Mar 31, 2014

எக்சலில் பேஸ்புக் பயன்படுத்த ஒரு ட்ரிக்

ஃபேஸ்புக் (Facebook)  பிரபல சமூக வலைத்தளமாக இருப்பதால் பல அலுவலகங்கள், பள்ளி கல்லூரிகள், நிறுவனங்களில் தடை செய்யப்பட்டுள்ளது. ஏனெனில் பலரும் அதிக நேரத்தை அதிலேயே செலவிடுவதால் வேலை பாதிப்பு ஏற்படுகிறது. ஆனாலும் பேஸ்புக் பயன்படுத்துவோர் விடுவதாக இல்லை. இப்போது ஒரு புதிய ட்ரிக் மூலம் MS-Excel இல் பேஸ்புக் பயன்படுத்துவதைப் பார்க்கலாம்.

use facebook in excel sheet

நீங்கள் வேலை பார்க்கும் இடங்களில் தெரியாமல் பேஸ்புக் பயன்படுத்தவும் மற்றவர்களுக்குப் பார்த்தாலும் கண்டறிய முடியாத வசதியை Hardlywork.in எனும் தளம் தருகிறது. இது தோற்றத்தில் ஒரு எக்சல் ஷீட்டில் (MS-Excel Sheet) வேலை செய்வது போன்று காட்சியளிக்கும். ஆனால் இதில் உங்கள் Facebook NewsFeed, Wall, Messages, Likes, Comments என அனைத்தையும் எக்சல் ஷீட்டிலேயே பார்த்துக் கொள்ளலாம்.

use facebook in excel sheet

முதலில் Hardlywork.in தளத்திற்குச் சென்று ” Gimme dem spreadsheets” என்ற பட்டனைக் கிளிக் செய்யவும். பின்னர் உங்கள் Facebook ஐடி / பாஸ்வேர்டு கொடுத்து Login செய்யவும்.

Also Read:  ப்ளாக்கரில் நீளமான விட்ஜெட்களை Scrolling முறையில் வைக்க
 
அடுத்து உங்கள் பேஸ்புக் ப்ரோபைலை இந்த தளம் பயன்படுத்த அனுமதி கேட்கும். Okay பட்டனைக் கிளிக் செய்யுங்கள். இப்போது எக்சல் ஷீட் போன்று தளத்தில் தோன்றும். இதனைப் பயன்படுத்தும் முறைகளைப் பார்ப்போம்.

use facebook in excel sheet

1. மூன்று வகையான Themes உள்ளன. (Mac,Excel 2003 and Excel 2007)
2. நண்பர்களைத் தேட Excel Functions bar இல் அடித்துத் தேடலாம்.
3. உங்களுக்கு வரும் Notification / செய்திகளைக் கிளிக் செய்து பார்க்கலாம்.
4. Load More பட்டன் மூலம் பழைய செய்திகளைப் பார்க்கலாம்.
5. Hover வசதி - செய்திகளுக்கு அருகில் மவுசை வைத்தால் அதிலிருக்கும் படங்கள் / வீடியோக்களை Preview பார்க்கலாம். Likes and Comments எண்களின் அருகே மவுசைக் கொண்டு சென்றால் யாரெல்லாம் செய்திருக்கிறார்கள் என்று பார்க்கலாம்.
6. இது தான் முக்கியமான செயல். யாராவது தீடிரென்று வந்து விட்டால் Space Bar ஐத்தட்டுங்கள். சாதாரண எண்கள், கணக்குகள் நிறைந்த எக்சல் பைலாக தளம் மாறிவிடும்.
7. இந்தத் தளத்திலிருந்து Logout செய்யப் பயன்படும். 

12 comments:

  1. என்னென்ன வழிகள் உள்ளது...!!!

    நன்றி...

    ReplyDelete
  2. பயனுள்ள பதிவு. பகிர்வினிற்கு நன்றி பொன்மலர்.

    ReplyDelete
  3. super trick thnks

    // my blog is

    www.itjayaprakash.blogspot.in //

    ReplyDelete
  4. thanks for your kindly information your great

    ReplyDelete
  5. அலுவலகத்தில் வேலை செய்வதற்கு சலித்து கொள்பவர்கள் நம்மவர்கள் தான், இது வேற சொல்லவும் வேணுமோ ?

    ReplyDelete
  6. அருமையானது. நன்றி பொன்மலர். http://pnaptamil.blogspot.com

    ReplyDelete
  7. அருமையான பதிவு நன்றி

    ReplyDelete