Jul 8, 2013

கூகிள் ரீடர் தகவல்களை டவுன்லோடு செய்ய [கடைசி தேதி ஜூலை 15, 2013]

கூகிளின் பிரபலமான RSS சேவையான Google Reader இந்த ஜூலை 1 ந்தேதியிலிருந்து நிறுத்தப்பட்டதை அறிவீர்கள். ஆனலைனில் நமக்குப் பிடித்தமான தளங்களின் செய்திகளை உடனுக்குடன் படிக்க உதவியாக இருந்து வந்தது கூகிள் ரீடர். இதை நிறுத்தப் போவதாக அறிவித்தவுடன் பலர் அதிர்ச்சியே அடைந்தனர்.


சரி நீங்கள் கூகிள் ரீடரில் உங்களுக்குப் பிடித்த தளங்களைச் சேர்த்து வைத்திருப்பீர்கள். அந்த அமைப்புகளை டவுன்லோடு செய்து கொண்டால் அதனை வேறொரு ரீடர் சேவையில் அப்படியே பயன்படுத்திக் கொள்ளலாம். முக்கியமான விசயம் டவுன்லோடு செய்ய கடைசி தேதி ஜூலை 15, 2013.
அதன் பின்னர் கூகிள் சர்வரிலிருந்து எல்லாருடைய தகவல்களும் நிரந்தரமாக அழிக்கப்படும் என கூகிள் அறிவித்துள்ளது.
எப்படி கூகிள் ரீடர் அமைப்புகளை டவுன்லோடு செய்வது?

1. Google Takeout தளத்திற்குச் செல்லவும். இங்கெ பல கூகிள் சேவைகளின் தகவல்களை டவுன்லோடு செய்ய முடியும்.

2. மேல்பகுதியில் உள்ள Choose services -> Reader எனத் தேர்வு செய்யவும்.

download-google-reader-data-1

3. இப்போது உங்கள் ரீடர் கணக்கின் தகவல்கள் எத்தனை கோப்புகள், எவ்வளவு அளவு என்று காண்பிக்கும். அதன் கீழே உள்ள Create Archive பட்டனைக் கிளிக் செய்யவும்.
download-google-reader-data-2

4. பின்னர் அவை மொத்தமாக ஒரு Zip கோப்பில் சேமிக்கப்பட்டு Download வசதியுடன் தோன்றும். Download பட்டனைக் கிளிக் செய்து தரவிறக்கவும். அவ்வளவு தான்.

 download-google-reader-data-3

இப்போதே உங்கள் Google Reader Data வைத் தரவிறக்குங்கள். மறந்து விட வேண்டாம், கடைசி தேதி ஜூலை 15, 2013 12 PM PST.

அடுத்த பதிவில் கூகிள் ரீடர் மாற்று தளங்கள் பற்றியும், அதில் இந்த தரவிறக்கிய தகவல்களைப் பயன்படுத்துவதைப் பற்றியும் பார்ப்போம்.

5 comments:

  1. blogger_logo_round_35

    எல்லாத்தையும் ஒரு வழியா டவுன்லோடு பண்ணி சேமிச்சு வச்சுட்டேன். இனி இதை என்ன பண்ணறதுன்னு சொல்லிக்கொடுங்க.

    ReplyDelete
    Replies
    1. blogger_logo_round_35

      அடுத்த பதிவில் சொல்கிறேன்.

      Delete
  2. Cute+bab

    Thank you for sharing ponmalar and expecting the next post.

    ReplyDelete
  3. blogger_logo_round_35

    பயனுள்ள தகவல் மிக்க நன்றி

    ReplyDelete
  4. blogger_logo_round_35