Oct 5, 2013

ப்ளாக்கர் பதிவில் சமூக வலைத்தளங்களில் பகிரும் Status களை இணைக்க

இணையத்தில் முண்ணணி சமூக வலைத்தளங்களான Facebook, Twitter, Google Plus போன்றவற்றில் பல தகவல்கள் பகிர்ந்து கொள்ளப்படுகின்றன. இப்படி பகிரப்படும் செய்திகளை (Status) ப்ளாக்கர் பதிவுகளில் Screenshot எடுக்காமல் நேரடியாக இணைத்து காட்ட முடியும். ப்ளாக் வாசகர்களும் நமது பதிவிலிருந்தே குறிப்பிட்ட Status க்கு Like, Comment, Share, Retweet, +1 போன்ற வேலைகளை செய்ய முடியும்.
Facebook, Google+ தளங்களில் Public ஆக பகிரப்பட்ட பகிர்வுகளை மட்டும் பயன்படுத்த முடியும். குறிப்பிட்ட நண்பர்களுக்கு / வட்டங்களில் உள்ளவர்க்கு மட்டும் பகிரப்பட்டதை இணைக்க முடியாது.

1. Facebook Status களை ப்ளாக்கர் பதிவில் இணைக்க

பேஸ்புக் பகிர்வுகளில் வலது ஓரத்தில் அம்புக்குறி இருக்கும். அதை கிளிக் செய்து மெனுவில் Embed Post என்பதை கிளிக் செய்யவும். இப்போது பதிவில் Embed செய்வதற்கான நிரல்வரிகளும் அது பதிவில் எப்படி தோன்றும் என்று Preview காட்டப்படும்.


அதனைக் காப்பி செய்து Blogger இல் பதிவெழுதும் போது Edit Html இல் சென்று பேஸ்ட் செய்து பதிவினை Publish செய்யுங்கள். அவ்வளவு தான்.

இந்த பதிவில் இணைக்கப்பட்ட Facebook Posts Live Example:
2. Twitter Tweet களை பதிவில் இணைக்க

நீங்கள் பதிவில் சேர்க்க விரும்பும் ட்விட் மீது மவுசை கொண்டு சென்றால் More என்ற option இருக்கும். அதனைக் கிளிக் செய்து Embed Post என்பதை கிளிக் செய்தால் HTML Embed Code மற்றும் Preview கிடைக்கும். மேலே சொன்னபடி நிரலை காப்பி செய்து பதிவில் சேர்க்கவும்.

இந்த பதிவில் இணைக்கப்பட்ட Twitter Live Example:

3. Google Plus Share களை பதிவில் இணைக்க

கூகிள் ப்ளஸ் தளத்தில் பொதுவாக (Public) பகிரப்பட்ட நீங்கள் விரும்பும் பகிர்வின் மீது மவுசைக் கொண்டு சென்றால் வலது ஒரத்தில் அம்புக்குறி ஒன்று இருக்கும். அதைக் கிளிக் செய்தால் விரியும் மெனுவில் Embed Post என்பதைக் கிளிக் செய்யவும்.  நிரல் வரிகளை காப்பி செய்து ப்ளாக் பதிவில் Edit Html சென்று பேஸ்ட் செய்து விடவும். மேலும் அறிய How to Embed Google+ posts

 இந்த பதிவில் இணைக்கப்பட்ட Google+ Posts Live Example:
If you like this post, Please Share and Comment below...:-)

6 comments: