கூகிளின் RSS சேவையான Google Reader கடந்த ஜூலை 1 ந்தேதி நிறுத்தப்பட்டு விட்டது. ரீடர் மூலமாக பிடித்த தளங்களைப் படித்து வந்தவர்களுக்கு மாற்று தளங்களை தேட வேண்டிய நிலை ஏற்பட்டது. இங்கே சிறந்த 5 கூகிள் ரீடர் மாற்று தளங்களைக் குறிப்பிடுகிறேன். இவை அனைத்திலும் உங்களுடைய பழைய Google Reader Data வை புதிய தளத்தில் Import செய்து அப்படியே பயன்படுத்தும் வசதி இருக்கிறது. அதனால் உங்களுக்குப் பிடித்தமான தளங்களை மறுபடியும் சேர்க்கத் தேவையில்லை. கடந்த பதிவில் கூகிள் ரீடர் தகவல்களை எப்படி டவுன்லோடு செய்வது என்று பார்த்தோம். நீங்கள் டவுன்லோடு செய்யாவிட்டால் இப்பொழுதே செய்து விடவும், எனெனில் அதற்கான கடைசி தேதி ஜூலை 15, 2013.
1. Feedly Reader
கூகிள் ரீடர்க்கு சிறந்த மாற்று தளமான இது Cloud based இல் இயங்குவதால் எதிலிருந்தும் இந்த தளத்தை அணுகலாம். எளிமையான தோற்றம், விரைவாக புதிய தளங்களைச் சேர்க்கும் வசதி, ஒரே கிளிக்கில் குறிப்பிட்ட Category களில் தளங்களை சேர்க்கும் வசதி, Facebook, Twitter போன்ற தளங்களில் பகிரும் வசதி, பல வகையான தோற்றங்களில் (magazine,headline,cards) தளத்தைப் பார்க்கும் வசதி போன்றவை இதனை முதலிடத்தில் வைக்கிறது.
இந்த தளத்தில் Import OPML என்ற இடதுபக்க மெனுவை கிளிக் செய்து முதலில் டவுன்லோடு செய்த Google Reader Zip கோப்பை Extract செய்து Subscription.xml கோப்பை அப்லோடு செய்தால் உங்களின் பழைய ரீடர் தளங்கள் இதிலும் வந்துவிடும்.
2. Digg Reader
இந்த சேவை பிரபல செய்தி மற்றும் சமூக வலைத்தளமான Digg நிறுவனத்தால் புதியதாக தொடங்கப்பட்டதாகும். Feedly யைப் போலவே எளிமையான தோற்றம் ஆனால் சில குறைவான வசதிகள். Digg இதில் unread count, mark as unread போன்ற புதிய வசதிகளை அப்டேட் செய்து கொண்டிருப்பதாக அறிவித்திருக்கிறது.
இதில் Google Reader Data வை import செய்து பயன்படுத்த
3. The Old Reader
கூகிள் ரீடர் தளத்தின் வண்ணங்கள், இடைமுகம் போன்றே இந்த தளமும் தோற்றத்தில் ஒத்திருக்கிறது. இதில் Find Friends மூலமாக நண்பர்களை Following செய்யலாம். மேலும் பிரபல பதிவுகளை Trending இல் பார்க்கலாம்.
4. Curatta Reader.
அழகான தோற்றத்துடன் இருக்கும் தளம். மற்ற தளங்களைப் போல பதிவுகளை நெருக்கியடித்து காட்டாமல் அளவான இடைவெளியுடன் பிரிக்கப்பட்டு காண்பிக்கிறது. இவர்களும் Unread posts only வசதியை அப்டேட் செய்வதாக அறிவித்துள்ளனர்.
5. AOL Reader
இந்த தளம் பிரபல அமெரிக்க மீடியா நிறுவனமான AOL Company ஆல் புதியதாக ஆரம்பிக்கப்பட்ட தளமாகும். இதில் card view, full view, split view போன்ற பல வகையான display அமைப்புகள் இருக்கின்றன. மேலும் Facebook, Twitter, Google கணக்கிலிருந்தே புதிய AOL reader கணக்கினைத் தொடங்கலாம். தற்போது சோதனை அளவில் இருப்பதால் நிறைய வசதிகள் பின்னர் வரலாம்.
Tweet | |||
மற்றவைகளை விட Feedly தான் மிகவும் எளிதாக இருக்கிறது... நன்றி...
ReplyDeleteGood info, thanks
ReplyDeleteகூகுள் ரீடர் நிறுத்தப்பட்டதும் தடுமாறிப் போயிருந்தேன். நல்ல பயனுள்ள பதிவு. பயன்பெற்று விட்டேன். மிகவும் நன்றி தோழி !
ReplyDeleteநல்லதொரு பயனுள்ள பதிவு இது.. கூகிள் ரீடருக்கு மாற்று தேடுபவர்களுக்கு உண்மையிலேயே பயன்படும். பகிர்வுக்கு மிக்க நன்றி..!
ReplyDeleteI think feedly has some problems... In my account before closing google reader feedly works correctly. After closing , feedly didnt show some most important feeds. exactly, Blogs I am following is not shown properly... But Digg reader does it well. I didnt do any changes in feedly so far. But dont know where is mistake.\\
ReplyDeleteall settings were analysed