தற்போதைய சமூக வலைத்தளங்களில் மிக பிரபலமான ஒன்றான ட்விட்டர் (Twitter) பல சேவைகளுக்குப் பயன்படுகிறது. 140 எழுத்துகள் எல்லையுடன் செய்திகளை பல நண்பர்களுக்கு அனுப்பவும் வலைப்பதிவர்கள் தங்களது பதிவுகளை ட்விட்டரில் போட்டு Blog Traffic அதிகரிக்கவும் செய்யலாம். மேலும் ட்விட்டரில் அவசர செய்திகள், உதவிகள், விளம்பரங்கள் போன்றவையும் அதிகளவில் பகிரப்படுகின்றன.
Sep 24, 2013
Sep 10, 2013
ப்ளாக்கர் பதிவுகளை தானாக கூகிள் ப்ளஸ் இல் பகிர
6 Comments
பதிவுகளை பல வாசகர்களிடம் கொண்டு சேர Twitter, Facebook, Google Plus போன்ற சமூக வலைத்தளங்கள் உதவி செய்கின்றன. ப்ளாக்கரில் பதிவெழுதி விட்டு இவற்றில் ஒவ்வொன்றாக கிளிக் செய்து பகிர்வதற்கு சிறிது நேரமாகலாம். இதனால் தானாக பதிவுகள் சமூக தளங்களில் பகிரப்பட்டு விடுமாறு வசதியைத் தரும் தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். கூகிள் ப்ளசில் மட்டும் தானாக பகிருமாறு செய்ய முடியாது. இப்போது இதனை கூகிள் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
முதலில் நீங்கள் ப்ளாக்கர் ப்ரோபைல் பயன்படுத்தி வந்தால் கூகிள்+ ப்ரொபைலுக்கு மாறி விடுங்கள். இதற்கு Blogger Dashboard இல் உங்கள் ப்ளாக்கை கிளிக் செய்தால் Overview பகுதி வரும். அதில் இடதுபுற மெனுவில் Google+ சென்று Get Started -> Switch Now கிளிக் செய்து மாறிக்கொள்ளவும்.
மறுபடியும் ப்ளாக்கர் டாஷ்போர்டின் இடதுபக்க மெனுவில் Google+ என்பதை கிளிக் செய்யவும். அங்கே உங்களின் கூகிள் ப்ளஸ் புரோபைல் மற்றும் கூகிள்+ பக்கங்கள் காட்டப்படும். எதில் உங்கள் பதிவுகள் தானாக பகிர வேண்டுமோ அதனைக் கிளிக் செய்யவும். (உதாரணமாக எனது பொன்மலர் பக்கம் Page ஐ நான் தேர்வு செய்தேன்)
பின்னர் அருகில் உள்ள ”Automatically share after posting” என்ற பெட்டியில் டிக் செய்யவும். இல்லை எனக்கு இந்த வசதி வேண்டாம், ஒவ்வொரு முறையும் பதிவெழுதிய பின்னர் கேட்கட்டும் எனில் “Prompt to share after posting" என்பதில் டிக் செய்து கொள்ளவும்.
அவ்வளவு தான் இனி நீங்கள் பதிவெழுதி முடித்தவுடன் தானாக பதிவுகள் கூகிள் ப்ளசில் பகிரப்படும். மேலும் நீங்கள் Google+ Comments பயன்படுத்தி வந்தால் அதற்கு வரும் பதில்களும் தானாக பதிவின் கீழே தெரியும்.
கூகிள் ப்ளஸ் கமெண்ட் பயன்படுத்த
பிளாக்கர் பதிவுகளை பேஸ்புக்கில் தானாக அப்டேட் செய்ய