Dec 17, 2013

கூகிள் ப்ளஸின் கிறிஸ்துமஸ் சிறப்பு வசதிகள் - Auto Awesome Effects

கூகிள் ப்ளஸில் புகைப்படங்களை ஏற்றிப் பகிரும் போது தானாகவே சில புகைப்படங்களுக்கு குறிப்பிட்ட ஸ்பெஷல் எபெக்ட் (Special Effects) சேர்க்கப்படுவதை Auto Awesome Effects என்று சொல்வார்கள். தற்போது கிறிஸ்துமஸ் பண்டிகை மற்றும் அதையொட்டிய விடுமுறைகள் வருவதால் இரண்டு அட்டகாசமான வசதிகளை இந்த Auto Awesome இல் சேர்த்துள்ளார்கள்.

1. Twinkle Effect – நீங்கள் சேர்க்கும் புகைப்படங்கள், எதாவது விளக்குகள் அல்லது ஒளி பிரகாசமாக மின்னுகின்றவாறு இருந்தால் அந்த புகைப்படத்தில் உண்மையில் ஒளி வருகின்ற மாதிரி அனிமேஷன் சேர்க்கப்படும்.


எடுத்துக்காட்டுக்கு Christmas Tree, Chandelier எனப்படும் அலங்கார விளக்குகள் போன்ற படங்கள்

2. Snow Fall Effect – உங்கள் புகைப்படங்கள் பனிப்பிரதேசங்கள் அல்லது பனி கொட்டுகின்ற மாதிரி எடுக்கப்பட்டிருந்தால் அவற்றில் உண்மையில் பனி கொட்டுகின்ற மாதிரி மாற்றப்படும்.


இந்த இரண்டு அருமையான வசதிகளும் புதிதாக சேர்க்கப்படும் புகைப்படங்களுக்கு மட்டுமே சேர்க்கப்படும். புதிய புகைப்படங்கள் இந்த எபெக்ட்டில் மாற்றப்பட்ட பின் உங்களுக்கு அறிவிப்பு கிடைக்கும்.

Also Read: Winamp ஆடியோ பிளேயர்க்கு 5 மாற்று இலவச மென்பொருள்கள்

கூகிள் ப்ளஸ் ஆண்ட்ராய்ட் புதிய வசதிகள்: - ஆண்ட்ராய்டு வெர்சனிலும் சில புதிய வசதிகள் வந்துள்ளன. இதற்கு நீங்கள் புதிய வெர்சன் Google+ 4.2.4 க்கு அப்டேட் செய்து கொள்ள வேண்டும்.


Auto Snow Effect - நீங்கள் புகைப்படங்களை பார்த்துக் கொண்டிருக்கும் போது மொபைலை ஒரு முறை Shake செய்தாலே Snow Fall Effect இல் மாறிவிடும். மறுபடியும் மொபைலை அசைத்து சேமித்துக் கொள்ளலாம்.


• நீங்கள் எதேனும் பதிவுகளுக்கு +1 பட்டனில் கிளிக் செய்யும் போது Lovely Hearts வடிவங்கள் காட்டப்படும் ( இதுவும் Christmas Holiday Special )

• People, Communities, Photos என அனைத்தையும் ஒரே இடத்தில் தேடிக் கொள்கிற Unified Search box வசதி.

• பல வகையான தலைப்புகளில் What’s Hot பதிவுகளை பார்க்கும் வசதி.

மேலும் நிறைய அழகான Auto Awesome Effect புகைப்படங்களை கூகிள் ப்ளசில் பார்க்கலாம். https://plus.google.com/s/%23AutoAwesome 

Enjoy Christmas ;-))

5 comments:

  1. வணக்கம்
    தகவல் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    ReplyDelete
  2. உங்கள் தகவலுக்கு நன்றி. தொடருங்கள்

    ReplyDelete
  3. கிறிஸ்தும் பண்டிகை கொண்டாட்ட நேரம் நெருங்கி வரும் வேளையில் இப்பதிவு மிக மிக பயனுள்ளதாக இருக்கும். பகிர்வினிற்கு நன்றி.

    தொழில்நுட்பம் தளத்தில் பயனுள்ள பதிவொன்று:

    Wi-Fi மூலம் இன்டர்நெட் யூஸ் பன்றீங்களா? எச்சரிக்கை..!

    ReplyDelete
  4. உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

    மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_17.html) சென்று பார்க்கவும்... நன்றி...

    ReplyDelete
  5. Once Again...

    Visit : http://blogintamil.blogspot.in/2014/02/thalir-suresh-day-6.html

    ReplyDelete