Sep 10, 2013

ப்ளாக்கர் பதிவுகளை தானாக கூகிள் ப்ளஸ் இல் பகிர

பதிவுகளை பல வாசகர்களிடம் கொண்டு சேர Twitter, Facebook, Google Plus போன்ற சமூக வலைத்தளங்கள் உதவி செய்கின்றன. ப்ளாக்கரில் பதிவெழுதி விட்டு இவற்றில் ஒவ்வொன்றாக கிளிக் செய்து பகிர்வதற்கு சிறிது நேரமாகலாம். இதனால் தானாக பதிவுகள் சமூக தளங்களில் பகிரப்பட்டு விடுமாறு வசதியைத் தரும் தளங்களைப் பயன்படுத்தி வருகின்றனர். கூகிள் ப்ளசில் மட்டும் தானாக பகிருமாறு செய்ய முடியாது. இப்போது இதனை கூகிள் அறிமுகப்படுத்தியிருக்கிறது.
share-blogger-posts-to-google-plus-automatically-2
முதலில் நீங்கள் ப்ளாக்கர் ப்ரோபைல் பயன்படுத்தி வந்தால் கூகிள்+ ப்ரொபைலுக்கு மாறி விடுங்கள். இதற்கு Blogger Dashboard இல் உங்கள் ப்ளாக்கை கிளிக் செய்தால் Overview பகுதி வரும். அதில் இடதுபுற மெனுவில் Google+ சென்று Get Started -> Switch Now கிளிக் செய்து மாறிக்கொள்ளவும்.

மறுபடியும் ப்ளாக்கர் டாஷ்போர்டின் இடதுபக்க மெனுவில் Google+ என்பதை கிளிக் செய்யவும். அங்கே உங்களின் கூகிள் ப்ளஸ் புரோபைல் மற்றும் கூகிள்+ பக்கங்கள் காட்டப்படும். எதில் உங்கள் பதிவுகள் தானாக பகிர வேண்டுமோ அதனைக் கிளிக் செய்யவும். (உதாரணமாக எனது பொன்மலர் பக்கம் Page ஐ நான் தேர்வு செய்தேன்)

share-blogger-posts-to-google-plus-automatically-1

பின்னர் அருகில் உள்ள ”Automatically share after posting”  என்ற பெட்டியில் டிக் செய்யவும். இல்லை எனக்கு இந்த வசதி வேண்டாம், ஒவ்வொரு முறையும் பதிவெழுதிய பின்னர் கேட்கட்டும் எனில் “Prompt to share after posting" என்பதில் டிக் செய்து கொள்ளவும்.

அவ்வளவு தான் இனி நீங்கள் பதிவெழுதி முடித்தவுடன் தானாக பதிவுகள் கூகிள் ப்ளசில் பகிரப்படும். மேலும் நீங்கள் Google+ Comments பயன்படுத்தி வந்தால் அதற்கு வரும் பதில்களும் தானாக பதிவின் கீழே தெரியும்.

கூகிள் ப்ளஸ் கமெண்ட் பயன்படுத்த

பிளாக்கர் பதிவுகளை பேஸ்புக்கில் தானாக அப்டேட் செய்ய


6 comments:

  1. blogger_logo_round_35

    நல்லதொரு வசதி!

    சமீபத்தில் தான் இதைப்பற்றி தேடினேன்....கிடைக்காததால் hootsuite இனை பயன்படுத்தி இதை செய்துவிட்டேன்.....தற்போது இந்த வசதியை Google தந்து இருப்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.....



    ReplyDelete
  2. blogger_logo_round_35
  3. baby_sweet

    இதே செய்தியைத்தான் பாசித்தும் பகிர்ந்துள்ளார்,

    ReplyDelete
  4. blogger_logo_round_35

    இன்று முதல் நானும் பயன்படுத்த ஆரம்பித்து விட்டேன். நன்றி!

    ReplyDelete
  5. blogger_logo_round_35

    நல்ல வசதியை அறிமுகம் செய்து நல்ல செய்தி தந்ததற்கு நன்றி !

    ReplyDelete
  6. blogger_logo_round_35

    இன்று முதல் நானும் பயன் படுத்திகொண்டேன், பலருக்கும் பயன்படும். பகிர்வுக்கு நன்றி........

    ReplyDelete