Apr 19, 2013

ப்ளாக்கரில் புதிய வசதி – கூகிள்+ கமெண்ட் பாக்ஸ் சேர்ப்பது எப்படி?


ப்ளாக்கர் வலைப்பதிவுகளில் கூகிள்+ ப்ரோபைல் மூலமாக கருத்துரைகள் (Comments ) சேர்ப்பதற்கான வசதியைக் கொண்டு வந்திருக்கிறார்கள். ஏற்கனவே ப்ளாக்கர் தளத்தோடு கூகிள் பிளஸ் சேவைகளை இணைத்து வருவதைப் பற்றி சொல்லியிருக்கிறேன். Google+1 Button, Google+ Profile, Google+ Badge மற்றும் Google+ Followers Widget போன்ற சேவைகள் ப்ளாக்கினை மேலும் மெருகேற்றவும் சமூக வலைத்தளமான கூகிள்+ மூலமாக வாசகர்களை அதிகரிக்கவும் பயன்படுகின்றன. இப்போது ஃபேஸ்புக் கமெண்ட்ஸ் போன்று வந்துள்ள சேவை தான் Google+ Comments ஆகும்.
google-plus-comment-box-in-blogger-3

வசதிகள்

• இதன் மூலம் கூகிள்+ இல் நுழைந்திருக்கும் வாசகர்கள் எளிதாக கருத்திடலாம்.

• வலைப்பதிவில் இடப்படும் சாதாரண பின்னூட்டங்கள்,
நீங்கள் பதிவினை கூகிள்+ இல் பகிர்ந்து அதில் கிடைக்கும் கருத்துகள், கூகிள்+ இல் பகிரப்படும் நமது பதிவுகளின் விவரம் போன்ற மூன்று வகையான தகவல்களும் கூகிள்+ கமெண்ட் பெட்டியில் பார்க்கலாம்.

• பின்னூட்டம் இடும் போது அதனை அவர்கள் public அல்லது குறிப்பிட்ட நண்பர்களின் வட்டத்திற்கு (Google+ circles) மட்டும் தெரியுமாறு பகிரலாம்.

• பின்னூட்டம் இட்டு விட்டு உடனடியாக பதிவினை கூகிள்+ இல் எளிதாக பகிரலாம்.

கூகிள் ப்ளஸ் கமெண்ட் பாக்ஸ் எப்படி சேர்ப்பது?

முதலில் நீங்கள் ப்ளாக்கர் ப்ரோபைல் பயன்படுத்தி வந்தால் கூகிள்+ ப்ரொபைலுக்கு மாறி விடுங்கள். இதற்கு Blogger Dashboard இல் உங்கள் ப்ளாக்கை கிளிக் செய்தால் Overview பகுதி வரும். அதில் இடதுபுற மெனுவில் Google+ சென்று Get Started -> Switch Now கிளிக் செய்து மாறிக்கொள்ளவும்.

மறுபடியும் ப்ளாக்கர் டாஷ்போர்டின் இடதுபக்க மெனுவில் Google+ என்பதை கிளிக் செய்யவும். பின்னர் Google+ Settings பக்கத்தில் Use Google+ Comments on this Blog என்ற கட்டத்தில் டிக் செய்து கொள்ளவும். அவ்வளவு தான்.

google-plus-comment-box-in-blogger-1

வலைப்பூவின் டெம்ப்ளேட் Custom Template ஆக இருந்தால் இந்த முறை வேலை செய்யாது. அதற்கு Blogger Dashboard-> Template பக்கத்திற்குச் சென்று பின் Edit Html என்பதைக் கிளிக் செய்யுங்கள்.
பின்வரும் நிரல்வரியை CTRL+F கொடுத்து தேடவும்.

<b:if cond='data:post.showThreadedComments'>

இந்த நிரல்வரி இருப்பின் கீழ்க்கண்ட நிரலை அதற்கு மேல் சேர்க்கவும். (ஒன்றுக்கு மேற்பட்ட இடத்தில் இருப்பின் அத்தனை இடத்திலும் சேர்க்கவும்.)

<div class='cmt_iframe_holder' expr:data-href='data:post.canonicalUrl' expr:data-viewtype='data:post.viewType'/>

இறுதியாக Save Template கொடுத்து சேமிக்கவும்.

குறிப்புகள்:

• வலைப்பூவின் பழைய கருத்துகள் இதில் இணைந்து விடும்.
• ப்ளாக்கரில் பதியப்படும் சாதாரண பின்னூட்டங்களுக்கு Reply வசதியில்லை.
• நீங்கள் வலைப்பூவை வேறு முகவரிக்கு அல்லது டொமைனுக்கு மாற்றினால் கருத்துரைகள் அழிந்து விடும்.
• DISQUS போன்ற மற்ற கருத்துப்பெட்டி பயன்படுத்துபவர்கள் மாறினாலும் அழிந்துவிடும்.
• Google+ Profile இல்லாதவர்கள் கமெண்ட் போட முடியாது.

7 comments:

  1. .com/img/b/R29vZ2xl/AVvXsEizDrv21Y0PJ7UkKf6ePu8V_k_uahoiSeDvuXqchCCc--geLBr2UmLxodt3sawDWlNY-6ENv2k4kePABeEe6JEr-TUFLY8ixdTsuSdlSSeKCJSpQ7V4OSy28rVpSY2HKDY/s45-c/

    முதலில் பிளாக்கர் கருத்துரை பெட்டி, பிறகு முகநூல் கருத்துரை பெட்டி, இப்போது G+ கருத்துரை பெட்டி

    தளம் முழுக்கவே பெட்டிகளாக ஆகி விடும் என்று நினைக்கிறேன்...

    இருந்தாலும் கொடுத்துள்ள குறிப்புகளுக்கு நன்றி...

    ReplyDelete
  2. .com/img/b/R29vZ2xl/AVvXsEgUTng0Ves30qMaAxm6CJSd8-gealEXWpyuWclAe2SL2-AWMx5TOSgiuYrIrbNiPhwLHCwPmY5O_9vUBLdZry_D7h9yqywLux-bZNsBTKkPy9wE9fmQ8zTbTw1f99E8xQ/s45-c/

    மிக்க நன்றி தோழி பகிர்வுக்கு .

    ReplyDelete
  3. sureshbabu

    நல்ல உப யோகமான தகவல்! நன்றி!

    ReplyDelete
  4. alagu

    பகிர்வுக்கு மிக்க நன்றி..!

    ReplyDelete
  5. blogger_logo_round_35

    அருமையான தகவல்! தெளிவான விளக்கத்துடன் பகிர்ந்தமைக்கு நன்றி!

    ReplyDelete
  6. blogger_logo_round_35


    லைஃப்லே சிலதை இணைத்துவிட்டால் பின்னே டெலிட் பண்ணுவது ரொம்ப சிரமம்.
    அதுனாலே தான்,
    திண்டுக்கல் தனபாலன் எங்கே சொல்லிடப்போறாரே அப்படின்னு
    முந்திக்கிட்டு, வள்ளுவர் சொல்லிட்டாரு..

    எண்ணித் துணிக கருமம். துணிந்தபின்
    எண்ணுவம் என்பது இழுக்கு.

    ஃப்ரன்ட்ஸும் அப்படித்தான். பி சூஸி. யூ வில் நெவர் ரிக்ரெட்.

    சுப்பு தாத்தா.
    www.subbuthatha.blogspot.com

    ReplyDelete
  7. blogger_logo_round_35

    தகவலுக்கு நன்றிங்க

    ReplyDelete