Apr 26, 2009

உங்கள் மொபைல் போனில் மின்னஞ்சல் அறிவிப்புகளைப்பெறலாம்!

நீங்கள் gmail அல்லது yahoo.co.in மெயில் கணக்கை பயன்படுத்துவராக இருந்தால்,
உங்கள் மொபைல் போனில் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் பற்றிய அறிவிப்பைப் பெறலாம்.



நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் அறிவிப்பில்
யார் அனுப்பியது என்றும் மின்னஞ்சலின் பொருளும் (Subject)
மொபைல் போனில் வந்து சேர்ந்து விடும் . நீங்களும் உங்கள் கணக்கில் ( Mail Account) நுழைந்து உடனடியாக பார்த்துக்கொள்ளலாம்.

இந்த தளத்தில் பதிவு செய்யவும் முதலில் .

http://wwwg.way2sms.com/jsp/UserRegistration.jsp


அதில் பெயர், மின்னஞ்சல் , உங்கள் மொபைல் எண் போன்றவற்றை தந்தால்
உங்கள் கைபேசிக்கு ஒரு குறுந்தகவலில் 4 இலக்க சங்கேதே எண் அனுப்பப்படும்.



way2sms கணக்கில்
4 இலக்க சங்கேதே எண் கொடுத்து உள்ளே சென்றால் புதிய
password கேட்கும். அதைக்கொடுத்துவிட்டு Mail என்ற tab - ஐத்தேர்வு செய்தால்
ஒரு புதிய மின்னஞ்சல் கணக்கு உருவாக்க பயனர் சொல் கேட்கும் .

உதாரணம் : example@way2sms.com
நீங்கள் கொடுத்தவுடன் உங்களுக்கான way2sms கணக்கு உருவாக்கப்படும்.

GMail

Gmail பயனராய் இருந்தால் உங்கள் gmail அமைப்புகள் செல்லவும் . அதில்
Forwarding and POP/IMAP என்ற பகுதியில் Forward a copy of incoming mail என்பதில்
தெரிவு செய்து உங்களின் way2sms மின்னஞ்சல் முகவரியைத் தந்து கீழே
keep gmails copy in the inbox என்பதை தேர்வு செய்து சேமித்தால் போதும்.



Yahoo.co.in

உங்கள் yahoo கணக்கில் சென்று options-> Mail options செல்லவும்.
அதில் இடது பக்கம் உள்ள Pop & Forwarding --> Set up or Edit Pop & Forwarding தேர்வு
செய்யவும்.

Forward பகுதியில் உங்கள் way2sms முகவரியைத்தரவும். சேமிக்கவும்.



பின்னர் Way2sms கணக்கில் நுழைந்து Settings பகுதியில் Mail Alert என்பதனை தேர்வு செய்யவும்.
Mobile preference பகுதியில் Alert me whenever கொடுங்கள்.
Time settings - ல் All 7 days & Round the clock கொடுங்கள். சேமியுங்கள்.


இனிமேல் உங்கள் gmail மற்றும் yahoo கணக்கில் வரும் மின்னஞ்சல்கள்
உங்கள் கைபேசியில் அறிவிப்பாய் வந்து சேரும்.


குறிப்பு:

1.இது yahoo.co.in மற்றும் gmail க்கு மட்டுமே பொருந்தும்.
2.இது ஒரு வாரத்திற்கு மட்டுமே செல்லும். மறுபடியும் நீங்கள் உங்கள்
way2sms கணக்கில் நுழைந்து புதுபிக்கவேண்டும்.(Renew)
3.இதில் நீங்கள் இலவசமாக குறுந்தவகலும் (sms) அனுப்பலாம் இந்தியாவிற்குள்.
4.இங்கிருந்தே நீங்கள் உரையாடவும் முடியும் (Chatting)

7 comments:

  1. attakaasam arumai... migavum ubayogapadum. nandrigal kodi

    ReplyDelete
  2. சூப்பர் பதிவு ..:-) இதே மாதிரி இன்னோன்னு எனக்கு தெரியும்.. நானும் போடுறேன் வந்து பாருங்க

    ReplyDelete
  3. thanks for the info, but this is applicable only users within India.

    u need not go this long way, directly u can register in yahoo messger , yr movbile number.

    ReplyDelete
  4. any option to use for yahoo.com ID
    or For sri lankan users please let us know
    bye

    ReplyDelete
  5. Tamilish is supporting us.

    Good to hear.

    உங்க போஸ்ட்ஸ் எல்லாம் தமிழிஷில் பப்ளிஷ் ஆவது குறித்து மகிழ்வு.

    ReplyDelete