Sep 8, 2010

Mp3 பாடல்களை வெட்டவும் இணைக்கவும் இலவச மென்பொருள்

நண்பர்கள் சிலர் ஒரு முழு mp3 பாடலில் இருந்து குறிப்பிட்ட வரிகளை மட்டும் வெட்டி எடுத்து பயன்படுத்த விரும்புவார்கள். சில நேரம் குறிப்பிட்ட ஒன்றுக்கு மேற்பட்ட சிறுபாடல்களை இணைத்து முழு பாடலாக மாற்ற விரும்புவார்கள். கல்லூரி நிகழ்ச்சிகளில் ஆடல்பாடல்களில் பல பாடல்களை கோர்வையாக ஒளிபரப்பி நாடகம் போடுவார்கள். இந்த நேரத்தில் நமக்கு உதவும் மென்பொருள் தான் Mp3 Split and Joiner.

இந்த மென்பொருளை வைத்து விரும்பிய இடத்தில வெட்டிக்கொள்ளலாம். வெட்டிய சிறிய பாட்டை செல்போன்களில் ரிங்க்டோனாக ( mobile ringtone ) வைத்துக்கொள்ளலாம். விரும்பிய இசைக்கோர்வைகளை ஒன்றாக இணைத்துக்கொள்ளலாம்.

இதில் எளிதான வகையில் விரைவான நேரத்தில் கட் செய்யலாம். கோப்புகளை இழுத்து ( drog and drop )அதன் விண்டோவில் விட்டு விடலாம். மேலும் ஒரே நேரத்தில் பல கோப்புகளை மாற்றும் Batch Splitting வசதியும் உள்ளது.

இது விண்டோஸ் விஸ்டா மற்றும் விண்டோஸ் 7 இயங்குதளங்களிலும் வேலை செய்யும்.தரவிறக்கச்சுட்டி: http://www.mp3-joiner.net/Files/MJSSetup.exe

7 comments:

  1. நன்றி.

    மேலும் சில நாட்களுக்கு முன் போர்டபிள் டிடிபி சாப்வேர் கொடுத்தீங்களே அதன் சுட்டி வேலை செய்யவில்லை. :(

    போர்ட்டபிள் சாப்ட்வேர்களுக்கு தனி குறிசொல் கொடுத்தால் தேட வசதியாக இருக்கும்.

    தோழன்
    பாலா

    ReplyDelete
  2. மிகவும் பயனுள்ள தகவல், கணினி பற்றிய தகவல்களை தமிழில் தெரிந்து கொள்வது கூடுதல் வசதி. தங்கள் பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  3. நன்று தொடர்ந்து எழுதுங்கள் உங்களை போல எழுத ஆசைப்பட்டு நானும் ஒரு வலைப்பூவை ஆரம்பித்துள்ளேன் நேரமிருந்தால் ஒரு எட்டு வந்து பர்த்துவிட்டு உங்கல் கருத்துக்களையும் சொல்லிவிட்டு போங்கள். www.tnuniversal.blogspot.com

    ReplyDelete
  4. என் போன்ற புதிதாக "வலைபூக்களில்" பூதவர்களுக்கு , மற்றவர்களுக்கும் இதெல்லாம் நல்ல பயனுள்ள தகவல்கள்.. இதனை நாளை நான் இங்கு வராமல் என்ன செய்துகொண்டிருந்தேன்..?

    நல்ல தகவல்களுக்காக மிக்க நன்றி...

    ReplyDelete
  5. Thanks for the sharing..I read your all articles ..all are nice..reading in Tamil..

    ReplyDelete