Apr 29, 2009

விசுவல் பேசிக் – DLL கோப்புகளை Register செய்வது எப்படி ?

2 Comments




விசுவல் பேசிக்கில் அதனோடு இணைந்த பல Active X Control கள்
உள்ளன. அவை விசுவல் பேசிக்கை நிறுவும் போதே முறைப்படி
பதிவு
(Register) செய்ய்ப்பட்டு விடும். உதாரணத்திற்கு,

Microsoft Winsock control - mswinsck.ocx
Microsoft Windows common controls -mscomctl.ocx

இது போல பல உள்ளன.


நாம் பயன்பாட்டை மேலும் மெருகேற்ற வெளியில் கிடைக்கும்
சில ActiveX Control களை பயன்படுத்தலாம். ஆனால் அவை நிறுவும் வகையில் இல்லாமல் “.ocx” (OLE Control Extension ) அல்லது “.dll” (Dynamic Link Library ) கோப்புகளாய் கிடைத்தால் நாம் தான் அவற்றை பதிவு செய்ய வேண்டும். இல்லாவிட்டால் அவற்றைப் பயன்படுத்த இயலாது.

Start மெனுவில் RUN சென்று கீழ்க்கண்ட அமைப்பில் தட்ட்ச்சு செய்யவும்.
Regsvr32 file_pathname



(எ.கா)
Regsvr32 c:\vb\pacemultibutton.ocx

கோப்பு சரியாகப்பதிவு செய்யப்பட்டால் ஒரு செய்தி தோன்றும்.




பயனுள்ள இரண்டு ActiveX Control கள்

1.PaceMultiButton.ocx


இது படிவத்தில் ( Form ) உள்ள Command Button களுக்கு பல்வேறு வகையான வடிவமைப்பைத்தருகிறது. ( Mac style, Xp Style, Netscape Style, Java Style). இதன் தரவிறக்கச்சுட்டி

http://www.4shared.com/file/102408583/5d3fd6da/PaceMultiButton.html


இதை regsvr32 மூலம் பதிவு செய்து விட்டு உங்கள் விசுவல் பேசிக்
படிவத்தில் project menu சென்று Components தேர்வு செய்யவும்.
அதில் Controls Tab - இல் Pacemultibutton என்பதை தேர்வு செய்தால் கருவிப்பட்டையில் இணைக்கப்பட்டு விடும். பின் படிவத்தில் Button - ஐ இணைத்து அதன் properties window - வில் Button type என்பதில் உங்களுக்கு விருப்பமானதை தேர்வு செய்து வண்ணமயமாக மாற்றுங்கள்.



2.MenuExtended.dll

இது
Menu வின் வடிவமைப்பை மாற்றித்தருகிறது. ( Gradient Menus,
XP Style, Office XP Style) . இதன் தரவிறக்கச்சுட்டி

http://www.4shared.com/file/102408588/caed0f52/MenuExtended.html


இதை register செய்து விட்டு Project -> References சென்று
Menu Extended என்பதை தேர்வு செய்யுங்கள்.

பின் படிவத்தில் உங்கள் Menu - வை design செய்யுங்கள். அதே
படிவத்தில் ஒரு ImageList ஒன்றை சேர்த்து விட்டு கீழே உள்ள
நிரல் வரிகளை படிவத்தில் இணைத்துவிட்டு F5 கொடுத்து
RUN செய்யவும்.







Private WithEvents MenuEvents As CEvents
Private objMenuEx As cMenuEx

Private Sub Form_Load()
Const MENU_OFFICE_2003 = 3
Dim sFileIni As String
Set MenuEvents = New CEvents
Set objMenuEx = New cMenuEx
sFileIni = App.Path & "\" & Me.Name
Call objMenuEx.Install(Me.hWnd, sFileIni, ImageList1, 3, MenuEvents)
End Sub

Private Sub Form_Unload(Cancel As Integer)
Call objMenuEx.Uninstall(Me.hWnd, ImageList1, MenuEvents)
Set objMenuEx = Nothing
Set MenuEvents = Nothing
End Sub



Call objMenuEx.Install(Me.hWnd, sFileIni, ImageList1, 3, MenuEvents)

இந்த வரியில் உள்ள 3 என்ற எண்ணுக்குப்பதிலாக 0,1,2,3
போன்றவற்றை கொடுத்து மாற்றிப்பாருங்கள்.உங்கள் மெனு அழகாக
காட்சியளிக்கும். மேலும் Menu Extended.dll பற்றி அறிய கீழே உள்ள
வலைப்பக்கத்தில் பாருங்கள்.

http://www.vbcorner.net/



அப்பாடா..... முடித்துவிட்டேன்!பின்னூட்டம் இடுங்கள் நண்பர்களே!


Read More

Apr 26, 2009

உங்கள் மொபைல் போனில் மின்னஞ்சல் அறிவிப்புகளைப்பெறலாம்!

7 Comments
நீங்கள் gmail அல்லது yahoo.co.in மெயில் கணக்கை பயன்படுத்துவராக இருந்தால்,
உங்கள் மொபைல் போனில் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் பற்றிய அறிவிப்பைப் பெறலாம்.



நீங்கள் எங்கிருந்தாலும் உங்களுக்கு வரும் மின்னஞ்சல் அறிவிப்பில்
யார் அனுப்பியது என்றும் மின்னஞ்சலின் பொருளும் (Subject)
மொபைல் போனில் வந்து சேர்ந்து விடும் . நீங்களும் உங்கள் கணக்கில் ( Mail Account) நுழைந்து உடனடியாக பார்த்துக்கொள்ளலாம்.

இந்த தளத்தில் பதிவு செய்யவும் முதலில் .

http://wwwg.way2sms.com/jsp/UserRegistration.jsp


அதில் பெயர், மின்னஞ்சல் , உங்கள் மொபைல் எண் போன்றவற்றை தந்தால்
உங்கள் கைபேசிக்கு ஒரு குறுந்தகவலில் 4 இலக்க சங்கேதே எண் அனுப்பப்படும்.



way2sms கணக்கில்
4 இலக்க சங்கேதே எண் கொடுத்து உள்ளே சென்றால் புதிய
password கேட்கும். அதைக்கொடுத்துவிட்டு Mail என்ற tab - ஐத்தேர்வு செய்தால்
ஒரு புதிய மின்னஞ்சல் கணக்கு உருவாக்க பயனர் சொல் கேட்கும் .

உதாரணம் : example@way2sms.com
நீங்கள் கொடுத்தவுடன் உங்களுக்கான way2sms கணக்கு உருவாக்கப்படும்.

GMail

Gmail பயனராய் இருந்தால் உங்கள் gmail அமைப்புகள் செல்லவும் . அதில்
Forwarding and POP/IMAP என்ற பகுதியில் Forward a copy of incoming mail என்பதில்
தெரிவு செய்து உங்களின் way2sms மின்னஞ்சல் முகவரியைத் தந்து கீழே
keep gmails copy in the inbox என்பதை தேர்வு செய்து சேமித்தால் போதும்.



Yahoo.co.in

உங்கள் yahoo கணக்கில் சென்று options-> Mail options செல்லவும்.
அதில் இடது பக்கம் உள்ள Pop & Forwarding --> Set up or Edit Pop & Forwarding தேர்வு
செய்யவும்.

Forward பகுதியில் உங்கள் way2sms முகவரியைத்தரவும். சேமிக்கவும்.



பின்னர் Way2sms கணக்கில் நுழைந்து Settings பகுதியில் Mail Alert என்பதனை தேர்வு செய்யவும்.
Mobile preference பகுதியில் Alert me whenever கொடுங்கள்.
Time settings - ல் All 7 days & Round the clock கொடுங்கள். சேமியுங்கள்.


இனிமேல் உங்கள் gmail மற்றும் yahoo கணக்கில் வரும் மின்னஞ்சல்கள்
உங்கள் கைபேசியில் அறிவிப்பாய் வந்து சேரும்.


குறிப்பு:

1.இது yahoo.co.in மற்றும் gmail க்கு மட்டுமே பொருந்தும்.
2.இது ஒரு வாரத்திற்கு மட்டுமே செல்லும். மறுபடியும் நீங்கள் உங்கள்
way2sms கணக்கில் நுழைந்து புதுபிக்கவேண்டும்.(Renew)
3.இதில் நீங்கள் இலவசமாக குறுந்தவகலும் (sms) அனுப்பலாம் இந்தியாவிற்குள்.
4.இங்கிருந்தே நீங்கள் உரையாடவும் முடியும் (Chatting)
Read More

Apr 24, 2009

MS-Access கோப்புகளின் கடவுச்சொல்லை மீட்க இலவச மென்பொருள்

சிலர் அக்சஸ் கோப்புகளுக்கு ரகசியச்சொல் ( Password ) அமைத்து வைத்திருப்பார்கள். நாம் அதனை திறக்க முற்பட்டால் ரகசியச்சொல் இன்றி உள்ளே விட மாட்டார் அண்ணன் Microsoft. அதனை எளிதாக மீட்க மென்பொருள் ஒன்று இலவசமாக கிடைக்கிறது. கீழே உள்ள முகவரியிலிருந்து தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

http://www.nirsoft.net/utils/accesspv.html

தரவிறக்கம் செய்யப்பட்ட கோப்பை விரித்து அதில் உள்ள பயன்பாட்டுக்கோப்பை (Application Exe File ) நேரடியாக இயக்கலாம். நிறுவத்தேவையில்லை. ( No Installation )



எளிதாக நீங்கள் திறக்க வேண்டிய கோப்பை இழுத்து Access PassView - வின் பகுதிக்குள் விட்டாலே போதும். அதன் பூட்டைத் திறக்கத் தேவையான சாவியைத்தந்துவிடும்.




நீங்களும் மந்திரம் செய்யுங்கள் உங்கள் நண்பர்களிடம்!

சுட்டி :
http://www.nirsoft.net/utils/accesspv.html
Read More

Apr 8, 2009

எளிய தமிழில் கணினி புத்தகங்கள்

6 Comments
Read More