

    ReplyDelete
  4. ITS NEW HAVE TO TEST IT, THANK YOU.

    ReplyDelete
  5. மிகவும் நன்று

    ReplyDelete
  6. Torrent la movie epdi download panrathunnu solungalen please

    Abirami

    ReplyDelete
  7. பயனுள்ள பதிவு மிக்க நன்றி

    ReplyDelete