விசுவல் பேசிக்கில் அதனோடு இணைந்த பல Active X Control கள்
உள்ளன. அவை விசுவல் பேசிக்கை நிறுவும் போதே முறைப்படி
பதிவு (Register) செய்ய்ப்பட்டு விடும். உதாரணத்திற்கு,
Microsoft Winsock control - mswinsck.ocx
Microsoft Windows common controls -mscomctl.ocx
இது போல பல உள்ளன.
நாம் பயன்பாட்டை மேலும் மெருகேற்ற வெளியில் கிடைக்கும்
சில ActiveX Control களை பயன்படுத்தலாம். ஆனால் அவை நிறுவும் வகையில் இல்லாமல் “.ocx” (OLE Control Extension ) அல்லது “.dll” (Dynamic Link Library ) கோப்புகளாய் கிடைத்தால் நாம் தான் அவற்றை பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவற்றைப் பயன்படுத்த இயலாது.
Start மெனுவில் RUN சென்று கீழ்க்கண்ட அமைப்பில் தட்ட்ச்சு செய்யவும்.
Regsvr32 file_pathname
(எ.கா)
Regsvr32 c:\vb\pacemultibutton.ocx
கோப்பு சரியாகப்பதிவு செய்யப்பட்டால் ஒரு செய்தி தோன்றும்.
பயனுள்ள இரண்டு ActiveX Control கள்
1.PaceMultiButton.ocx
இது படிவத்தில் ( Form ) உள்ள Command Button களுக்கு பல்வேறு வகையான வடிவமைப்பைத்தருகிறது. ( Mac style, Xp Style, Netscape Style, Java Style). இதன் தரவிறக்கச்சுட்டி
http://www.4shared.com/file/102408583/5d3fd6da/PaceMultiButton.html
இதை regsvr32 மூலம் பதிவு செய்து விட்டு உங்கள் விசுவல் பேசிக்
படிவத்தில் project menu சென்று Components தேர்வு செய்யவும்.
அதில் Controls Tab - இல் Pacemultibutton என்பதை தேர்வு செய்தால் கருவிப்பட்டையில் இணைக்கப்பட்டு விடும். பின் படிவத்தில் Button - ஐ இணைத்து அதன் properties window - வில் Button type என்பதில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து வண்ணமயமாக மாற்றுங்கள்.
2.MenuExtended.dll
இது Menu வின் வடிவமைப்பை மாற்றித்தருகிறது. ( Gradient Menus,
XP Style, Office XP Style) . இதன் தரவிறக்கச்சுட்டி
http://www.4shared.com/file/102408588/caed0f52/MenuExtended.html
இதை register செய்து விட்டு Project -> References சென்று
Menu Extended என்பதை தேர்வு செய்யுங்கள்.
பின் படிவத்தில் உங்கள் Menu - வை design செய்யுங்கள். அதே
படிவத்தில் ஒரு ImageList ஒன்றை சேர்த்து விட்டு கீழே உள்ள
நிரல் வரிகளை படிவத்தில் இணைத்துவிட்டு F5 கொடுத்து
RUN செய்யவும்.
|
Call objMenuEx.Install(Me.hWnd, sFileIni, ImageList1, 3, MenuEvents)
இந்த வரியில் உள்ள 3 என்ற எண்ணுக்குப்பதிலாக 0,1,2,3
போன்றவற்றை கொடுத்து மாற்றிப்பாருங்கள்.உங்கள் மெனு அழகாக
காட்சியளிக்கும். மேலும் Menu Extended.dll பற்றி அறிய கீழே உள்ள
வலைப்பக்கத்தில் பாருங்கள்.
http://www.vbcorner.net/
அப்பாடா..... முடித்துவிட்டேன்!பின்னூட்டம் இடுங்கள் நண்பர்களே!
Tweet | |||
Very Good
ReplyDeleteVery Nice. Continue this type of Posts.
ReplyDelete