இணையத்தில் சில வலைப்பக்கங்களைப் பார்வையிடும் போது 404 Error - Page Not Found என்று தோன்றுவதைப் பார்த்திருப்பீர்கள். நீங்கள் ஒரு இணையப் பக்கத்தைப் பார்க்க கிளிக் செய்யும் போது அது கோரிக்கையாக (Request) இணைய சர்வருக்குச்(Server) கொண்டு செல்லப்படுகிறது. ஆனால் இணைய சர்வரினால் அந்தப் பக்கத்தைக் கண்டறிய முடியாமல் வெளியிடும் Response Code தான் 404 - Page Not Found என்கிற பிழைச்செய்தி . இது மாதிரி சர்வரினால் வெளியிடப்படும் ஒவ்வொரு பிழைச் செய்திக்கும் ஒரு எண் இருக்கிறது. இதற்கு காரணம் என்னவென்றால் நமது வலைப்பூவில் சில பதிவுகளை எதேனும் பிரச்சினை காரணமாக அழித்திருக்கலாம். ஆனால் அந்தப் பதிவின் இணைப்புகள் கூகிள் தேடலிலோ அல்லது வேறு எதேனும் தளங்களிலிலோ இருக்கக் கூடும். அதனைக் கிளிக் செய்து வரும் வாசகர்கள் இந்தப் பிழைச்செய்தியைக் காணலாம்.
இந்த மாதிரி வலைப்பூவில் அழிக்கப்பட்ட பக்கங்களின் இணைப்பு காரணமாக Search Engine Optimization (SEO) என்று சொல்லப்படும் வலைப்பூவின் தரம் குறையும். உங்கள் வலைப்பூவின் பதிவுகள் கூகிள் போன்ற தேடியந்திரங்களில் முக்கியத்துவம் இன்றி போகும் அல்லது தேடல் தரவுகளிலிருந்தே (Search Index) உங்கள் வலைப்பூ நீக்கப்படலாம். மேலும் வாசகர்கள் இந்தப் பிழைச் செய்தியைக் கண்டு எரிச்சலடைந்து தளத்தை விட்டு வெளியேறலாம்.
இதற்கு என்ன செய்யலாம்?
1.பிளாக்கரில் இயல்பாக காட்டப்படும் பிழைச்செய்திக்குப் பதிலாக அழகான HTML/CSS பக்கம் ஒன்றை நாமே உருவாக்கி வலைப்பூவை விட்டு வெளியேறாமல் செய்தல்.
2.குறிப்பிட்ட அழிக்கப்பட்ட பதிவினை வலைப்பூவில் தற்போதுள்ள மற்றொரு பதிவிற்கு Redirect செய்யலாம்.
3.அழிக்கப்பட்ட அல்லது வலைப்பூவில் இல்லாத பதிவுகளின் முகவரிகளை தேடியந்திரங்களின் தேடல் தரவுகளிலிருந்து நீக்குதல்.
Custom 404 Error Page :
சில மாதங்களுக்கு முன் வரை இந்த 404 Page not Found க்கு நாமே ஒரு அழகான பக்கத்தை வைப்பது என்பது பிளாக்கரில் கிடையாது. ஆனால் தற்போதுள்ள புதிய பிளாக்கர் இடைமுகத்தில் HTML/CSS நிரல்வரிகளைக் கொண்டு நாமே நமது வலைப்பூவிற்கான Error Page எப்படி காட்டப்பட வேண்டும் என அமைக்கலாம். இந்த வசதி பற்றி சிறியதாக பிளாக்கரில் SEO என்ற பதிவில் எழுதியிருக்கிறேன். இயல்பாக பிளாக்கரில் ஒரு பதிவு காணவில்லையெனில் கீழ்க்கண்ட மாதிரியில் பிழைச்செய்தி தோன்றும்.
HTML மற்றும் CSS உதவியுடன் எளியதாக இந்த 404 Error Page ஒன்றை நானாக உருவாக்கியுள்ளேன். இதில் Back, Home, Contact போன்ற இணைப்புகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன.
இதைப் பயன்படுத்த புதிய பிளாக்கர் இடைமுகத்தில் சென்று Settings->Search Preferences செல்லவும். பின்னர் Custom Page Not Found? என்பதற்குப் பக்கத்திலுள்ள Edit ஐக் கிளிக் செய்து வரும் பெட்டியில் கீழ்க்கண்ட வரிகளை பேஸ்ட் செய்து சேமித்துக் கொள்ளவும்.

Sorry!

The Page you were looking for could not be found. The page may have been removed from our Blog. Please go further with below options.

Back

Home

Contact

மேற்கண்ட வரிகளில் சிவப்பில் உள்ளவற்றில் உங்கள் வலைப்பூவின் முகவரியும், உங்களின் தொடர்புக்கான பக்கத்தின் முகவரியும் கொடுத்து விடுங்கள். காட்டப்படும் செய்தியை தமிழில் வைக்க அல்லது மாற்ற ஊதா நிற வரிகளை மாற்றவும். வேறு படம் வைக்க பச்சை நிறத்தில் உள்ள நிரல்வரிகளை மாற்றுங்கள். இந்த மாதிரி நீங்களே HTML/CSS கொண்டு எளிதான 404 Error page ஒன்றினை உருவாக்கி வைத்து விட்டால் வாசகர்கள் குழப்பமடையாமல் பார்த்துக் கொள்வார்கள்.
உதாரணத்திற்கு எனது அழிக்கப்பட்ட பதிவினைக் கிளிக் செய்து பாருங்கள்
Tweet | |||
super news
ReplyDeleteuseful links
ReplyDeletesupep news
ReplyDeletecome to my blog www.suncnn.blogspot.com
payanulla kurippugal adangiya padhivu. thank you!
ReplyDeleteபயனுள்ள பதிவு.
ReplyDeleteநான் ட்விட்டருக்கான பக்கம் தொடங்கியுள்ளேன். ஆனால் என் கருத்துக்களை எங்கே பதிவு செய்வது என்று தெரியவில்லை.விளக்கமுடியுமா?
ReplyDeleteமிகவும் பயனுள்ள பதிவு வாழ்த்துக்கள் தோழி
ReplyDeleteசூப்பர்...அருமையான பயனுள்ள பதிவு. பதிவில் இருக்கிற மாதிரி செய்து முடித்ததும்..
ReplyDeleteWarning! Use with caution. Incorrect use of these features can result in your blog being ignored by search engines. இப்படி ஒரு மெசேஜ் காட்டுது. இது என்ன? அப்படியே சொல்லிடுங்களேன்..!
ReplyDeleteபழனிவேல் மறுபடியும் பிளாக்கரில் கவனியுங்கள். நீங்கள் சொல்லும் விசயம் Crawlers and Indexing பகுதியில் தான். அதில் மாற்றம் செய்ய கொஞ்சம் கவனித்து செய்ய வேண்டும். 404 Error Page not found இல் மாற்றம் செய்ய ஏதும் பிரச்சினையில்லை.
Deleteவிளக்கம் புரிந்தது. நன்றி..!
Delete404 Error Page நன்றாக அழகாக உருவாக்கி உள்ளீர்கள் ..
ReplyDeleteஆஹா ! நல்ல பதிவு !
ReplyDeleteNICE
ReplyDeleteபயனுள்ள பதுவு சகோ.! பிழை செய்தி பக்கமும் அழகாக உள்ளது.
ReplyDeleteஇன்றைய வலைசரத்தில் உங்கள் பதிவைப்பற்றி குறிப்பிடும் வாய்ப்பு கிடைத்தது.நேரம் இருப்பின் வருகை தந்து கருத்து தெரிவிக்கவும்
ReplyDeletehttp://blogintamil.blogspot.in/2012/06/6.html
சூப்பர் தகவல்...
ReplyDeleteபயனுள்ள பதிவு நன்றி
ReplyDeleteநான் பயன்படுத்திய எச்சரிக்கை செய்தி தமிழில்
மன்னிக்கவும்!
நீங்கள் தேடிய பக்கம் இவ்வலைப்பதிவில் தென்படவில்லை. அது நீக்கப்பட்டிருக்கலாம். மேலும் தொடர கீழுள்ளவைகளில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யுங்கள்

ReplyDeleteஇதனை எப்படி செய்வது சகோ.!
[நேற்று இரவு குறிப்பிட்ட ஒரு பதிவை நீக்கினேன். அந்த பதிவு நேற்று வரை தேடு பொறி எந்திரத்தில் காட்டப்படவில்லை.! அந்த பதிவை நீக்கியதும் எனது வலைத்தளத்தை தேடினால் குறிப்பிட்ட நான் நீக்கிய அந்த பதிவு தான் முதலில் வந்து நிற்கிறது.!]