Mar 12, 2012

VLC மீடியா பிளேயரில் வீடியோவை கட் செய்யலாம்!


விஎல்சி மீடியா பிளேயர் ( Vlc Media Player) கணிணியில் அனைத்து வகையான வீடியோக்களையும் இயக்க முதன்மையான மென்பொருளாக இருக்கிறது. எளிமையான இந்த மென்பொருள் புதிய வசதிகளுடன் Version 2 வெளியிடப் பட்டிருக்கிறது. இப்போது இந்த மென்பொருளிலேயே நீங்கள் வீடியோவில் தேவையான பகுதிகளை விருப்பப்படி கட் செய்து கொள்ள முடியும். இதன் மூலம் வீடியோ கட்டராகவும் இந்த மென்பொருள் பயன்படும்.

இதற்கு கணிணியில் புதிய பதிப்பான VLC 2.0 நிறுவியிருக்க வேண்டும். இல்லாதவர்கள் கீழுள்ள சுட்டியில் சென்று தரவிறக்கி நிறுவிக் கொள்ளவும்.


VLC மென்பொருளைத் திறந்து View மெனுவில் Advanced Controls என்பதனை கிளிக் செய்தால் மென்பொருளின் கீழ்புறத்தில் புதிய வசதிகளுடைய ஐகான்கள் தோன்றும். அதில் முதல் பட்டன் சிவப்பு நிறத்தில் Record என்றிருக்கும். தேவையான பகுதி ஆரம்பிக்கும் இடத்தில் ஒரு முறை அந்த பட்டனில் கிளிக் செய்யவும். பிறகு வீடியோ எதுவரை வேண்டுமோ அதுவரை வீடியோவை ஓடவிடவும். மறுபடியும் அதே Record பட்டனைக் கிளிக் செய்தால் தேவையான வீடியோவின் பகுதி கட் செய்யப்பட்டு விடும்.
வெட்டப்பட்ட வீடியோ Mp4 பார்மேட்டில் My Documents->My Videos போல்டரில் சேமிக்கப்பட்டிருக்கும். ஆனால் இதில் உள்ள குறை என்று பார்த்தால் தேவையான பகுதி வீடியோவை ஓட விட்டால் மட்டுமே கட் செய்ய முடியும். இருப்பினும் வேகமாக எளிமையான முறையில் கட் செய்து விடVLC மீடியா பிளேயரைப் பயன்படுத்தலாம்.

15 comments:

  1. அருமையான வசதி இனி தனியாக வீடியோ -வை கட் செய்ய மென்பொருள் தேவை இல்லை

    நன்றி மேடம்

    ReplyDelete
  2. நல்ல தகவல். நன்றிகள் பல.

    ReplyDelete
  3. பயனுள்ள தகவல் ! ரொம்ப நன்றி சகோதரி !

    ReplyDelete
  4. நானும்,எனது வலைபூ விற்கு ,வீடியோ கட் செய்ய,தேவை இல்லாமல் ,பல மென்பொருட்களை ,தரவிறக்கம் செய்து,நொந்து போனேன்.....அப்போது எதோ ஒரு இணையதளத்தில் ,ஒரு வாசகர் ,இது பற்றி கமெண்ட் செய்திருந்தார்.அன்று முதல் இன்று வரை ,நான் இதை தான் பயன் படுத்தி வருகிறேன்.....வாசகர்களுக்கு பகிர்ந்தமைக்கு மிக்க நன்றி......

    pangusanthai-eLearn

    ReplyDelete
  5. super information malar. thanx..

    ReplyDelete
  6. நல்ல தகவல்.பகிர்ந்தமைக்கு நன்றிங்க.

    ReplyDelete
  7. nanum ethai drai seithu parthen ana audio mattumthan cat agi varuthu video vara mattuthu ethukku enna seivathu...?

    ReplyDelete
  8. ithai thaan naan romba naatkalaga ethirparthean. very super news.
    thanks

    ReplyDelete
  9. Wow! This is a happy news for me as I am using VLC Player daily for viewing files...

    ReplyDelete
  10. நல்ல தகவல். நன்றி - patel -tirupur - tamilnadu

    ReplyDelete
  11. how to join and make one full video

    ReplyDelete
  12. மிக்க நன்றி

    ReplyDelete
  13. மிக்க நன்றி

    ReplyDelete