Jul 31, 2010

பிடிஎப் கோப்பிலிருந்து ஒளிப்படங்களாக மாற்ற இலவச மென்பொருள்

pdficon
தற்போது சந்தையில் பல பிடிஎப் கோப்புகளை பார்க்க மென்பொருள்கள் கிடைக்கின்றன. ஆனால் இந்த Cool pdf reader மென்பொருள் மிகச்சிறிய அளவில் நிறைய வசதிகளோடு பயன்படுத்த எளிமையாக உள்ளது.

இந்த மென்பொருள் மூலம் நீங்கள் பிடிஎப் கோப்புகளை பார்க்கலாம்,படிக்கலாம், அச்சுக்கும் கொண்டு செல்ல முடியும்.கூடவே கோப்புகளை பல்வேறு ஒளிப்பட வகைகளில் மாற்றிக்கொள்ளலாம். இந்த மென்பொருள் மூலம் மாற்ற முடிந்த ஒளிப்பட வகைகளாவன.
BMP,JPG,GIF, PNG, WMF, EMF and EPS

Cool-PDF-Reader
மேலும் உங்கள் பிடிஎப் கோப்புகளை நீங்கள் சாதாரண .txt வகை கோப்பாகவும் மாற்றமுடியும். இதனால் பிடிஎப் கோப்பை வேறு ஆவணக்கோப்புகளில் பயன்படுத்திக்கொள்ளலாம். இன்னொரு வசதியாக பிடிஎப் கோப்பின் ஒவ்வொரு பக்கத்தையும் slide show போன்று நகரும் படமாகவும் பார்க்கலாம்.

இதனை நீங்கள் நிறுவத்தேவையில்லை. அப்படியே தரவிறக்கி பயன்படுத்தலாம். கோப்பின் அளவோ வெறும் 650 KB தான்.நன்றி!
தரவிறக்கச்சுட்டி: Download Cool PDF Reader

3 comments:

  1. gk

    மிகவும் பயனுள்ள பதிவு நண்பா.

    நண்பர்கள் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  2. gk

    மிகவும் பயனுள்ள பதிவு சகோதரி.

    நண்பர்கள் தின வாழ்த்துகள்.

    ReplyDelete
  3. mike-monster-inc

    ரொம்ப நல்லாயிருக்கு எனக்கு பயன்படுகிறது. நன்றி!

    என் முயற்சி பார்த்து கருத்து சொல்லுங்கள்! அடோப் ஃபிளாஷ்

    அன்புடன்
    எஸ். கே

    ReplyDelete