Jan 26, 2013

ப்ளாக்கர் பதிவுக்குள் குறிப்பிட்ட பத்திக்கு Internal Linking கொடுப்பது எப்படி?

how-to-add-internal-links-in-blogger-posts-3
நம்முடைய பதிவிலிருந்து வேறு பதிவு அல்லது மற்றவர்களின் பதிவுக்கு நேரடியாக சுட்டி (Link ) ஒன்றின் மூலம் இணைப்பு கொடுப்பது Linking எனப்படும். இதன் மூலம் இன்னொரு பதிவிற்கு நேரடியாகவும் சுலபமாகவும் செல்ல முடியும். நமது பதிவுகளில் கூட எழுதும் பதிவிற்கு எதேனும் தொடர்புடைய பதிவுகள் இருப்பின், அதனை Link ஆக குறிப்பிட்டிருப்போம்.

Internal Linking என்றால் என்ன?

வழக்கமாக நாம் வேறொரு பதிவிற்குத் தான் Link கொடுப்போம். அதனைக் கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட இணைய முகவரிக்குச் சென்று விடும். ஆனால் ஒரு பதிவிற்குள்ளேயே பல பகுதிகளுக்கு Link கொடுப்பது தான் Internal Linking எனப்படும். இதன் மூலம் ஒரு பெரிய கட்டுரையில் பல பத்திகளாக/பகுதிகளாக எழுதும் போது வாசகர்களுக்குத் தேவையான பகுதியை மட்டும் எளிதாகவும் விரைவாகவும் சென்று படிக்க வைப்பதாகும்.

உதாரணத்திற்கு ஒரு சிலர் சொந்தக் கதை கொஞ்சம், முக்கியக் கருத்து கொஞ்சம் என்று பதிவில் எழுதுவார்கள். நாம் அந்த முக்கியக் கருத்தை மவுசால் நகர்த்தி தேட வேண்டியிருக்கும். இந்த முறையைப் பயன்படுத்தினால் ஒரே கிளிக்கில் அந்த பத்திக்கு/இடத்துக்கு வாசகர்கள் சென்று விடுவார்கள்.

ஒரு சில இணையதளங்களில் பல Section களாக பிரித்து எழுதியிருப்பார்கள். மேல்புறத்தில் அனைத்து Section Heading களையும் கொடுத்திருப்பார்கள். கிளிக் செய்தால் அந்த குறிப்பிட்ட பத்திக்கு மட்டும் விரைவாகச் சென்று படித்துக் கொள்ளலாம். இதன் மூலம் நமது வலைப்பூவின் SEO தரம் கண்டிப்பாக மேம்படும். மேலும் இது வாசகர்களுக்கு Navigation போலவும் செயல்படும்.

பதிவுக்குள் Internal Linking கொடுப்பது எப்படி?

1. Section Heading Link உருவாக்குவது :

முதலில் Link கொடுக்கப் பட வேண்டிய Section/Heading இடத்திற்கு ID ஒன்றினை எதாவது ஒரு HTML Tag உடன் இணைத்துக் கொடுக்க வேண்டும். ID என்பதில் அந்த Heading இடத்திற்குத் தகுந்த மாதிரி ஒரு பெயரை வைத்துக் கொள்ளலாம். பின்னர் இந்த ID யை வைத்துத் தான் தேவையான இடத்தில் சுட்டியாக குறிப்பிட/கூப்பிட வேண்டும்.

Heading
Heading

Heading

Heading

how-to-add-internal-links-in-blogger-posts-1

மேற்கண்ட மாதிரி HTML Formatting Tag அல்லது Link Tag ஆகியவற்றுக்குள் ஐடி கொடுத்தால் பொருத்தமாக இருக்கும். ஆனால் நீங்கள் எந்த டேகிலும் ஐடி கொடுக்கலாம்.

2. பதிவில் சுட்டியை (Link) பயன்படுத்துவது:

மேற்கண்ட முறையில் உருவாக்கப்பட்ட தலைப்புகளுக்கு சுட்டியை கீழே உள்ளவாறு   Tag இல் குறிப்பிட்ட ஐடியைக் கொடுத்து பயன்படுத்த வேண்டும். இவற்றைக் கிளிக் செய்வதன் மூலம் குறிப்பிட்ட பத்திக்கு நேரடியாகச் செல்லலாம்.

Format: Your Link
Example:  Go to Section 2

how-to-add-internal-links-in-blogger-posts-2

Live Demo ( கிளிக் செய்து பார்க்கவும்)

a) What is Internal Linking?
b) Create Section Heading Links
c) How to Use Internal Links to Sections

வேறொரு பதிவுக்குள் இருக்கும் ஒரு பத்திக்கு Link கொடுப்பது எப்படி?

முதல் படியில் பார்த்தவாறு அந்த பதிவில் Section Heading Link ஐ உருவாக்கவும். பின்னர் அந்தப் பதிவின் முகவரியோடு #SectionID யை Link ஆக கொடுத்தால் மற்றொரு பதிவின் குறிப்பிட்ட இட்த்திற்கு நேரடியாக சென்று விடலாம்.

Format :  Switch Blogger Profile to Google+

Live Demo : Switch Blogger Profile to Google+ (கிளிக் செய்க)

12 comments:

1. blogger_logo_round_35

பயனுள்ள பதிவு சகோ.!

ReplyDelete
2. images

ரொம்ப பயனுள்ள தகவல்! மிக்க நன்றி சகோதரி.

இதேபோலவே, நம் பதிவின் முந்திய பகுதியிலோ அல்லது எப்போதோ எழுதிய பதிவின் ஒரு பகுதியிலோ.. ஏற்கனவே சொல்லியிருந்த‌ ஒரு முக்கியக் கருத்தினை மேற்கோள் காட்டுவதற்கு அதை மீண்டும் எழுதுவதற்கு பதிலாக, ஒரு சொல் அல்லது ஒரு வார்த்தையை கிளிக் செய்வதன் மூலம் அந்த பத்திக்கு நேரடியாக செல்லும்போது, படிக்கத் தேவையான அந்த வார்த்தையை ஹைலைட் பண்ணிக் காட்டுவதுபோல் சில ஆங்கில தளங்களில் பார்த்திருக்கிறேன். (அப்படி க்ளிக் பண்ணியவுடன்) தேவையான வார்த்தைகளை மட்டும் ஹைலைட் பண்ணிக் காட்டுவது எப்படி? என்று தெரிந்தால் சொல்லுங்களேன்.

ReplyDelete
Replies
1. blogger_logo_round_35

நன்றி சகோ. பார்த்து விட்டு சொல்கிறேன்.

Delete
2. images

சகோ. பொன்மலர்,

நீங்கள் கூறிய இந்த முறைப்படி என்னுடைய ஒரு பதிவிற்குள் ஒரு பகுதிக்கு Link கொடுத்துப் பார்த்தபோது, சரியாக வரவில்லை. என்ன ப்ராப்ளம் என புரியவில்லை. வேறொரு பதிவுக்குள் இருக்கும் ஒரு பத்திக்கு Link கொடுத்ததும் சரி வரவில்லை. என் ப்ளாகில் எந்த லிங்க்கினை க்ளிக் செய்தாலும் புதிய Tab-ல் ஓபன் ஆவது போல் முன்பு ஒருமுறை செட் செய்திருந்தேன். ஒருவேளை அதனால் இந்த Internal Linking முறை வேலை செய்யாமல் இருக்குமா? அல்லது வேறு எதுவும் இருக்குமா? தயவுசெய்து விளக்கமளிக்கவும்.

Delete
3. .com/img/b/R29vZ2xl/AVvXsEh8R-jEOZ8Nk7NcVKrYUrJQdA7pXBAovyQ9QyVCaJpXKZZtfL9fTByAfkaDk8-DpiBLpu7eJA7tIwxyt_kiOFBvY5lOcWKYaPDI5Qqllo9A0uorn2yeobnSOdbWGEvP0Q/s45-c/

பெரிய பதிவுகளுக்கு மிகவும் உபயோகமானது. நன்றி.

ReplyDelete
4. blogger_logo_round_35

http://kaviyazhi.blogspot.com/2013/01/blog-post_7036.html
இந்த எனது பதிவு மறைந்துவிட்டது எப்படி மீட்டெடுப்பது? உதவுங்களேன்

ReplyDelete
5. blogger_logo_round_35
6. blank

உங்கள் தளத்தில் விளம்பரம் இருக்கிறதே அதே போன்று என் வலைப்பூவிலும் விளம்பரத்தை பதிக்க என்ன செய்வது ?

ReplyDelete
7. blogger_logo_round_35
8. sureshbabu

நல்லதொரு தகவல்! நன்றி!

ReplyDelete
9. blank

இனையத்தில் உலாவும் போது எம்மை யாராவது பின்தொடர்கின்றாகளா என்பதை எப்படி அறிவது தடுப்பதற்கு மென்பொருள் உள்ளதா?

ReplyDelete
10. .com/img/b/R29vZ2xl/AVvXsEizDrv21Y0PJ7UkKf6ePu8V_k_uahoiSeDvuXqchCCc--geLBr2UmLxodt3sawDWlNY-6ENv2k4kePABeEe6JEr-TUFLY8ixdTsuSdlSSeKCJSpQ7V4OSy28rVpSY2HKDY/s45-c/

இன்றைய பதிவில் உங்களின் இந்தப் பதிவில் சொன்னதைப் போல் செய்து பார்த்தேன்... நன்றி சகோதரி... நேரம் கிடைப்பின் :

http://dindiguldhanabalan.blogspot.com/2014/02/Students-Ability-Part-14-and-LEADER.html

ReplyDelete