
கூகிள் தனது பிளாக்கர் சேவையில் SEO விசயங்களில் குறிப்பிடத்தக்க மாற்றங்களைக் கொண்டு வந்துள்ளது. Search Engine Optimization(SEO) என்பது கூகிள் உள்பட தேடுபொறிகளில் நமது இணையதளத்தை முன்னுக்குக் கொண்டு வருவதற்கும் தேடல் மூலம் நமக்கு அதிக வாசகர்கள் வரவும் செய்யப்பட வேண்டிய வேலைகளாகும். இது நமது தளத்தின் முகவரியிலிருந்தே (URL) ஆரம்பிக்கிறது. பிளாக்கின் Title மற்றும் Description, பிளாக் பதிவுகளின் தலைப்பு, ஒளிப்படங்களுக்கு ALT tag, சுட்டிகளின் தலைப்பு (Link Titles) போன்ற இன்னும் பல இடங்களில் பொருத்தமானவற்றைப் பயன்படுத்துவதே நமது பிளாக்கை மேம்படுத்தும் SEO வேலைகளாகும். இதைப் பொறுத்து தான் கூகிள் உட்பட பல தேடுபொறிகள் தேடலின் போது நமது இணையதளத்தை தரவரிசைப் படுத்தி காட்டுகின்றன. இப்போது வரை இந்த மாதிரி விசயங்களை நாமே நிரல்வரிகளில் தேடி மாற்றியமைக்கும் படியே இருந்தன.
Read More